Published:Updated:

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

சா.வடிவரசு படம்: க.தனசேகரன்

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

நோய்களை விரட்ட மூன்று சூத்திரங்கள்!

''நோய்கள் நம்மைத் தாக்க, நாம்தான் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறோம்!'' நிதானமான குரலில் சொல்கிறார்... கல்பாக்கத்தைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் புகழேந்தி.

''நாம் சாப்பிடும் உணவும், சுற்றுப்புறச்சூழலும், பழக்கவழக்கங்களும் ஆரோக்கியமானதாக இருந்துவிட்டால், நோய்கள் நம்மைத் தாக்காமல் தற்காத்துக்கொள்ள முடியும். ஆனால், இந்த மூன்று விஷயங்களிலும் நாம் அக்கறை கொள்வதில்லை. நம் முன்னோர்கள், சத்தான உணவு, மாசில்லாத சுற்றுப்புறம், பழக்கவழக்கங்கள் என இயல்பாகவே தங்கள் வாழ்க்கை முறையை இந்த மூன்று அம்சங்களிலும் நிறைவாக அமைத்துக்கொண்டனர். இந்த மூன்று விஷயங்களிலும் காட்டும் கவனம், உங்கள் குடும்ப ஆரோக்கியத்தில் நீங்கள் கொண்டுள்ள அக்கறைக்குச் சான்று!'' என்று அறிவுறுத்தும் டாக்டர் புகழேந்தி, அவள் விகடன் குரல் ஒலி வழியாக...

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

• நாம் சாப்பிடும் உணவு மற்றும் மருந்துகள் விஷயத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டியவை?

• தண்ணீர் என்பது குடிப்பதற்கு மட்டும்தானா?

• மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் சுயபாதுகாப்பு என்பது மிக அவசியம். ஏன்?

• 'உடல் உழைப்பு’ என்கிறார்களே... அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

• நம்மை மட்டும் நாம் பேணிக்காத்தால் போதுமா?

- இப்படி நோய்களின் பிடியில் சிக்காமல் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள இன்னும் பல விஷயங்களைச் சொல்லி, உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பரிசளிக்க ஆவலோடு காத்திருக்கிறார். தினம் மூன்று நிமிடம் ஒதுக்குங்கள்... நோய்களை விரட்டுங்கள்!

டிசம்பர் 2 முதல் 8 வரை தினமும் மூன்று நிமிடங்களை ஒதுக்குங்கள்...

இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.

நம்பிக்கை மனுஷியின் நம்பிக்கை பேச்சு!

'மஸ்குலர் டிஸ்ட்ரோபி’ என்னும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர் சேலம் பகுதியைச் சேர்ந்த வானவன்மாதேவி. ஆனாலும் வாழ்க்கை மீதான பிரியத்தை இழக்காததோடு, மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கிறார் இந்த நம்பிக்கை மனுஷி!

''மற்ற குழந்தைகளைப் போலத் தான் நான் 10 வயது வரை இருந்தேன். அதன் பின் என் உடலில் ஒவ்வொரு உறுப்பாகச் செயலிழக்கத் தொடங்கியது. என்னைப் போலவே என் தங்கை இயல்இசைவல்லபியையும் தசைச்சிதைவு நோய் தாக்கியது. இதனால் என் ஒட்டுமொத்த குடும்பமும் உடைந்துவிட்டோம். குணப்படுத்த முடியாது என்று எல்லா மருத்துவர்களும் சொல்ல, விரக்தி அடையாமல், பூரணமாக ஏற்றுக்கொண்டோம். பின், எங்களுக்குள் இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, தசைச்சிதைவு நோயுள்ளவர்களுக்கு உதவும் பொருட்டு நானும் என் தங்கையும் 'ஆதவ் டிரஸ்ட்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை தொடங்கி, பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவிகளைச் செய்துவருகிறோம். மற்றவர்களுக்கு உதவும் கரங்கள் எங்களுடன் இணைய வேண்டும்!'' என்கிறார், புன்னகை முகத்துடன் அருகிலிருக்கும் தன் தங்கையைப் பார்த்தபடி!

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

• 'நம்பிக்கை’ என்ற சொல் எவ்வளவு பெரிய ஆயுதம் தெரியுமா?

• 'மாற்றுத்திறனாளிகள்’, மற்றவர்களிடம் இருந்து மனதார எதிர் பார்ப்பது என்ன?  

• பலரும் பலரோடு நட்பு கொள்கிறோம். ஆனால், நட்பு பாராட்ட வேண்டிய இடத்தில் தீமை பாராட்டுகிறோம். இதனால்..?

• 'எளிமையான வாழ்க்கையே மகிழ்ச்சி யான வாழ்க்கை’ என்று பலரும் சொல்கிறார்கள். ஏன்?

• புத்தக வாசிப்பு வெறும் அறிவு வளர்ச்சிக்கு மட்டும்தானா?

- இப்படி தங்கள் அனுபவ வாழ்க்கை யில் கண்டெடுத்த உண்மைகளைச் சொல்லி நம்மிடம் நம்பிக்கை விதைக்கக் காத்திருக்கிறார்கள்... உடன்பிறப்புக்கள் இருவரும்! கேட்டுப் பயன்பெற தினம் மூன்று நிமிடம் ஒதுக்குங்கள்.. நிச்சயம் அது உங்களுக்குள் நம்பிக்கை தீபம் ஏற்றும்!

டிசம்பர் 9 முதல் 15 வரை மூன்று நிமிடங்களை ஒதுக்குங்கள்...

இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.

குறும்படம்!

'மஸ்குலர் டிஸ்ட்ரோபி’ நோய் குறித்தும், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள வானவன்மாதேவி மற்றும் அவருடைய தங்கை இயல்இசைவல்லபி பற்றியும் சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர் கீதா இளங்கோவன் அழுத்தமான குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். பார்க்க https://www.youtube.com/watch?v=svH7fYOOnE4 என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு