Published:Updated:

ஃபேஷன் ஸ்டுடியோ! - 6

கலர்ஃபுல் பகுதிஇந்துலேகா.சி   படங்கள்: கு.கார்முகில்வண்ணன்

ஃபேஷன் ஸ்டுடியோ! - 6

கலர்ஃபுல் பகுதிஇந்துலேகா.சி   படங்கள்: கு.கார்முகில்வண்ணன்

Published:Updated:

''இப்ப இருக்கிற டீன் ஏஜ் பொண்ணுங்க எக்ஸாம்ல பாஸ் பண்ணினா பார்ட்டி, அதிகமா அரியர்ஸ் வெச்சா பார்ட்டி, காலேஜ் கட் அடிச்சா பார்ட்டி, கிளாஸ்ல இருந்து 'கெட் அவுட்' சொன்னா பார்ட்டினு தொட்டதுக்கெல்லாம் பார்ட்டி வெச்சு கொண்டாடுறாங்க. இந்த மாதிரி சின்னச் சின்ன டீ பார்ட்டிகளுக்கு ஏற்ற ஒரு டிரெண்டியான 'கேஷுவல் பார்ட்டி வேர்’ டிரெஸ் பற்றிதான், இந்த இதழ்ல பார்க்கப் போறோம்!' என தாங்கள் டிசைன் செய்த ஆடை பற்றி விவரிக்கிறார்கள் சென்னை, 'மனா டிசைன் ஸ்டுடியோ’வின் நிர்வாகிகள் ஆர்த்தி மற்றும் வனிதா.

 ''இது ஒரு கேஷுவல் பார்ட்டி வேர். இப்போதைய 'ஸீ த்ரூ’ டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி, பார்க்க டிரான்ஸ்பரன்ட்டா இருக்கும். இந்த ஆடையை உருவாக்க, இம் போர்டட் லேசர் ஜார்ஜெட் மெட் டீரியலைத் தேர்வு செய்தோம். நிறைய ப்ளீட்ஸ் வைத்து, வெளிப் புற லேயரை டிசைன் செய்தோம். இது அந்தக் கால மர்லின் மன்றோ டிரெஸ் மாதிரி, பூ போல அழகா விரியும்.

ஃபேஷன் ஸ்டுடியோ! - 6

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆடையின் அடிபாகத்தில், அதாவது உள் லேயருக்கு ப்ளூ கலர் பூக்கள் பிரின்ட் செய்த சில்க் சாட்டின் துணியை வைத்துத் தைத்தோம். ரொம்ப பிளெய்னா இருக்கும். இதுக்கு ஒரு பார்ட்டி வேர் டச் கொடுக்க ஜெய்ப்பூர் செமி ப்ரெஷியஸ் மணிகளால் ஒரு செயின் மாதிரியான பெல்ட் செய்து, அதோட முடிவுல ப்ளூ கலர் பட்டு நூலில் சுங்கு அட்டாச் பண்ணினோம். ஸ்லிம்மா இருக்கிறவங்களுக்கு கச்சிதமா சூட் ஆகும் இந்த டிரெஸ்ஸை, கொஞ்சம் குண்டா இருக்கவங்களுக்கு டிசைன் பண்ணும்போது இன்னும் கொஞ்சம் நீளமா தைக்கணும்.

ஃபேஷன் ஸ்டுடியோ! - 6

இந்த 'கேஷுவல் பார்ட்டி வேர்'க்கு, மாடல் மாதிரி கழுத்துல எதுவும் போடாம, காதுக்கு மட்டும் கொஞ்சம் கிராண்டா நீளமான தொங்கட்டான் போடுறது டிரெண்டியா இருக்கும். அல்லது நீளமான முத்துமணி மாலையும், காதுக்கு ஒரு சின்ன முத்து கம்மலும் போடலாம்!

பார்ட்டிக்குக் கிளம்பும்போது, இந்த டிரெஸ்ஸுக்கு மேட்சா காலுக்கு ஹை ஹீல்ஸும், கையில ஒரு க்ளட்சும் (மணி பர்ஸ்) பெஸ்ட் சாய்ஸ். கேஷுவலா ஃப்ரெண்ட்ஸோட அவுட்டிங் போகும்போது, காலுக்கு ஹை வெட்ஜஸும், ஒரு பெரிய ’ஹேண்ட் பேக்'கும் சூட் ஆகும்!

உங்க முகத்துக்கு ஏத்த எந்த ஹேர் ஸ்டைலும் இந்த டிரெஸ்ஸுக்கு சூட் ஆகும். குறிப்பா ஃப்ரீ ஹேர் ஸ்டைலும், ஃப்ரெஞ்ச் ப்ளைட்டும் பெஸ்ட் சாய்ஸ்!''

மாடல்: சிந்து 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism