ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200

சபாஷ்... சரியான பதில்!

ஊரிலிருந்து வந்திருந்த உறவுக்கார சிறுவனை, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு அழைத்துப் போயிருந்தேன். அவன் எல்லா பாடத்திலும் 'கிளாஸ் ஃபர்ஸ்ட்’. அதனால் அவனிடம், ''பிள்ளையார்கிட்ட என்னடா வேண்டிக்கிட்டே... தொடர்ந்து நல்ல மார்க் வாங்கணும்னுதானே?!'' என்று நான் கேட்க, அவனோ ''இல்லை... ”என் ஆன்சர் பேப்பரை திருத்துற ஆசிரியருக்கு அந்த சமயத்துல நல்ல மூடை (mood) குடு’'னு வேண்டிக்கிட்டேன்!'' என்றான். அவன் புத்திக் கூர்மையைக் கண்டு வியந்து நின்றேன்.

- சம்பத்குமாரி, திருச்சி

மெட்டி... முட்டி!

அண்மையில் எங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தோம். நாங்கள் அனைவரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவர்கள் வீட்டு சுட்டி பிரணவ், டி.வியை ஆன் செய்தான். அப்போது டி.வி-யில் வந்த சீரியலில் மணப்பெண்ணுக்கு, மணமகன் மெட்டி போடும் காட்சி ஒளிபரப்பாகியது. அதைப் பார்த்த பிரணவ்... ''முதலில் மெட்டி போட வைப்பாங்க... அப்புறம் முட்டி போட வைப்பாங்க' என்று 'பஞ்ச்’ அடித்தவுடன், ஹாலே சிரிப்பால் அதிர்ந்தது.

- தாரகை, கும்பகோணம்

அதிரடி வாண்டு!

என் தம்பி, பெங்களூரில் பெரிய பங்களா கட்டி, கார் வாங்கி, தன் குடும்பத்துடன் வசதியாக இருக்கிறான். ஒருநாள் அவனுடைய ஏழு வயது மகன் ''அப்பா, இந்த வீடு யாருக்கு சொந்தம்?'' என்று கேட்க, என் தம்பியும் விளையாட்டாக ''இது உனக்குத்தான் சொந்தம். ஆனால், நானும் உன் அம்மாவும் போன பிறகுதான் இந்த வீடு உனக்குக் கிடைக்கும்'' என்றான். உடனே அந்த வாண்டு, '’அப்படின்னா, நீங்க அதுவரைக்கும் எனக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் வாடகை கொடுத்துடுங்க' என்றானே பார்க்கலாம்! இன்றைய சுட்டிகள் ரொம்பவே பிராக்டிகலாக திங்க் பண்றாங்க.

- புஷ்பா ரவி, சென்ன-116