வெளியானது சச்சின் புக்!

இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கைப் பயணத்தை விளக்கும் 'பிளேயிங் இட் மை வே’ புத்தகம் வெளியாகியுள்ளது. 39 வயதாகும் சச்சின், கடந்த 1989ம் ஆண்டு, தன் 16வது வயதில் இந்திய அணியில் இடம்பெற்றார். கடந்த 23 ஆண்டுகளாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரர், அதிக சதங்கள் என கிரிக்கெட்டில் தனக்கென நீண்டதொரு சாதனைப் பட்டியலை எழுதினார். 'பிளேயிங் இட் மை வே’ புத்தகத்தில் சச்சினின் ஒவ்வொரு சதமும் அடிக்கப்பட்ட இடம், பந்துகளின் எண்ணிக்கை, எந்த அணிக்கு எதிராக அடிக்கப்பட்டது என்பது உள்ளிட்ட பல தகவல்கள் உள்ளன. சச்சின் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களின் விமர்சனங்களும் இடம்பெற்றுள்ளன. வெளியான முதல் நாளே பரபரப்பாக புக் செய்யப்பட்டுவிட்டது புத்தகம்!

சபாஷ் மாஸ்டர்!

வீரர்களுக்கு மரியாதை!

முதலாம் உலகப்போரின் 100வது ஆண்டு நினைவையொட்டி, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் நினைவாக தேசியப் பிரபலங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை 'வாழும் நினைவாலயம்’ அமைப்புடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டிருக்கின்றனர்.

நடிகர் கமல்ஹாசன், விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர், சன்மார்க் தலைவர் டாக்டர் ரெம்மி ரேஞ்சர் என நீளும் பட்டியலில், நடிகர்கள் விவேக், ஒய்.ஜி.மகேந்திரன், 'தலைவாசல்' விஜய், கபீர் பேடி, முகேஷ் கண்ணா, நடிகைகள் லட்சுமி ராய், அபிதா, தீபிகா சிங், தொலைக்காட்சி நகைச்சுவை தொகுப்பாளர்கள் இமான் அண்ணாச்சி, ஆதவன், திண்டுக்கல் சரவணன் என்று பலரும் இணைந் திருப்பதுடன் 'இது போல் பொதுமக்களும் மரக்கன்றுகளை நட முன்வரவேண்டும்!’ என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்!

குரூப் மெசேஜ்!

சிந்திக்க ஒரு செய்தி!

இந்தியாவில் பெண்களுக்குப் போதுமான கழிப்பிட வசதி இல்லை என்பது, நெஞ்சைச் சுடும் உண்மை. இதன்காரணமாக அவர்கள் படும் அவதி கொஞ்சநஞ்சமல்ல. பெரும்பாலான பாலியல் குற்றங் கள், கழிப்பிட வசதி இல்லாத காரணத்தாலும் நடக்கிறது என்று அதிரவைக்கிறது ஓர் ஆய்வறிக்கை. இதையெல்லாம் ஒவ்வொரு இந்தியனையும் ஓங்கி அறைந்து சொல்வது போல, இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது 'கேர்ள் பீஸ் இன் பப்ளிக்' (GIRL PEES IN PUBLIC) எனும் யூடியூப் வீடியோ.

நகர்ப்புறத்தில் வலம் வரும் ஒரு பெண், சிறுநீர் கழிக்க இடம் தேடுவதும், அதற்கு பொதுமக்கள் அவளிடம் சொல்லும் பதில்களையும் நம் பார்வைக்கு வைக்கிறது இந்த வீடியோ. வெளியான ஒரு வாரத்துக்குள் 22 லட்சம் ஹிட் அடித்திருக்கிறது!

பார்க்க: :http://www.youtube.com/watch?v=pR5WNuo23Uk.

தூய்மை இந்தியா!

காந்தி ஜெயந்தியின்போது பிரதமர் மோடி அறிவித்த 'தூய்மை இந்தியா’ திட்டம்தான், இந்தியாவின் சமீபத்திய வைரல். முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரமுகர்கள் என அனைவரும் 'தூய்மை இந்தியா’வில் இணைந்துள்ளனர். ஹைலைட்டாக, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா, அவர் மனைவி அமலா, மகன் நாக சைதன்யா என குடும்பமே இணைந்து, ஒரு குழுவாக குப்பைகளை அகற்றினர். 'தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு, உலகின் மிகத் தூய்மையான நாடு என அழைக்கப்படும் சிங்கப்பூரும் தற்போது கைகொடுக்க முன்வந்துள்ளது!

இந்தியாவின் நல்லரசு ஸ்டெப்!

டிராஃபிக் கிளியர் செய்யும் அம்மா!

உத்தரப்பிரதேச மாநிலம், காஸியாபாத் நகரைச் சேர்ந்தவர், 57 வயதான டோரிஸ் ஃபிரான்சிஸ். இவரை, இந்த ஊரின் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் காலையில் பார்க்கலாம். இங்கே நின்றபடி பல ஆண்டுகளாக டிராஃபிக் கிளியர் செய்வதைக் கடமையாக மேற்கொண்டிருக்கிறார் டோரிஸ். இதன்பின் உள்ள காரணம், நெகிழ்ச்சியானது. இவரின் 17 வயது மகள் சாலை விபத்தில் இந்த இடத்தில் இறந்துவிட, மகளுக்கு நிகழ்ந்த கொடூரம் வேறு எவருக்கும் நிகழ்ந்துவிடக் கூடாதென இந்தச் சேவையில் இறங்கியிருக்கிறார். இவரின் இந்த சேவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது!

அம்மா!