பெண்களின் காஸ்மெடிக் உலகில் அவர்களின் நகங்களை அழகுபடுத்துவதற்கான பொருட்கள் பல பல! சுமார் ஒரு லட்சத்துக்கும் மேலான கலர் ஷேட்களில் நெயில் பாலிஷ்கள், அவற்றை மெருகேற்ற ஸ்டார், சம்கி, கோல்டன், சில்வர் துகள்கள், நெயில் பவுடர்கள்... இவையெல்லாம் தவிர, நெயில் ஆர்ட் என வெண்டை விரல்களுக்கான வியாபாரம் ஏராளம்! இவற்றைத் தொடந்து இப்போது நகங்களுக்கான அழகுப் பொருளாக அடுத்து களமிறங்கியிருப்பது, நெயில் டேப் எனப்படும் நெயில் ஸ்ட்ரிப். மிகவும் நுணுக்கமான இந்த நெயில் டேப்கள் தற்போது இளம் பெண்களிடம் ஹாட் ஹிட் அடித்துக்கொண்டிருக்கிறது!

எப்படி உபயோகிப்பது? எப்பவும்போல சிம்பிள்தான்!

பிடித்த நிறத்தில் நெயில் பாலிஷ் ஒன்றை 'பேஸ்’ ஆக பயன்படுத்தி, அதில் நெயில் டேப்பை விருப்பப்படி ஒட்டிவிடுங்கள்... ஒற்றைக் கோடு, இரட்டைக் கோடு, ஜிக்ஜாக், பெருக்கல், கூட்டல், நகங்கள் முழுக்க கோடு என எப்படி வேண்டும் என்றாலும்! ஆனால், டேப்பை ஒட்டிவிட்டு இறுதியில் சாதாரண கத்தரிக்கோலால் வெட்டக்கூடாது. நெயில் டேப் கத்தரிக்கும் பிரத்யேக கத்தரியான கிரேஸி சிசர்ஸில் மட்டுமே வெட்ட வேண்டும். இல்லையேல் ஆசை ஆசையாக வளர்த்த நகமும் கட்டாகும் வாய்ப்பு உண்டு.

நெயில் பாலிஷே இல்லாமல் வெறும் நகங்களில் டார்க் கலர் டேப் ஒட்டினாலும், வித்தியாசமான மாடலாக இருக்கும்!

அழகு சரி, விலை..?

தற்போது பெரிய மால்கள் மற்றும் ஹைஃபை காஸ்மெடிக் ஷாப்களில் மட்டுமே விற்பனைக்கு வந்திருக்கும் இந்த நெயில் டேப்புகள், 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையில் விற்பனையாகின்றன. இதில் வித்தியாசமாக நெயில் லேஸ்களும் அடக்கம். ஆனால், இணையங்களில் ebay, jabong போன்ற முன்னணி ஷாப்பிங் இணையதளங்கள், இந்த நெயில் டேப்பை 70 ரூபாய் முதல் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன.

கி.மு.3000 ஆண்டில் சீனா வின் அரச குடும்பங்களில் தோன்றிய இந்த நக அழகுக் கலை, இப்போது நெயில் டேப் வரை வளர்ந்து வந்திருக்கிறது. அடுத்து என்னவோ!

கேர்ள்ஸ்... கலர்ஃபுல்லா வைக்கலாமா 'ஹேண்ட் ஷேக் சேலஞ்ச்’?!