Published:Updated:

ஆடைகளைப் பாதுகாக்கலாம்... ஆயுளை நீட்டிவைக்கலாம்!

வே.கிருஷ்ணவேணி, படம்: ப.அருண்

ஆடைகளைப் பாதுகாக்கலாம்... ஆயுளை நீட்டிவைக்கலாம்!

வே.கிருஷ்ணவேணி, படம்: ப.அருண்

Published:Updated:
ஆடைகளைப் பாதுகாக்கலாம்... ஆயுளை நீட்டிவைக்கலாம்!

ன்று, தயக்கமே இல்லாமல் ஆயிரங்களைக் கொட்டி வாங்குகிறார்கள் ஆடைகளை. அப்படி வாங்கும் உடைகளை சேதமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கூடுதல் பொறுப் பாகிறது. சென்னை கே.கே நகரில் உள்ள ‘வஸ்த்ரா பொட்டீக்’-ன் இணை நிறுவனர் கௌசல்யா நீலகண்டன், அதற்கான ஆலோசனைகளை அள்ளித் தந்தார்!

‘‘விலையுயர்ந்த துணிகளை வாங்குகிறவர்களுக்கு, அதைப் பராமரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். எப்படி மடித்து வைக்க வேண்டும், எதில் மடித்து வைக்க வேண்டும், கறை நீங்க என்ன செய்ய வேண்டும், எந்தெந்த ரக ஆடைகளை எப்படித் துவைக்க வேண்டும் என்று அதில் பல அம்சங்கள் உள்ளன. பெண்களுக்கான உடைகள் மட்டுமல்ல, ஆண்கள், குழந்தைகள் என்று அனைவருக்கான ஆடைகளுக்கும் கவனம் கொடுக்கப்பட வேண்டும்!’’ என்ற கௌசல்யா, தொடர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண்களின் அலமாரி!

பட்டுப்புடவைகளை உடுத்திக் களைந்த பின், வியர்வை, ஈரம் உலரும்வரை நிழலில் காய வைக்க வேண்டும். பின்னர், அயர்ன் செய்யாமல் அப்படியே மடித்து மர அலமாரி யில் வைத்துவிட வேண்டும். மறுமுறை தேவைப்படும்போது, அந்த சமயத்தில் எடுத்து அயர்ன் செய்து உடுத்திக்கொள்ளலாம். காரணம், நீண்ட காலத்துக்கு பட்டுப்புடவை அயர்ன் மடிப்பில் இருக்கும்போது, அந்த மடிப்பில் நூலும் ஜரியும் சேதமடைந்து, புடவை கிழிந்துவிடும். ஒவ்வொரு முறை உடுத்திய பின்னும் டிரை வாஷ் கொடுத்தால், பட்டின் ஆயுள் சிதையும் என்பதால், இரண்டு, மூன்று முறை உடுத்திய பின் டிரை வாஷ் கொடுத்தால் போதுமானது. பட்டுப்புடவைகளை மர அலமாரிகளில் வைப்பதே சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சில்க் காட்டன் போன்ற குறைந்த விலையில் உள்ள பட்டு ரக ஆடைகளை, முதல் மூன்று சலவைக்கு சோப்பைப் பயன்படுத்தாமல் வெறும் தண்ணீரில் அலசி நிழலில் காயவைக்கலாம்.

ஆடைகளைப் பாதுகாக்கலாம்... ஆயுளை நீட்டிவைக்கலாம்!

பட்டு, சாஃப்ட் சில்க், சில்க் காட்டன், டிசைனர் புடவைகள் என விலையுயர்ந்த புடவைகளில் ஏதாவது கறை, அழுக்கு ஏற்பட் டால், ஷாம்பு அல்லது சோப்பு பவுடரை ஒரு கப்பில் கரைத்துக்கொண்டு, அதை சிறிது காட்டனில் தொட்டு, கறையுள்ள இடத்தில் மெதுவாகத் தேய்த்து எடுக்கலாம். கண்டிப்பாக பிரஷ் பயன்படுத்தக்கூடாது. அதிலும் பட்டுப்புடவையில் பிரஷ் பயன்படுத்தினால் ஜரி கிழிந்துவிட வாய்ப்பு அதிகம். டிசைனர் புடவைகளை மடித்து வைக்கும்போது, எம்ப்ராய்டரி மற்றும் கற்கள் பதித்திருக்கும் இடங்களில் மஸ்லின் துணியையோ, நியூஸ் பேப்பரையோ மடிப்பு அடுக்குகளின் இடையில் வைத்தால், கற்கள், எம்ப்ராய்டரி போன்றவை ஒன்றில் ஒன்று மாட்டி புடவையைச் சேதப்படுத்தாமல் இருக்கும்.
 
ஆண்களின் வாட்ரோப்!

ஆண்களின் ஷர்ட்களில் காலர், பாக்கெட் மற்றும் கைமடித்துவிடும் பகுதிகளில் அதிகம் அழுக்கு படிந்திருக்கும். டிடர்ஜென்ட் பவுடர் கரைசலை அந்த இடங்களில் விட்டு, சிறிது நேரம் ஊறவிட வேண்டும். பின்பு அதை பிரஷ் கொண்டு தேய்த்தால், கரையானது சட்டென நீங்கிவிடும். டி-ஷர்ட், உள் பனியன் வகைகளை அடித்துத் துவைப்பது, முறுக்கிப் பிழிவது எல்லாம் கூடாது. நிறம் மங்கிய வெள்ளை நிறத்துணிகள், வேட்டி போன்றவற்றில் அதன் நிறம் பளிச்சிட கறை போக்குவதற்கான லிக்விட்களை நீரில் கலந்து அதிகபட்சம் 10 நிமிடங்கள் ஊறவைத்து அலசினால் போதும். கூடுதல் வெண்மை வேண்டும் என்று அதிக நேரம் வைத்தால் துணி சேதமாகும். துணிகளில் படிந்துள்ள கறைகளைப் போக்க இந்த லிக்விடை சிறிது பஞ்சில் தொட்டு கறை இருக்குமிடத்தில் மட்டும் தேய்த்து 5 நிமிடத்துக்குப் பிறகு நல்ல தண்ணீரில் அலசிவிட வேண்டும். சரியாக அலசாமல் விட்டால் அதை உடுத்துவோருக்கு சரும அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆடைகளைப் பாதுகாக்கலாம்... ஆயுளை நீட்டிவைக்கலாம்!

குட்டீஸ்களின் ஷெல்ஃப்!

குழந்தைகளுக்கு என தனியாக ஒரு ஷெல்ஃப் ஒதுக்குவது அவசியம். அவர்களின் உடைகளுக்கு அதிகப்படியான சோப்பு பவுடர், சோப்பை பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக, அவர்களின் உள்ளாடைகளில் படிந்திருக்கும் சோப்பின் காரம், அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, அசௌரியத்தையும் கொடுக்கும். கற்கள், வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளும், இறுக்கமான ஆடைகளும் குழந்தைகளை சிரமப்படுத்தும் என்பதால், அவற்றை முடிந்தவரை தவிர்க்கவும். சாக்ஸை மற்ற ஆடைகளுடன் சேர்த்து ஊறவைக்காமல், தனியாக ஊறவைத்துத் துவைக்கவும். சாக்ஸை கழற்றும்போதும், மடித்து வைக்கும்போது ஒன்றோடு ஒன்று முடிந்தே வைத்தால், ஸ்கூல் செல்லும் அவசரத்தில் ‘ஒண்ணு இருக்கு, இன்னொண்ணு எங்கே..?’ என்ற அலறல் இருக்காது!’’ என்ற கௌசல்யா, ஆடை பராமரிப்புக்கான பொதுவான டிப்ஸ்கள் வழங்கினார் (பார்க்க பெட்டிச் செய்தி)

கறை நீக்க... நிறம் மங்காமல் இருக்க...

 ஆடைகளின் மேல் பெர்ஃப்யூம் பயன்படுத்தும்போது, நிறம், நூல், வேலைப்பாடு என்று எல்லா அம்சங்களிலும் அது விரைவில் சிதைய வாய்ப்பாகும். 

துணிகளில் படிந்த கறையை எடுக்க, நெயில்பாலிஷ் அசிட்டோன் (acetone) எனப்படும் கெமிக்கலை அந்த இடத்தில் சில துளிகள் விட்டு, காட்டனால் மெதுவாகத் தேய்த்து எடுக்க கறை நீங்கிவிடும். அல்லது அசிட்டோன் சேர்க்கப்பட்டுள்ள நெயில்பாலிஷ் ரிமூவரையும் இதற்குப் பயன்படுத்தலாம்.

 ஐஸ்க்ரீம், பால், சாக்லேட், கிரேவி, லிப்ஸ்டிக் கறையை எடுக்க, துணியை வாஷிங் பவுடர் கரைசலில் ஊறவைத்து, டிடர்ஜென்ட் சோப்பை அந்த இடத்தில் மட்டும் கவனம் கொடுத்து தேய்த்தால் போதுமானது.

எண்ணெய்க் கறை படிந்திருப்பின், முக பவுடரை மிதமான சூட்டில் உள்ள நீரில் கலக்கி அந்த துளிகளைக் கறையில் விட்டு பிரஷ் செய்தால் கறை காணாமல் போய்விடும்.

 ரத்தம், துரு, சூப், கிரேவி போன்றவை கறையாகப் படிந்திருந்தால், சில துளிகள் ஹைட்ரஜன் ஃபெராக்ஸைடை அதில் விட்டு மெதுவாகத் தேய்த்தால் போய்விடும்.

ஆடைகளை ஊறவைக்க அதிகளவு டிடர்ஜென்ட் பவுடர் பயன்படுத்தவும் கூடாது, அதிக நேரம் ஊற வைக்கவும் கூடாது. இதனால் எத்தனை முறை அலசினாலும் சோப்பின் கெமிக்கல்ஸ் துணியில் தங்கிவிடும். காயவைத்து எடுத்தாலும் வெண்மைக்கோடுகள் இருக்கும். துணிகளை ஷெல்ஃப்களில் அடுக்கும்போது அடியில் நியூஸ் பேப்பர் வைக்க வேண்டும்.

 எல்லா வகை ஆடைகளையும் உள்பக்கம் வெளியில் தெரியுமாறு உலர்த்தினால் நிறமும் ஆயுளும் பாதுகாக்கப்படும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism