Published:Updated:

போட்டோகிராஃபி... எக்ஸலென்ட் சாய்ஸ்!

விரிந்துகொண்டே போகும் வாய்ப்புகள்... வளர்ந்துகொண்டே போகும் வருமானம்...கே.அபிநயா

போட்டோகிராஃபி... எக்ஸலென்ட் சாய்ஸ்!

விரிந்துகொண்டே போகும் வாய்ப்புகள்... வளர்ந்துகொண்டே போகும் வருமானம்...கே.அபிநயா

Published:Updated:

பிரபலமான போட்டோகிராஃபர்களிடம் பேசிப் பார்த்தால், பெரும்பாலானவர்கள் அதற்கான புரொஃபஷனல் கோர்ஸ் முடித்தவர்களாக இருக்கமாட்டார்கள். ஐ.டி, எம்.பி.ஏ, எம்.சி.ஏ என்று படித்துவிட்டு, பின்னர் போட்டோகிராஃபி ஆர்வத்தால் கேமராவை கையில் எடுத்து, பிறகு, அதில் ஒரு சப்போர்ட்டிவ் கோர்ஸ் முடித்து, ஒரு கட்டத்தில் தன் மெயின் ஸ்ட்ரீம் வேலையையே விட்டுவிட்டு, கழுத்தில் கேமராவை தொங்கப்போடுவதையே முழுநேர வேலை என எடுத்தவர்களாகத்தான் இருப்பார்கள்!

போட்டோகிராஃபி... எக்ஸலென்ட் சாய்ஸ்!

''உண்மைதான். எந்தத் துறையில், எந்த வேலையில் இருப்பவர்களுக்கும் போட்டோகிராஃபி மேல் ஒரு பிரியம் இருக்கும். அந்தத் திறமையைத் தூண்டிவிடும்விதமாக ஒரு சப்போர்ட்டிவ் கோர்ஸ் முடித்து, ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து முயற்சித்தால், பல ஆயிரங்களில் ஆரம்பித்து லட்சங்கள் வரை சம்பாதிக்க வழிவகுக்கும் உங்கள் கேமரா!'' என்று பூஸ்ட் நியூஸ் சொல்லும் சென்னை, 'ஆம்பிஷன் 4 போட்டோகிராஃபி அகாடமி’யின் நிறுவனர் மற்றும் நிர்வாகி கே.எல்.ராஜா பொன்சிங், போட்டோகிராஃபியில் உள்ள சப்போர்ட்டிவ் கோர்ஸ்கள் பற்றிய தகவல்கள் தருகிறார்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோர்ஸ்... இரண்டு வகை!

இதில் பேஸிக் கோர்ஸ், அட்வான்ஸ்டு கோர்ஸ் என்று இரண்டு வகைகள் உண்டு. பேஸிக் கோர்ஸில், கேமராவை எப்படிப் பயன்படுத்துவது, கண் முன் பார்க்கும் விஷயங்களை எப்படி போட்டோவாக எடுப்பது, லைட்டிங் என அடிப்படை விஷயங்கள் கற்றுக்கொடுக்கப்படும். அட்வான்ஸ்டு கோர்ஸ், வேலைக்குத் தயார்படுத்துவது. ஃபேஷன், வெடிங் (திருமணம்), அட்வர்டைஸிங், டிராவல், வைல்ட் லைஃப் என போட்டோகிராஃபியின் கிளைத் துறைகளில், ஆர்வத்தைப் பொறுத்துத் தேர்ந்தெடுக்கலாம்.

எதற்குத் தேவை இருக்கிறது?

இந்தியாவைப் பொறுத்தவரை வெடிங், ஃபேஷன், அர்வர்டைஸிங் மற்றும் நியூஸ் போட்டோகிராஃபிக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதிலும், குறிப்பாக, பலரும் தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, வெடிங் போட்டோகிராஃபி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்காகவே இன்று கோர்ஸில் சேர்பவர்களும் அதிகரித்துள்ளார்கள். அந்தளவுக்கு டிரெண்டாகி இருக்கும் இந்த போட்டோகிராஃபியில், வருமானமும் உயர்ந்திருக்கிறது. ஃபேஷன் போட்டோகிராஃபிக்கும் பெரிய டிமாண்ட் இருக்கிறது. சினிமா, சின்னத் திரைக்கு முயற்சி செய்பவர்களை, 'மாடல் போர்ட்ஃபோலியோ’வாக எடுத்துக் கொடுப்பது, சினிமா விளம்பரங்களுக்கான ஸ்டில் என இதற்கான தேவையும் அதிகம்... வருமானமும் அதிகம். ஃபுட், லொக்கேஷன், புராடக்ட் போன்றவற்றை உள்ளடக்கிய அட்வர்டைஸிங் போட்டோகிராஃபிக்கான வாசலும் இப்போது அகலத் திறந்திருக்கிறது.

போட்டோகிராஃபி... எக்ஸலென்ட் சாய்ஸ்!

வீடு தேடி வரும் ஸ்டுடியோ!

தனிநபராகவோ, குடும்பமாகவோ சென்று ஸ்டுடியோவில் போட்டோ எடுத்துக்கொள்ளும் 'போர்ட்ரேட்’ போட்டோகிராஃபி வழக்கம் நம் ஊரில் குறைந்துவிட்டாலும், வெளிநாடுகளில் இதை இன்றும் விரும்புகின்றனர். இதிலும் ஒரு புது கான்செப்ட் வந்திருக்கிறது. ஸ்டுடியோவுக்கு வரவைத்து எடுப்பதற்குப் பதிலாக, அவர்கள் வீட்டுக்கோ, பார்க், பீச் என்றோ ஸ்டுடியோவை எடுத்துச் சென்று, அந்த பேக் டிராப்பிலேயே போட்டோ எடுப்பது வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த டிரெண்டில் வெற்றிடம் உள்ளதும் கவனிக்கத்தக்கது. இதை புதுமையாகவும், பெரிதாகவும் எடுத்துச் செய்தால், வெற்றிக்கான வாய்ப்பு அதிகம்.

உணவகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளின் உள் மற்றும் வெளிக்கட்டமைப்புகளை அவர்களின் விளம்பரத்துக்காக படம் எடுத்துக் கொடுக்கும்... லொக்கேஷன் போட்டோகிராஃபி.

மேற்சொன்ன போட்டோகிராஃபிகளை எல்லாம் பெண்களாலும் நிச்சயம் செய்ய முடியும்; செய்கிறார்கள். துணிச்சல், புதுமை ஆர்வம் என இருக்கும் பெண்களுக்கு போட்டோ ஜர்னலிஸம் நல்ல சாய்ஸ். தவிர, பெண்கள் அதிகம் செயல்படும் ஒரு ஏரியா இருக்கிறது. அது, போஸ்ட் புரொடக்‌ஷன். அதாவது, எடுத்த போட்டோக்களை மெருகேற்றித் தரும் வேலை.

கோர்ஸ்... கால அளவு... செலவு..!

முதலில் பேஸிக் கோர்ஸ் முடித்துவிட்டு, பிறகு விருப்பமான போட்டோகிராஃபி துறையைத் தேர்ந்தெடுத்து அட்வான்ஸ்டு கோர்ஸாகப் படிக்கலாம். அட்வான்ஸ்டு கோர்ஸை முழு நேரமாகப் படிக்க 15  - 24 மாதங்கள் ஆகும். பகுதி நேரமாகவும் படிக்கலாம். இவை டிப்ளோமா கோர்ஸ்களாக வழங்கப்படுகின்றன. பேஸிக் கோர்ஸ் ஃபீஸ், அட்வான்ஸ்டு கோர்ஸ் ஃபீஸ், புராஜெக்ட் ஃபீஸ் எல்லாம் சேர்த்து 2 முதல் 3 லட்ச ரூபாய் வரை செலவாகும். கேமரா வாங்குவதற்கான செலவு தனி. பத்தாவது தேர்ச்சியும், கொஞ்சம் ஆங்கில அறிவும் இந்தக் கோர்ஸ்களுக்கான அடிப்படைத் தேவை.

பிராக்டிக்கல் வகுப்புகள் அதிகமாகவும், தியரி வகுப்புகள் மிகக் குறைவாகவும் இருக்கும் இந்த கோர்ஸ்களை, மனப்பாடத்தில் விருப்பமில்லாத மாணவர்கள் பலரும் தேர்வு செய்கிறார்கள். போட்டோகிராஃபி கோர்ஸ் முடித்தவுடன் ஸ்டுடியோ ஆரம்பிக்கலாம், விசிட்டிங் கார்டு முதல் வெப்சைட் வரை மக்களை அணுகி வாய்ப்புக் கேட்கலாம், ஒரு பெரிய போட்டோகிராஃபரிடம் அசிஸ்டென்ட்டாக வேலைக்குச் சேரலாம் அல்லது நேராக ஃபீல்ட் வொர்க்கும் செய்யலாம். அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர மெடிக்கல் போட்டோகிராஃபி, ஸ்பேஸ் போட்டோகிராஃபி, இ்ண்டஸ்ட்ரியல் போட்டோகிராஃபி போன்றவற்றை கையில் எடுக்கலாம். காவல்துறை மற்றும் கப்பல்படையில் கூட போட்டோகிராஃபர் பணி இடங்கள் உள்ளன. ஆனால், அவை மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. இவை தவிர, ஃப்ரீலான்ஸ் போட்டோகிராஃபி என்று சொல்லப்படுகிற, தொழில்ரீதியாக தனிப்பட்ட முறையில் போட்டோ எடுப்பதையும்  செய்யலாம்.

மொத்தத்தில், உலகத்தை உன்னிப்பாக கவனிக்கும் ரசிகன், ரசிகைகளுக்கு ஏற்ற சாய்ஸ்... போட்டோகிராஃபி!'' என்று முடித்தார் கே.எல்.ராஜா பொன்சிங்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism