Published:Updated:

"ஓவியங்கள்தான் என் ஆயுதம்!''

சமூக ஓவியர் சுவர்ணலதா

"ஓவியங்கள்தான் என் ஆயுதம்!''

சமூக ஓவியர் சுவர்ணலதா

Published:Updated:

'இந்த சமூகம், பெண் களுக்குத் தரும் வலியையும், வேதனையையும் பதிவுசெய்ய, இந்த சாதா ரண பெண்ணுக்குக் கிடைத்த ஆயுதம்... பெயின்ட்டும், பிரஷ்ஷும். மனதின் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வெளிப் படுத்த முடியாத என்னை, இந்த சமுதாயத்தோடு இணைக்கும் மௌனமொழியும் இந்த ஓவியங்கள்தான்!''

- தன் விரல்களில் பிறந்த ஓவியங்களைத் தடவியவாறே பேசுகிறார் சுவர்ணலதா.

இயற்கை எழில் கொஞ்சும் ஆறுகள், மலைகள், பறவைகள், இவற்றோடு அழகுப் பதுமைகளாக பெண்களின் ஓவியங்கள்... என்று நின்றுவிடாமல், பெண்களின் மீதான பாலியல் வன்முறைகள், அமில வீச்சு, உள்ளத்தின் ஆழத்தில் அவர்கள் உணரும் வலி, உள்ளுக்குள்ளேயே புதைக்கப்பட்ட ஆசைகள் என சுவர்ணலதாவின் ஓவியங்கள்... ஒரு பெண்ணால் ஆணிடம் சொல்ல முடியாத எந்த வார்த்தைகளையும் பேசிவிடக்கூடியவை. பார்வையாளர்கள் மனதிலும் பெண் கொடுமைக்கு எதிராகப் போராடும் விதையை விதைப்பவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குடும்பத் தலைவியாகவும், தாயாகவும் இருந்துகொண்டு தனக்கான குடும்பச் சுமை களோடு, பெண்களின் வலிகளையும் சுமந்து வரைந்த தூரிகைக்குச் சொந்தக்காரரான சுவர்ணலதாவிடம் பேசினோம்.

"ஓவியங்கள்தான் என் ஆயுதம்!''

'பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை என் ஓவியங்கள் மூலமா இந்த சமூகத்துக்கு அழுந்தச் சொல்லி, ஒவ்வொரு பெண்ணும் தனக்கான பாதுகாப்பு, மரியாதையுடன் நடத்தப்படணும்னு வலியுறுத்தறதுக்காகவே இந்த அக்டோபர்ல 'நிர்பயா’ங்கற தலைப்புல ஒரு ஓவியக் கண்காட்சியை சென்னையில நடத்தினேன். 'நிர்பயா’ங்கிற இந்த வார்த்தை ஒண்ணே போதும்... பெண்களுக்கான சமுதாய வலிகளை உணர்த்த!'

- வளர்ந்து வரும் சமூக ஓவியர் சுவர்ணலதாவின் சிந்தனையில் வேகம்.                

''தமிழ்நாட்டுல இருந்து சிங்கப்பூருக்குப் போய் செட்டிலான குடும்பம் என் னோடது. என் தாத்தாவுக்கு பெயின்ட்டிங்ஸ் வாங்குறதுனா ரொம்ப இஷ்டம். அதுதான் எனக்குள்ள வரையறதுக்கான ஆர்வத்தை அதிகமாக்குச்சு. எம்.ஏ., ஜர்னலிசம் முடிச்ச கையோட கல்யாணம் பண்ணிக்கிட்டு சென்னைக்கு வந்தேன். ரொம்ப நாளா எனக்குக் குழந்தை இல்லை. ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செஞ்ச அப்பா, அம்மா, தம்பினு மொத்தக் குடும்பத்தையும் கல்யாணத்துக்கு முன்னயே விபத்துல பறிகொடுத்துட்டவ நான். ஆறுதல் சொல்லக் கூட யாருமே இல்லாத எனக்கு, கணவரோட சேர்த்து ஆறுதலா இருந்தது நான் வரைந்த இந்த ஓவியங்கள்தான்'' என்றவருக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறான்.

"ஓவியங்கள்தான் என் ஆயுதம்!''

''மொத்த இந்தியாவையும் தலைகுனிய வெச்ச, டெல்லி மாணவி நிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமைதான், பெண்களுக்கு நடக்கும் இந்த அநீதிகளுக்கு எதிரா ஏதாவது செய்யணுங்கிற சிந்தனை எனக்குள்ள தலைதூக்க காரணமா இருந்துச்சு. இந்தக் கொடுமைக்கு எதிரா குரல் கொடுக்கறதுக்காக டெல்லியில இரவெல்லாம் கொட்டுற பனியில போராடிய அந்தப் பொண்ணுங்க மனதில் எவ்ளோ வலி இருந்ததுங்கறத நேர்ல பார்த்தேன். அந்தக் காயத்தோட தழும்பு மனசைவிட்டு ஆறுறதுக்கு முன்னயே வினோதினி, வித்யா மீதான ஆசிட் வீச்சு

"ஓவியங்கள்தான் என் ஆயுதம்!''

தாக்குதல்கள். மிருகமாகிப் போன மனிதர்கள் மீதான என் ஆதங்கத்தை எப்படி வெளிப்படுத்தறதுனு தெரியல. அப்போதான் கணவர் சந்திரசேகர், 'உனக்கு நல்லா வரைய வரும். ஆயிரம் வார்த்தைகளைக்கூட ஒரேயொரு ஓவியத்தால சொல்லிட முடியும். உன் மனசை உன்னோட ஓவியங்கள் மூலமா வெளிப்படுத்து!’னு சொல்லி, 'ரவிவர்மா கேலரி’யை ஆரம்பிச்சு கொடுத்தார்'', என்றவர் கையில் எடுத்த ஆயுதம்... 'போஸ்ட் மார்டனிசம்’ என்னும் ஓவியக் கலை.

மரணத்துக்குப் பின் மருத்துவர்கள் ஒவ்வொரு உறுப்பையும் தனித்தனியாக எடுத்து ஆராய்ச்சி செய்வதுபோல், ஒவ்வொரு உறுப்பையும் தனித்தனியாக வரைவதுதான் இந்த 'போஸ்ட் மார்டனிசம்’ கலையின் சிறப்பம்சம். இதன் மூலமாக ஒரு பெண்ணின் தலை முதல் கால் வரை அவள் படும் துயரங்களை சிறிதும் ஆபாசம் இல்லாமல் கலைநயத்துடன் சுவர்ணலதா வரைந்திருக்கும் ஓவியங்கள் ஒவ்வொன்றும் கல் மனதையும் கரைப்பவை.

பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை மையமாக வைத்து இதுவரை மூன்று ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ள சுவர்ணலதா, இந்திய மகளிர் வட்டத்தின் சார்பாக 'மிகச்சிறந்த சாதனைப் பெண்’ விருது பெற்றிருப்பதுடன், தன் 'ரவிவர்மா கேலரி’யின் மூலம் ஆதரவற்ற பெண்களுக்கான கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கும் உதவி வருகிறார்.

''இந்த ஓவியங்களைப் பார்க்கும் ஆண்களில் ஒருவர், பெண்களுக்காக சிந்தும் ஒரு சொட்டு கண்ணீர்கூட ஒட்டுமொத்த பெண்களுக்கான வெற்றிதான்!'' எனும் சுவர்ணலதாவின் கண்களில் அதே வேகம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism