Published:Updated:

கேர்ள்ஸ் புரொஃபைல்!

அவள் 16தொகுப்பு: க.கவின் பிரியதர்ஷினி, படங்கள்: தே.தீட்ஷித்

கேர்ள்ஸ் புரொஃபைல்!

அவள் 16தொகுப்பு: க.கவின் பிரியதர்ஷினி, படங்கள்: தே.தீட்ஷித்

Published:Updated:

திருச்சி, காவேரி மகளிர் கல்லூரி மாணவிகளின் கலக்கல் புரொஃபைல் இது..!

கல்லூரி மாணவர் தலைவி!

பி.காம்., மூன்றாம் ஆண்டு படிக்கும் ஸ்ருதி, சமீபத்திய இன்டர் காலேஜ் நிகழ்வில் மேலாண்மை தொடர்பான எல்லா போட்டிகளிலும் (management  events) பரிசுகளை பாக்கெட் பண்ணின புயல்! 'பாண்டிச்சேரியில நடந்த மாணவப் பயிற்சி முகாம் ஒன்றில், ஒரு மோனோ ஆக்ட் காம்படிஷன்... அதுல ரோமியோ - ஜூலியட் கதையோட, நம்ம பூமியை ஒப்பிட்டு நடிச்சேன். 'பெஸ்ட் இண்டிவிஜுவல் அவார்ட்’ கொடுத்தாங்க. இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் நாம யோசிச்சு யோசிச்சு பண்றதாலதான், காலேஜ் பிரசிடென்ட் பதவி கிடைச்சது. ஒரு நல்ல எழுத்தாள ராவும், வெற்றிகரமான தொழில் முனைவோராவும் வரணும் என்பது ஆசை!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலைவி...  வாழ்க!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

தமிழ்ப் பேச்சு, என் மூச்சு!

எம்.எஸ்ஸி., மைக்ரோபயாலஜி படிச்சாலும், சாத்தமை பிரியாவுக்கு தமிழ் மீது அளவில்லா காதல்! ''இதுவரைக்கும் 500க்கும் மேலான பேச்சுப் போட்டிகளில் கலந்துகிட்டு, பரிசுகள் வாங்கியிருக்கேன். 'ஏகலைவன்’, 'நற்றமிழ் நாவலரசி’, 'இளம் பேச்சாளர்’, 'சுப்ரீம் பேச்சாளர்’, 'திருக்குறள் செல்வி’... இதெல்லாம் நான் வாங்கின பட்டங்கள். வைரமுத்து சார் மணி விழாவில, வைகோ சார் கையாலனு நிறைய வி.ஐ.பி-கள்கிட்டேயும் பரிசுகளும் வாங்கியிருக்கேன். அப்துல் கலாம் அய்யா கையால வாங்கின 'பெஸ்ட் தமிழ் ஸ்பீக்கர்’ அவார்டு, பொக்கிஷம் எனக்கு. நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவேன், கவிதை எழுதுவேன். பாரதி பாஸ்கர் மாதிரி சிறந்த பேச்சாளர் ஆகணும் என்பதுதான் என்னோட ஆசை!''

பிரியாவின் தமிழ்ப் பிரியம்!

பிரெசிடென்ட் கையால பிரைஸ்!

ங்கிலத்தில் பேச்சுப் போட்டி, பட்டிமன்றம்னு கலக்கிட்டு இருக்காங்க, எம்.காம்., இரண்டாம் ஆண்டு மாணவி ரூபினா அமீர், ''ஸ்கூல் படிக்கும்போதிலிருந்தே மேடை ஏற ஆரம்பிச்சாச்சு. நிறைய 'பெஸ்ட் ஸ்பீக்கர்’ அவார்ட்ஸ் வாங்கி இருக்கேன். ஹிந்தியும் எனக்கு செல்லம். நேரு யுவகேந்திரா முகாமில் ஹிந்தி புலமைக்காக 'பெஸ்ட் டிரான்ஸ்லேட்டர்’ அவார்டுகூட வாங்கியிருக்கேன். குட்டிப் பசங்களுக்கு ஹிந்தி டியூஷன் எடுத்துட்டு இருக்கேன். போன வருஷம் பிரசிடென்ட் பிரணாப் முகர்ஜி கையால பெஸ்ட் என்.எஸ்.எஸ் வாலன்டியர் அவார்டு வாங்கினது, சந்தோஷ தருணம்!''

டெல்லி சலோ!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

பொண்ணு ஒண்ணு... திறமைகள் பல!

பி.சி.ஏ., மூன்றாம் ஆண்டு படிக்கும் சத்யாமீராவுக்கு விளையாட்டு, கம்ப்யூட்டர், இசைனு பல திறமைகள். ''ஷட்டில், டென்னிஸ்னு இன்டர் காலேஜ் போட்டிகளில் என் பெயர் பிரபலம். விளையாடுறது மட்டும் இல்லாம, எல்லா ஸ்போர்ட்ஸ் பத்தின தகவல்களையும் தெரிஞ்சுக் கிறதுலயும் ஆர்வம் எனக்கு. சமீபத்தில் ஒரு ஸ்போர்ட்ஸ் க்விஸ் போட்டியில் நான்தான் வின்னர். கம்ப்யூட்டர்ல என்ன சந்தேகம்னாலும் என்னைக் கேட்கலாம். அந்தளவுக்கு பிரிச்சு மாட்டிடுவேன். நான் ஒரு கிடாரிஸ்டும் கூட! 'ட்ரினிட்டி போர்டு இன் லண்டன்’ல 'பெஸ்ட் கிடாரிஸ்ட்’ அவார்ட் வாங்கி இருக்கேன்!'        

சத்யாவுக்கு ஜே!

அப்ளாஸ் அள்ளும் அகிலாண்டேஸ்வரி!

தோழிகள் நேயர் விருப்பம் சொன்னா, வீணையில் அழகா வாசிச்சு அப்ளாஸ் அள்றாங்க பி.காம்., இறுதியாண்டு படிக்கும் அகிலாண்டேஸ்வரி. ''மூன்றாவது படிக்கும்போதே வீணை கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். நிறைய கச்சேரிகள் செய்திருக்கேன். வீணையில் நிறைய தேசிய அளவிலான  போட்டிகளில் ஜெயிச்சிருக்கேன். விடுமுறை நாட்களில் வீணை கிளாஸ் எடுக்கிறேன். ஆல் இந்தியா ரேடியோல 6 மாசத்துக்கு ஒரு முறை ரெக்கார்டிங் பண்ணுவேன். கர்னாடக சங்கீதமும் தெரியும். ஏரோ ஸ்பேஸ் படிச்சு, கல்பனா சாவ்லா மாதிரி வர ஆசைப்பட்ட என்னை, வீட்டில் காமர்ஸ் படிக்கச் சொன்னதுதான் என் வாழ்க்கையின் ஒரே டிராஜடி!''

சோக பிஜிஎம் போடுங்கப்பா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism