Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

ஓவியங்கள்: சேகர்

குட்டீஸ் குறும்பு!

ஓவியங்கள்: சேகர்

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு!

 200

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குட்டீஸ் குறும்பு!

'பர்மிஷன் முக்கியம்!’

நான், எல்.கே.ஜி குழந்தைகளுக்கு ஆசிரியராக இருந்த சமயம், 'அவன் என் பென்சிலை எடுத்துட்டான், 'இவன் ரப்பரை எடுத்துட்டான்' என்று கம்ப்ளெயின்ட் கூறுவார்கள். அதனால் "யாரும் யாருடைய பொருளையும் அவங்களோட பர்மிஷன் இல்லாமல் எடுக்கக்கூடாது'' கூறியிருந்தேன். எங்கள் கிளாஸில் மணிகண்டன் என்ற துறுதுறு வாண்டு இருந்தான். ஒருநாள் அவன் அழுதுகொண்டு இருந்த சமயம், பிரின்ஸிபால் மேடம் கிளாஸில் நுழைந்தார். அவன் அருகே சென்று காரணம் கேட்டார். அவன் கையை நீட்டி என்னைக் காண்பித்தான். "பர்மிஷன் இல்லாம அடுத்தவங்க பொருளை யாரும் எடுக்கக் கூடாதுனு சொல்லிட்டு,

குட்டீஸ் குறும்பு!

நான் விரல் சூப்பிட்டு இருந்தப்ப, என் பர்மிஷன் இல்லாமல் மிஸ் விரலை எடுத்துவிட்டுட்டாங்க!'' என்றதும் நானும், பிரின்ஸிபாலும் விழுந்துவிழுந்து சிரித்தோம்.

- ச.செல்வியா, காரைக்கால்

"டிரைவிங்ல இருக்கேன்!’

தீபாவளி நேரத்தில் எங்கள் வீட்டுக் குட்டி செல்போன் வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது வீட்டுக்கு வந்திருந்த உறவினர், அவனுக்கு தீபாவளி  வாழ்த்து சொல்ல விரும்பினார். '"உன் சித்திக்கு உன்கூட பேசணுமாம்... போன்ல பேசு'' என்றேன். '’இப்போ பேசக்கூடாது... டிரைவிங்ல இருக்கேன்'' என்றான். 'என்னடா இவன் டிரைவிங்னு

குட்டீஸ் குறும்பு!

சொல்றானே’ என்று பார்த்தால்... செல்போனில் கார்ரேஸிங் கேமில் இருக்கிறான்!

- ஜானகி ரங்கநாதன், சென்னை- 4

தாடி ரகசியம்!

ங்கள் பக்கத்து வீட்டு வாண்டு, என் மாமனாரிடம் ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டிருப்பான். ஒருமுறை "ஏன் தாத்தா உங்க முடி வெள்ளையாகவும், தாடி மட்டும் கறுப்பாகவும் இருக்கு'' என அவன் கேட்க, என் மாமனார் திருதிருவென விழித்தார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த எங்க வீட்டு வாண்டு கமலேஷ், "தாத்தா பொறந்ததிலிருந்தே தலைமுடி இருக்கிறதால வயசாகி வெள்ளையாயிடுச்சு. தாடியை அப்பப்போ ஷேவ் பண்ணி புதுசா முளைக்குதுல்ல... அதான் கறுப்பா இருக்கு'' என்றான். அவன் பதிலைக் கேட்டு அனைவருமே அசந்து போனோம்.

- ஏ.ஜோதி, புதுக்கோட்டை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism