Published:Updated:

ஃபாரின் பறபற!

க.தனலட்சுமி, படங்கள்: கு.பாலசந்தர்

ஃபாரின் பறபற!

க.தனலட்சுமி, படங்கள்: கு.பாலசந்தர்

Published:Updated:

'ஊட்டிக்குப் போகணும்’, 'கேரளா போகணும்’, 'டார்ஜிலிங் போகணும்...’

- இதெல்லாம் 10, 15 வருஷத்துக்கு முந்தைய கேர்ள்ஸோட டூர் கனவுகள். இப்போ உள்ள கேர்ள்ஸ் எல்லோரும் நெட்டில் தேடி எடுத்து ஒரு சூப்பர் ஃபாரின் ஸ்பாட்டை குறிச்சு வெச்சிருக்காங்க. 'டூர்’, 'புராஜெக்ட்’, 'மேல் படிப்பு’னு காரணங்களையும் அடுக்கி வெச்சிருக்காங்க... இவங்களைப் போல!

''யு.ஜி முடிச்சு டிகிரி சர்டிஃபிகேட் கைக்கு வர்றதுக்கு முன்னயே, கல்யாண சமையலுக்கு ஆர்டர் பண்ணிடுறாங்க. எனக்குக்கூட மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதான்... அவங்ககிட்ட இருந்து எஸ்கேப் ஆக ஃபாரின் கிளம்ப முடிவெடுத்திருக்கேன்!''னு சொல்றாங்க, ராய்ப்பூரில் ஃபேஷன் டெக்னாலஜி முதலாமாண்டு படிக்கும் ஹீனா ஜெயின்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நியூஸிலாந்து... அங்கதான் ஹீனா போகப்போறா! ராஜஸ்தான் வெயிலில் இருந்து எஸ்கேப் ஆகி, அந்த ஜில்ஜில் கிளைமேட்டில், ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை பார்க்கணும். அதுக்கான முயற்சிகளை எல்லாம் தொடர்ந்து எடுத்துட்டே இருக்கணும். அப்படியே ஃபாரின் மாப்பிள்ளைய கல்யாணம் பண்றது... அடுத்த கோல்! என்ன பார்க்கிறீங்க... விட்டா நாங்க எல்லாம் பில்கேட்ஸ் வீட்டுலயே விளக்கேத்துவோம்!''னு வெடிச்சு சிரிக்கிறாங்க ஹீனா!

ஃபாரின் பறபற!

''உலகம் ஃபுல்லா சுத்த ஆசை எனக்கு!''னு கைகள் விரிச்சு சொல்றாங்க, சென்னை, எஸ்.ஆர்.எம் கல்லூரியில் இ.சி.இ இறுதியாண்டு படிக்கும் வைஷாலினி. ''ஃப்ரெண்ட் ஒருத்தி, ஒரு செமஸ்டரை மட்டும் ஸ்வீடன்ல படிச்சுட்டு வந்து கதை சொல்ல, அன்னிக்கே முடிவெடுத்துட்டேன், யு.எஸ். போய் எம்.எஸ் படிக்கணும்னு! எங்க சித்தப்பா கூகுள்ல வேலை பார்க்கிறாங்க. குடும்பத்துல நிறைய பேர் ஃபாரின் செட்டில்டு. அதனால அடுத்த வருஷமே ஃப்ளைட் ஏறிடுவேன். அங்க போய் படிச்சு, ஒரு 2, 3 வருஷம் வேலை பார்த்துட்டு, பெரிய புராஜெக்ட் இன்ஜினீயர் ஆகணும். அப்புறமா இந்தியா திரும்பிடுவேன். என்னதான் உலகம் சுத்தினாலும், அம்மா கை சாப்பாடு போல ஆகுமா?!''னு சென்ட்டிமென்ட்டா முடிக்கிறாங்க வைஷாலினி!

''ஒரு வேர்ல்ட் டூர் அடிக்கணும்!''  - சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்ஸி., மீடியா சயின்ஸ் நான்காம் ஆண்டு படிக்கும் ஜெயப்பிரியாவுக்கு பேசும்போதே கால்களும், மனசும் தரையில் இல்லை.

''மீடியா துறையில் டெக்னாலஜி முன்னேற்றங்கள் என்பது, நம்ம நாட்டை விட மற்ற நாடுகளில் கொட்டிக் கிடக்குது. அதைக் கத்துக்கிறதுதான் என் பயணத்தோட நோக்கம். உலகமே வியந்து பார்க்கிற ஃபிரான்ஸ் நாட்டு டெக்னாலஜியை நம்ம நாட்டுக்கு இம்போர்ட் பண்ணணும். இசை, விவசாயம் எல்லாத்துலயும் புதுப்புது விஷயங்கள் கத்துட்டு வரணும். நீரில் நீச்சலடிக்கும் வெனிஸ் நகரத்தோட அழகான கட்டமைப்பை ஆயுசு முடியுறதுக்குள்ள ஒரு தடவையாவது பார்த்துடணும். அப்புறம்... ஒரு முறை ஃபாரின் டிரிப் அடிச்சுட்டா ஃப்ரெண்ட்ஸ், உறவினர்கள்கிட்ட நம்ம இமேஜும் கூடும்ல!''னு 'அட்ராசக்க’ ஐடியா சொல்றாங்க ஜெயப்பிரியா!

''ஃபார்ம்.டி-னா என்ன கோர்ஸ்னே இங்க யாருக்கும் தெரியல. நான், 'ஃபார்ம்.டி - டாக்டர் ஆஃப் ஃபார்மஸி’னு சொன்னா, 'டி.ஃபார்ம்தானே?’னு கேட்டு கடுப்பு ஏத்தறாங்க மை லார்ட். 'இல்ல... இது பார்மஸி தொடர்பான படிப்பு’னு விளக்கம் சொல்லியே எனர்ஜி கரையுது. இப்படியே இந்த குண்டுச்சட்டியிலே எவ்வளவு நாள்தான் குதிரை ஓட்டறது? அதான் அமெரிக்காவுக்கு போயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்!''னு கண்கள் பிரகாசமாகிற நேஹா, சென்னை, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் நான்காம் ஆண்டு ஃபார்ம்.டி மாணவி.

''இதுவரை துபாய், யு.எஸ்-னு நிறைய நாடுகள் சுத்தியிருக்கேன். ஆனாலும் அமெரிக்காதான் என் ஃபேவரைட். இந்த கோர்ஸ் முடிச்ச என் சீனியர்ஸ் எல்லாருமே இந்தியாவைவிட, அங்கதான் இதுக்கு ஸ்கோப் அதிகம்னு உற்சாகப்படுத்துறாங்க. ஆனாலும் ஒரு பிரச்னை. நேப்லேக்ஸ் எக்ஸாம், டோஃபில், அது இதுனு கிளியர் பண்ணியாகணும். அதுக்காகவே இப்போ 'அக்நோவா’ கிளாஸ் எல்லாம்கூட போயிட்டிருக்கேன். மேற்படிப்புக்கு அமெரிக்கா போன என் அக்கா, இப்போ யு.எஸ்ல ஜாலியா ஆட்டம் போட்டுட்டு இருக்கா. சீக்கிரமே அவகூட நானும் ஜாயின் பண்ணிக்கணும்!''னு குஷியாகிறாங்க நேஹா!

இதுவல்லவோ லட்சியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism