Published:Updated:

சொர்க்கம் என்பது நமக்கு..!

இந்துலேகா.சி

சொர்க்கம் என்பது நமக்கு..!

இந்துலேகா.சி

Published:Updated:

வீட்டை சுத்தம் செய்ய நேரமில்லையா... இதோ ரெடியாக இருக்கிறது ஹோம் க்ளீனிங் சர்வீஸ்!

‘‘ஒரு விடுமுறை நாளில் எங்களை உள்ளே அனுமதித்துவிட்டு நீங்கள் கண்காணித்தால் போதும், உங்கள் வீட்டை பளிச் ஆக்கி ஒப்படைப்போம்!’’ என்று சொல்லும், சென்னை, அசோக் நகரில் உள்ள ‘சர்வீஸ் ஸ்கொயர்’ நிறுவனத்தின் நிர்வாகி மதன், தங்களின் சர்வீஸ் பற்றி விவரிக்கிறார்.

‘‘ஹால், க்ளீனிங்ல பெரிய ஏரியா. ஃப்ளோர் க்ளீனிங்கில் மொசைக், டைல்ஸ், மார்பிளை பெருக்கித் துடைக்கிறது, பாலிஷிங், க்ரிஸ்டலைசேஷன்னு டிமாண்டுக்கு ஏற்ப சுத்தம் செய்வோம். சோபா, டீபாயை வாக்குவம் க்ளீனிங் மற்றும் ஜன்னல், அலமாரிகளை தூசி தட்டி துடைப்போம். ஃபேன், லைட், ஜன்னல் (கதவு, கம்பி, கண்ணாடி) முழுவதும் மற்றும் டி.வி, டி.வி.டி, மியூசிக் சிஸ்டம் இந்த மாதிரி எலெக்ட்ரானிக் பொருட்களின் வெளிப்பகுதி முழுக்க சுத்தம் செய்வோம். டைனிங் ஹாலில் டைனிங் டேபிள், சேர்கள், அப்புறம் கம்ப்யூட்டர், டெலிபோன்னு எல்லாத்தையும் சுத்தம் செய்துடுவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொர்க்கம் என்பது நமக்கு..!

பெட்ரூம்ல கட்டில், மெத்தை, ஜன்னல், கதவு, கண்ணாடிகள், குப்பைத் தொட்டி வரை நாங்க பொறுப்பு. கிச்சன்ல புகை, எண்ணெய்ப் பிசுக்கு, பூஞ்சைனு பல கறைகள் படிஞ்சிருக்கும். மாடுலர் கிச்சன்களுக்கு எந்த டேமேஜும் நேராம கூடுதல் கவனம் செலுத்தி சுத்தம் செய்வோம். எக்ஸாஸ்ட் ஃபேன், சிம்னி, கேஸ் ஸ்டவ், பர்னர், ஃப்ரிட்ஜ், `மைக்ரோ வேவ் அவன்'னு எல்லாம்

சொர்க்கம் என்பது நமக்கு..!

சுத்தம் செய்துட்டு, எண்ணெய் பிசுக்கில்லாமல் துடைச்சுடுவோம். பாத்ரூம், ஜன்னல், கண்ணாடி, குழாய், ஷவர், சோப் ஸ்டாண்ட், லைட்னு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸையும் க்ளீன் செய்வோம்.

ஹால் முதல் டாய்லெட் வரை வீட்டை மொத்தமாக க்ளீன் செய்யும் முறையை ஸ்ப்ரிங் க்ளீனிங்னு சொல்லுவோம். இதுக்கு அதிகபட்சம் 5,500 வரை செலவாகும். இதைத்தவிர, ஹால், கிச்சன், பெட்ரூம் டாய்லெட்னு தனித்தனி சர்வீஸும் உண்டு. அதுக்கு ஏத்த மாதிரி கட்டணத்தை வசூல் பண்ணுவோம்’’ என்று சொன்ன மதன்,

“கஸ்டமருக்கு திருப்தி இல்லைனு தெரிஞ்சா, அவரைத் திருப்திபடுத்துற அளவுக்கு திரும்பவும் சர்வீஸ் செய்வோம்'' என்கிறார், அழுத்தமாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism