Published:Updated:

பட்டாம்பூச்சிகளின் `பகீர்' வரதட்சணை டிமாண்ட்!

க.தனலட்சுமி  படங்கள்: ச.ஹர்ஷினி

பட்டாம்பூச்சிகளின் `பகீர்' வரதட்சணை டிமாண்ட்!

க.தனலட்சுமி  படங்கள்: ச.ஹர்ஷினி

Published:Updated:

'மாப்பிள்ளை மட்டும்தான் வரதட்சணை கேட்கணுமா? ஒரு சேஞ்சுக்கு பொண்ணு கேட்டா?!’

- இப்படி சூப்பர் ஐடியா க்ளிக் ஆச்சு! 'உங்களை வரதட்சணை கேட்கச் சொன்னா, என்னவெல்லாம் கேட்பீங்க?!’னு பட்டாம்பூச்சி பொண்ணுங்ககிட்ட கேள்வியைப் போட்டோம்!

ரெஜிஸ்டர்டு வீடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பட்டாம்பூச்சிகளின் `பகீர்' வரதட்சணை டிமாண்ட்!

''கல்யாணத்துக்கு அப்புறம் ஏதாவது ஒரு பொருளை, 'இது நல்லாயிருக்கே, யாரு வாங்கித் தந்தா?!’னு கேட்டா, 'அம்மா வீட்டுல’னு சொல்றதைவிட, 'அவருதான்!’னு சொல்றதுதானே அவருக்கு கெத்து! அதனாலதான் நான் வரதட்சணை கேட்கிறேன். மத்தபடி நான் ரொம்ப குட் கேர்ள்!''னு ஆரம்பிச்ச சென்னை, கிரசன்ட் பொறியியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி தர்ஷிகா,

''கணவன் -  மனைவிக்கு சண்டை வந்தா, அதென்ன பாஸ் ஆம்பிளைங்க உடனே மனைவியை, 'வீட்டை விட்டு வெளிய போடீ!’னு சொல்றது..? அதுக்காகத்தான் கேட்கிறேன்... எனக்கு கல்யாணத்துக்கு வரதட்சணையா ஒரு வீடு கண்டிப்பா வேணும். கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்றாங்களோ இல்லையோ, அந்த வீட்டை கல்யாணத்தன்னிக்கே என் பேருல ரெஜிஸ்டர் பண்ணிடணும். அப்புறம் கிச்சன் ஸ்பூனில் இருந்து கட்டில், பீரோ, வாஷிங் மெஷின் வரை எப்படி இதுவரை சீர் வாங்கிட்டு இருந்தாங்களோ, அதை எல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மண்டபத்துல வைக்கணும். நான் ஒரு டான்ஸர். அதனால, கால்ல நல்லா ஸ்டெப்ஸ் போடுற பையனைத்தான் கைபிடிப்பேன். அப்போதானே அவனை ஆட்டிவைக்க... ஸாரி... ஆடவைக்க முடியும்!''னு சிரிக்கிறாங்க!

விட்டா கலாஷேத் ராவையே எழுதி வைக்கச் சொல்வாங்களோ!

வீட்டுக்கு ஏத்த விஷ்ணு!

பட்டாம்பூச்சிகளின் `பகீர்' வரதட்சணை டிமாண்ட்!

''முதல்ல என் செல்ல நாய்க்குட்டிக்கு சூப்பரா ஒரு பப்பி ஹோம் வேணும். அப்போ தான் என் கழுத்துல தாலி ஏறும்!''னு, தன் நாய்க்கும் சேர்த்து பட்ஜெட் தாக்கல் செஞ்ச சென்னை, ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மூன்றாமாண்டு எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமன்டேஷன் மாணவி தீபிகா,

''பெருசா என்ன கேட்டுடப் போறேன். ஊரு உலகத்துல உள்ளதுதான். பொண்ணுக்கு ஒரு ஸ்கூட்டியும், காரும் தரச் சொல்லிடுங்க. பரிசம் போடுறப்போ அஞ்சு லட்சம் ரொக்கம். அப்புறம் முக்கியமான விஷயம்... பையன் லட்சணமா, வீட்டுக்கு ஏத்த விஷ்ணுவா இருக்கணும்!''னு சொன்னாங்க.

'அது யாருங்க விஷ்ணு?’னு கேட்டோம். வந்த பதில் ''ம்... அவங்க மட்டும் 'மஹாலஷ்மி’ மாதிரி பொண்ணு வேணும்னு கேட்பாங்களே? நாங்களும் கேட்போம்ல!''

ஓ... அந்த விஷ்ணுவா?!  

ஒன்லி 100 பவுன் நகை!

பட்டாம்பூச்சிகளின் `பகீர்' வரதட்சணை டிமாண்ட்!

''அத்தனை ரோஷம் பார்க்கிற ஆம்பளைங்க, மாமனார்கிட்ட காசு வாங்குறதுல மட்டும் எந்த ரோஷமும் பார்க்க மாட்டாங்களாம். என்ன கொடுமை சரவணன் இது!''னு சீரியஸா ஆரம்பிச்சாங்க, சென்னை, வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு சி.எஸ்.சி படிக்கும் நித்யா.

''இது நம்ம டர்ன்! அதிகமா எல்லாம் ஆசைப்பட வேண்டாம். அவங்க என்ன கேட்பாங்களோ அதை நாம திருப்பிக் கேட்போம். 100 பவுன் நகை. அவங்க பாட்டி போட்டதை எல்லாம் நம்ம தலையில கட்டக்கூடாது. எல்லாமே ஃபேன்ஸி நகைகளாதான் இருக்கணும்! அப்புறம்... மாமியார், மாமனாரை மதிச்சு நடக்கணும். இந்த மாமியார் - மருமகன் பிரச்னை எல்லாம் என் காதுக்கே வரக் கூடாது.  வரப்போற பையன்தான் அட்ஜஸ்ட் பண்ணி இருக்கணும்!''னு கண்ணடிக்கிறாங்க நித்யா!  

ஸ்ஸ்ஸப்பா!

நீ பாதி... நான் பாதி!

லேசியாவில் உள்ள நாட்டிங்கம் பல்கலைக்கழகத்தில், எக்கனாமிக்ஸ் மேனேஜ்மென்ட் இரண்டாம் ஆண்டு படிக்கும் பவித்ரா, ''எனக்கு வரதட்சணை எல்லாம்வேண்டாம். கல்யாணத்துக்கு முன்ன மாப்பிள்ளை ஒரு அக்ரிமென்ட்ல கையெழுத்துப் போட்டா போதும்''னு சொல்ல, நிமிர்ந்து உட்கார்ந்தோம்!

பட்டாம்பூச்சிகளின் `பகீர்' வரதட்சணை டிமாண்ட்!

''ப்ரினாப்ஷியல் (prenuptial) அக்ரிமென்ட் பத்தி தெரியுமா? கணவன் - மனைவிக்குள்ள சண்டை வந்து பிரிஞ்சாலும், பொருளாதார ரீதியா ரெண்டு பேருமே எப்பவும் உதவிக்கணும் என்பதுதான் அது. அதாவது, இப்போ கணவன் அவன் பேருல லோன் வாங்கியிருந்தா, பிரிஞ்சாலும் அதை நானும் சேர்த்துதான் அடைக்கணும். ஒருவேளை எனக்கு வேலை போயிட்டா, அவன் சம்பளத்துல எனக்கு சரி பாதி தந்துடணும். எல்லாத்துக்கும் மேல, பிரியும்போது, ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தப்போ வாங்கின சொத்தையும் ரெண்டு பேரும் சமமா பிரிச்சுக்கணும். வெளிநாடுகளில் இந்த அக்ரிமென்ட் ரொம்ப பிரபலம். இதனால் விவாகரத்தால பெண்கள் பொருளாதார ரீதியா கஷ்டப்படுறது தவிர்க்கப்படும். ஸோ, மாப்பிள்ளைகிட்டயும் ஒரு அக்ரிமென்ட் போட்டுடுவோமா!''னு குறும்பா கண்ணடிக்கிறாங்க பவித்ரா!

'பிரியமானவளே!’

ஜாலிக்காக பேசினாலும் எல்லா கேர்ள்ஸும் சீரியஸா ஒரு சூப்பர் மேட்டர் சொன்னாங்கப்பா!

''நாங்க வரதட்சணைங்கறத எப்பவும் கேட்கவே மாட்டோம். வரதட்சணை வாங்கிட்டு எங்களை விற்க நாங்க ஒண்ணும் கல்யாணச் சந்தை பொம்மை இல்லை.''

கேட்டுக்கிட்டீங்களா பாய்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism