Published:Updated:

VIP-யா ஆகிடக்கூடாது!

லோ.இந்து படங்கள்: எம்.உசேன், பா.காளிமுத்து

VIP-யா ஆகிடக்கூடாது!

லோ.இந்து படங்கள்: எம்.உசேன், பா.காளிமுத்து

Published:Updated:
VIP-யா ஆகிடக்கூடாது!

செமஸ்டர் நேரம் இது. தோழிகளுடன் அரட்டை, கல்ச்சுரல்ஸ்னு ஒரு பக்கம் ஜாலியா இருந் தாலும், செமஸ்டர்னு வந்தா முட்டி மோதும் 'யுஜி', 'பிஜி' பொண்ணுங்களோட புலம்பல்ஸுக்கு கொஞ்சம் காது கொடுத்தோம்!

காயத்ரி, எம்.பி.ஏ, கேலக்ஸி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட், சென்னை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பி.காம், ஈஸியா படிச்சுட்டேன். எம்.பி.ஏல அக்கவுன்டன்ஸி இருக்குனு நான் சந்தோஷப்பட்டாலும், எமனா வந்து வாய்ச்சது, ஸ்டாட்டிஸ்டிக்ஸ். ப்பா... முடியல! யுஜி-ல பேப்பரை சும்மா நிரப்பிக் கொடுத்தா போதும். ஆனா, இப்போ அண்ணா பல்கலைக்கழகம்கிறதால, மார்க் எடுக்கறது கஷ்டமப்பா. லோக்கல் ஆத்தர்ஸ் மட்டுமில்லாம, ஃபாரின் ஆத்தர்ஸோட புத்தகங்களை எல்லாம் ரெஃபர் பண்ணி படிக்க வேண்டியதா இருக்கு. எத்தனை ஆத்தர் புக்ஸ் வெச்சி படிச்சாலும், எக்ஸாம் ஹால்ல நாமளே ஒரு ஆத்தர் ஆகிடுவோம்கிறது சூப்பர் டிவிஸ்ட்!''

நிஷா பெலிசிட்டா, எம்.எஸ்ஸி., பயோடெக்னாலஜி, லேடி டோக் கல்லூரி, மதுரை

''பி.எஸ்ஸி., உயிரியல் படிச்ச எனக்கு, ஒரு நல்ல வேலை கிடைச்சு வெளிநாடு போகணும்னு ஆசை. அதுக்காகதான் இப்போ எம்.எஸ்ஸி., பயோடெக்னாலஜி எடுத்துப் படிச்சுட்டு இருக்கேன். யுஜியில கஷ்டம் தெரியாத கைப்புள்ளைகளாவே இருந்துட்டோம். இப்ப மூச்சுத் திணறத் திணற படிக்க வேண்டியதா இருக்கு. ஆனாலும் இப்படி கஷ்டப்பட்டுப் படிக்கலைனா, படிக்கிற கோர்ஸுக்கு மரியாதை இல்ல பாருங்க! அதனால, கைப்பிள்ளங்க எல்லோரும் இப்போ சமர்த்துப் பிள்ளைங்களாகி சீரியஸா படிச்சிட்டு இருக்கோம்!'’

கிறிஸ்டினா ஷாமிலி, பி.ஜி.டி.எம் (Post Graduate Diploma in Management), கேலக்ஸி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட், சென்னை

VIP-யா ஆகிடக்கூடாது!

''யுஜி-யில பொறியியல் எடுத்துப் படிச்சேன். நான் கோர்ஸ் முடிக்கிற நேரத்துல,பி.இ படிப்புக்கான வாய்ப்புகள் எல்லாம் கண்ணுக்கு முன்னால கரைய ஆரம்பிச்சிருச்சு. விஐபி-யா ஆகிடக்கூடாதுனு, அதாங்க, வேலையில்லாப் பட்டதாரியா ஆகிடக் கூடாதுனு சுதாரிச்சு, வேலைக்கு உத்தரவாதம் உள்ள பி.ஜி.டி.எம்ல முதுகலை சேர்ந்தேன். அப்பா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறதால, நானும் பேங்கிங் அண்ட் இன்ஷூரன்ஸ் பிரிவையே எடுத்திருக்கேன். எம்.பி.ஏ மாதிரி எங்களுக்கு நிறைய புத்தகங்கள் எல்லாம் கிடையாது. ஒண்ணு, ரெண்டு புக்ஸ்தான்; மத்ததெல்லாம் நெட்தான். ஆனாலும் செமஸ்டர் டைம்ல படிச்சே ஆக வேண்டியதிருக்கு. பரீட்சை எழுதணுமே!''

கேத்ரின் ஜெனிஃபர், பி.எட்., டி.வி.எஸ் டீச்சர் டிரெயினிங் அகாடமி, மதுரை

VIP-யா ஆகிடக்கூடாது!

''நான் பி.ஏ., ஆங்கில இலக்கியம் முடிச்சிருக்கேன். அப்போ எல்லாம் நான் படிச்சதா சரித்திரம், பூகோளம் எதுவும் இல்லை. இப்போ பி.எட் சேர்ந்ததுல இருந்து 34 ரெக்கார்ட்ஸ், 40 சார்ட்ஸ், 80 ஃபிளாஷ் கார்ட்ஸ், வொர்க்கிங், நான் (ழிளிழி) வொர்க்கிங் மாடல் கேஸ் ஸ்டடினு நிறைய தயாரிக்க வேண்டி இருக்கிறதால, கேத்ரின் ரொம்ப டயர்டு ஆகிடுறா. இப்போ பாடத்திட்டங்கள் நிறைய மாறியிருக்கிறதுனால என்னை மாதிரி வருங்கால ஆசிரியர்களுக்கு மாணவர்களோட மனநிலைய புரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்த மாதிரி செயல்படுற பொறுப்புகளும் வேலைப்பளுவும் அதிகம். அதனால விளையாடக் கூட நேரமில்லாம ஓடிட்டே இருக்கேன். என்ன பார்க்கறீங்க? அட, நான் இன்னும் சின்னப்புள்ளதாங்க!'

பத்மாவதி, எம்.எஸ்ஸி., தாவரவியல், அமெரிக்கன் கல்லூரி, மதுரை

''நான் பி.எஸ்ஸி., தாவரவியல் 'படிச்சேன்’னு மனசாட்சிக்கு விரோதமா சொல்ல மாட்டேன். என்.சி.சி, ஸ்போர்ட்ஸ்,போட்டிகள்னு எப்பவும் கிரவுண்ட்லதான் கிடப்பேன். பிஜிக்கு வந்தா, போர்ஷன்ஸ் எல்லாம் பயமுறுத்திருச்சு. ஆனா, எங்களோட அனுபவமான பேராசிரியர்கள் எல்லோரும் தாவரவியலை வாழ்க்கையோட சம்பந்தப்படுத்தி சொல்லிக் கொடுக்கிறதுனால பாடங்களை சுவாரஸ்யமான பரிமாணத்துல கத்துக்கிறோம். இன்டர்னல்ஸ்ல ரொம்பக் கஷ்டமா கொஸ்டீன்ஸ் செட் பண்ணி எங்களை பயமுறுத்தி படிக்க வெச்சு, செமஸ்டர் வினாத்தாளை ஈஸியா ஊதித்தள்ள செஞ்சுடுறாங்க. அதனால இப்போ பாட்டனியைப் பார்த்து பயம் நஹி!''

ஹேப்பி செமஸ்டர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism