Published:Updated:

வழிகாட்டும் ஒலி!

கே.அபிநயா, படங்கள்: எம்.விஜயகுமார், கு.கார்முகில்வண்ணன்

வழிகாட்டும் ஒலி!

கே.அபிநயா, படங்கள்: எம்.விஜயகுமார், கு.கார்முகில்வண்ணன்

Published:Updated:
வழிகாட்டும் ஒலி!

பத்து ரூபாய் முதலீடு... பல நூறு ரூபாய் லாபம்!

‘‘ஆறாவது படிக்கும்போது, எனக்குத் தெரிஞ்ச ஆன்ட்டி ஒருத்தவங்களுக்கு மெஹந்தி போட்டுவிட்டேன். அவங்க பியூட்டி பார்லர் போனப்போ, அந்த பியூட்டிஷியன்கிட்ட, ‘ஒரு சின்னப் பொண்ணு போட்டுவிட்ட மெஹந்தியைப் பாருங்க’னு காட்டியிருக்காங்க. அசந்துபோன அந்த பியூட்டிஷியன், என்னைத் தேடி வந்து, தன்னோட பார்லருக்கு வர்ற கஸ்டமர்களுக்கு மெஹந்தி போடச் சொல்லிக் கேட்டாங்க. நானும் செய்தேன். வீட்டிலும் தேடி வர்றவங்களுக்கும் போட்டுவிட்டேன். இப்படி, சின்ன வயசுலயே என் கையில் ஒரு வருமானம் கொடுத்தது, இந்த மெஹந்தி பிசினஸ்!’’ என்று பெருமை பொங்கச் சொல்லும் ஹரிணிஸ்ரீ என்கிற சௌம்யா, இப்போது சென்னையிலிருக்கும் ‘இக்‌ஷா மெஹந்தி ஆர்ட்ஸ்’ உரிமையாளர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ஒரு இடத்துக்கு மெஹந்தி போடப்போனா, அங்க இருக்கிறவங்க கூட நல்லா பழகுவேன். பெரும்பாலும் அது விசேஷ வீடா இருக்கும்கிறதால அவங்களோட சேர்ந்து பாடுவேன், ஆடுவேன். எனக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்துட்டே இருக்க இதுவும் ஒரு காரணம். பியூட்டிஷியன், வால் பெயின்ட்டிங், டாட்டூஸ்னு என் கையில் பல கலைகள் இருந்தாலும், இப்பவும் மெஹந்திதான் மெயின் பிசினஸ். ஒரு கோனோட விலை 10 ரூபாய். ஒரு விசேஷ வீட்டுக்குப் போனா, ஐந்தாயிரம் வரை கூட சம்பாதிச்சுடலாம்’’ எனும் சௌமியா, மெஹந்தி ஆர்ட் தொழிலில் களமிறங்கவும், கலக்கவும் இன்னும் பல யோசனைகளை, டிசம்பர் 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை ‘வழிகாட்டும் ஒலி’யில் பேசுகிறார்!

வழிகாட்டும் ஒலி!

மெஹந்தி பிசினஸில் கைநிறைய சாம்பாதிக்க

என்ற எண்ணுக்கு டயல் பண்ணுங்க.

சிறுதானியம்... பெருவாழ்வு!

சிறுதானிய விற்பனை

''சிறுதானியங்களை மக்கள் தேடி வாங்க ஆரம்பிச்சிருக்கிற காலம் இது. இதையே நம் தொழிலுக்கான வாய்ப்பா பயன்படுத்திக்கலாம். சிறுதானியங்களை கொள்முதல் விலையில் வாங்கி, பேக் செய்து விற்பனை செய்யுங்க. கைப்பக்குவத்தில் கில்லாடினா, அதை சமைத்தும் விற்கலாம்... என்னை மாதிரி!''

- கலகலவென ஆரம்பிக்கிறார், சேலத்தைச் சேர்ந்த கவிதா. 'தமிழ்நாடு குடிசை வாழ்வோர் பெருமன்றம் மற்றும் மஹிளா மிலன்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியான இவர், சிறுதானிய உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்து வரும் சுயதொழில் முனைவோராக வலம் வருகிறார்.

''பெண்களுக்கு பிசினஸ் ஆரம்பிக்கணும்னு ஆசை இருந்தாலும், தயக்கமும் இருக்கும். பெண்களுக்கான தொழில் பயிற்சிகள் நடக்கிற இடங்களுக்குப் போங்க. சிறு தானிய விற்பனை, சிறுதானிய உணவுகள்னு கத்துக்கோங்க. 'பயிற்சிக்குப் போனோம், கத்துக்கிட்டோம், வந்தோம்’னு இருக்காம, பயிற்சிக்கு வந்திருக்கிற மற்ற பெண்கள், பயிற்சியாளர்கள் கிட்ட எல்லாம் போய் பேசுங்க. அப்போதான் குழப்பம், பயம் எல்லாம் விலகி தெளிவும் தைரியமும் கிடைக்கும்.

வழிகாட்டும் ஒலி!

சிறுதானியத்தைப் பொறுத்தவரை தானியமா விற்றாலும் லாபம்தான், சமைத்து விற்றாலும் லாபம்தான். காரணம், அந்தளவுக்கு மக்கள் அதை இப்போ தேட ஆரம்பிச்சிருக்காங்க. கம்பு, தினை, வரகுனு இதையெல்லாம் எந்தளவுக்கு நாம சுவையா, சுத்தமா கொடுக்கிறோமோ, அந்தளவுக்கு நமக்கு வெற்றி. இந்தத் தொழிலைப் பொறுத்தவரை 50 பர்சன்ட் லாபம் பார்க்கலாம்.

கடையை ஆரம்பிக்கும்போது, இடம் பார்த்து ஆரம்பிக்கணும். குடிசைப் பகுதியில த்ரீ ஸ்டார் ஹோட்டல் ஆரம்பிக்கிற மாதிரி ஆயிடக்கூடாது. லாபத்தை மட்டும் குறிக்கோளா வெச்சுக்கக் கூடாது. உணவுப் பொருள் சம்பந்தப்பட்ட தொழில் என்பதால, தரத்தை கோட்டை விட்டா வளர்ச்சி இருக்காது. நேர்மையா இருங்க... நஷ்டம் வராது!'' எனும் கவிதா, சிறுதானிய தொழில் பற்றிய வழிகாட்டல்களை டிசம்பர் 9-ம் தேதி முதல் 15 வரை 'வழிகாட்டும் ஒலி’யில் பேசுகிறார்!

என்ற எண்ணுக்கு போன் போடுங்கள். சிறுதானிய விற்பனை பிசினஸில் வெற்றிக்கொடி நாட்டுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism