Published:Updated:

கேர்ள்ஸ் புரொஃபைல்!

தொகுப்பு: ம.மாரிமுத்து, படங்கள்: வீ.சக்தி அருணகிரி

கேர்ள்ஸ் புரொஃபைல்!

தொகுப்பு: ம.மாரிமுத்து, படங்கள்: வீ.சக்தி அருணகிரி

Published:Updated:

தேனி, அரசு மருத்துவக்கல்லூரி மாணவிகளின் கலர்ஃபுல் புரொஃபைல் இது..!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

கேரளத்துச் சாரலும் தமிழ்த் தூறலும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படிக்கும் கௌரியும், அபர்ணாராஜும் க்விஸ் மேதாவிகள். புதுச்சேரியில் நடந்த தென்னிந்திய அளவிலான 184 கல்லூரிகள் கலந்துகொண்ட மெடிக்கல் ஓரியன்டட் க்விஸ் போட்டியில் 5-வது இடம், திருச்சி மெடிக்கல் காலேஜில் நடந்த கண் சம்பந்தமான க்விஸில் நான்காம் இடம், தென்னிந்திய அளவில் கோவை, பி.எஸ்.ஜி கல்லூரியில் நடந்த க்விஸில் மூன்றாம் இடம் என கலக்கி வருகின்றனர். ‘‘அதுமட்டுமில்ல... மைக்ரோபயாலஜியில் கௌரிக்கு எக்ஸலன்ஸ் மெடல். லைப்ரரி செகரட்டரியும் அவதான்!’’ என்று அபர்ணா சொல்ல, ‘‘மலையாளியான அபர்ணாவுக்கு நான் தமிழ் சொல்லிக் கொடுத்தேன். இப்போ அவ தமிழில் கவிதை எல்லாம் எழுதுறா. அவளுக்கு தமிழில் பிடிச்ச எழுத்தாளர், வைரமுத்து சார்!’’ என்கிறார் கௌரி!

இப்படியே முல்லைப் பெரியாறு பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வெச்சுடுங்க!

மலைக்காற்று வந்து தமிழ் பாடுதோ!

எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படிக்கும் சிண்டு தாமஸுக்கு சொந்த ஊர் எர்ணாகுளம். ஆனாலும் அழகா பாடுறாங்க... தமிழ் சினிமா பாடல்களை! ‘‘காலேஜில் சேர்ந்தவுடன் முதன் முதலில் மேடையில் பாடின ‘கண்ணாளனே’ பாட்டைக் கேட்டு மெல்ட்டான எங்க காலேஜ், எனக்கு ‘நைட்டிங்கேல் ஆஃப் ஜி.டி.எம்.சி (Government Theni Medical College)’ பட்டத்தை அன்னிக்கே கொடுத்துட்டாங்க. ஸ்கூல் படிக்கும்போதிருந்தே ஏசியாநெட், கைரளி, ஜீவன் டி.வி-யில் எல்லாம் பாடியிருக்கேன். எங்க கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நான் பாடினதைக் கேட்ட இயக்குநர் பிரபு சாலமன் சார், தேனியில அடுத்து நடக்க இருக்கிற அவரோட ஃபிலிம் புரொமோ நிகழ்ச்சியில் இனாகுரேஷன் சாங் பாட எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கார். பாட்டு மட்டுமில்ல... இன்டர் காலேஜ் ஈவன்ட்களில் பெஸ்ட் டான்ஸர் அவார்டும் நமக்குதான். சோப் கார்விங் மற்றும் டிராயிங்லயும் நிறையப் பரிசுகள் வாங்கியிருக்கேன். எங்க காலேஜோட பிளட் பேங்க் செகரட்டரி நான்தான்!’’

கேர்ள்ஸ் புரொஃபைல்!

பாட்டுப் பாடியே நோயைக் குணப்படுத்துவீங்களா டாக்டர்..?!

ஆல் இன் ஆல் அம்மணி!

எம்.பி.பி.எஸ் மூன்றாம் ஆண்டு படிக்கும் கீர்த்திகாவை, காலேஜில் ‘ஆல் இன் ஆல் அம்மணி!’ என்கிறார்கள். ‘‘இன்டர் காலேஜ், இன்ட்ரா காலேஜ்னு எல்லா போட்டிகளிலும் பரிசை பாக்கெட் பண்ணிடுவேன். பாட்மின்டன்ல இன்டர் காலேஜ் லெவல்ல நடந்த டபிள்ஸ் பிரிவுல சாம்பியன். கேரம்ல சாம்பியன். குரூப் டான்ஸ்ல நான் ஆடின டீம்தான் ரெண்டு வருஷமா சாம்பியன். சங்கீதம் பெருசா கத்துக்கலைனாலும், ‘கண்கள் நீயே...’ பாட்டுப் பாடி ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கிட்டேன். அப்புறம்... காலேஜ் ஜெனரல் செக்கரட்டரியும் நான்தான்!’’

தலைவி!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

டான்ஸ் மச்சி டான்ஸ்!

பரதம், வெஸ்டர்ன், ஃபோக் என்று எல்லா ஏரியாவிலும் ரண்டக்க ரண்டக்க ஆடுகிறார் எம்.பி.பி.எஸ் மூன்றாம் ஆண்டு படிக்கும் மீனா. ‘‘நாலு வயசுல இருந்தே பரதம் கத்துக்கிறேன். என்னோட குரு... மதுரை முரளீதரன் - சித்ரா முரளீதரன். நாலு வயசுல ராஜ் டி.வி-யில் ஒரு நடன

கேர்ள்ஸ் புரொஃபைல்!

நிகழ்ச்சி, அஞ்சு வயசுல சன் டி.வி-யில ‘மஸ்தானா மஸ்தானா’, அப்புறம் ‘தில்லானா தில்லானா’, ஜெயா டி.வி-யில 2006-ம் வருஷம் ‘தக திமி தா’னு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கியிருக்கேன். 2006-ல் அரங்கேற்றம். ‘காவியக் கலைஞர் 84’, ‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சிகளில் ஆடியது மறக்க முடியாத அனுபவம். ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் மற்றும் கோவையில் நான் ஆடிய ‘சிவ தாண்டவம்’ பெர்ஃபார்மன்ஸுக்கு நிறைய பாராட்டுகள். சமீபத்தில் திருநெல்வேலி மெடிக்கல் காலேஜில் நடந்த கல்சுரல்ஸில் கிளாஸிக்கல் சோலோ, வெஸ்டர்ன் சோலோ ரெண்டுலயுமே முதல் பரிசு எனக்குக்குதான்!’’

டான்ஸர் டாக்டர்!

தமிழ் மருத்துவம்!

எம்.பி.பி.எஸ் இன்டர்ன்ஷிப்பில் இருக்கும் நிவேதா ராஜ் கவிதை, கட்டுரை, நிகழ்ச்சித் தொகுப்புனு கலக்கிட்டு வரும் பைந்தமிழ் பேசும் மருத்துவர். ‘‘எங்க காலேஜ் தமிழ் மன்றச் செயலாளரா இருந்திருக்கேன். நிறையப் பட்டிமன்றங்களில் எங்க டீமை ஜெயிக்க வெச்சிருக்கேன். தேனியில் நடக்கிற பெண் சிசுக்கொலைகள் பற்றி ‘மத்தாப்பு’ என்ற குறும்படமும், குடிப்பழக்கம் ஒரு குடும்பத்தை எப்படி சிதைக்குது என்பதைப் பற்றி ‘முற்றுப்புள்ளி’ என்ற குறும்படமும் என் ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து எடுத்திருக்கேன். கவிதையும் எழுதுவேன். எங்க காலேஜ் சினி க்விஸ் போட்டியில தொடர்ந்து அஞ்சு வருஷமா நான் ஜெயிச்சது பெரிய விஷயமில்லை. ஆனா, இந்த வருஷம் அதுக்கான பரிசை என் ஃபேவரைட் எழுத்தாளர், ‘குக்கூ’ பட இயக்குர் ‘வட்டியும் முதலும்’ ராஜு முருகன் சார்கிட்ட வாங்கினதுதான் ஹைலைட். டாக்டர் ஆனாலும் பகுதி நேரப் பேச்சாளர், எழுத்தாளரா வரணும். தற்கொலை எண்ணம் இருக்கிறவங்களை அதிலிருந்து மீட்கும் ஃப்ரீ கவுன்சலிங் கொடுக்கணும்!’’

நன்றி மருத்துவர் அம்மா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism