Published:Updated:

புனிதத் துணி!

ஜோசப்

புனிதத் துணி!

ஜோசப்

Published:Updated:

ரு துணியை அதிகபட்சமாக எத்தனை ஆண்டுகள் வரை பாதுகாக்க முடியும்... 20 ஆண்டு, 50 ஆண்டு, நூறாண்டு? கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு துணி இருக்க முடியுமா? இருக்கிறது என்கிறார்கள் இத்தாலி நாட்டின் வடமேற்கு பகுதியில் இருக்கும் டொரினோ எனும் பாரம்பர்யம் மிக்க நகரத்திலிருக்கும் தேவாலய நிர்வாகிகள். அது, ஏசு கிறிஸ்து கொல்லப்பட்ட பிறகு, அவருடைய உடலைச் சுற்றி போர்த்தியிருந்த துணியாம்!

புனிதத் துணி!

கிட்டத்தட்ட நான்கு மீட்டர் நீளம் மற்றும் ஒரு மீட்டர் அகலம் கொண்ட அந்த சணல் துணியில், ஒரு மனிதனின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என நிர்வாணமான முழு உருவமும் பதிந்திருக்கிறது. இதில் ரத்தக்கறை தோய்ந்திருப்பது, விலா பாகத்தில் ஈட்டியால் குத்தப்பட்டிருப்பது... போன்ற அடையாளங்களையெல்லாம் வைத்து, `ஏசு கிறிஸ்து கொல்லப்பட்டதை விவிலியம் வர்ணித்திருப்பதற்கு ஏற்ப, இந்தத் துணியில் அடையாளங்கள் இருக்கின்றன. எனவே, இது ஏசுவின் உடலைச் சுற்றியிருந்த அடக்கத் துணி' என்கிறார்கள்.

அதேசமயம், `வேதியியல் ஆய்வு உள்ளிட்ட அனைத்துவிதமான ஆய்வின் அடிப்படையில் பார்த்தால், இது பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று' என்று இதை மறுப்பவர்களும் இருக்கிறார்கள்.

புனிதத் துணி என்பதை கத்தோலிக்க திருச்சபை ஏற்கவோ... மறுக்கவோ இல்லை. அதேசமயம், இதை புனிதத் துணியாக பரா மரித்து, வணங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது.

புனிதத் துணி!

டொரினோ நகரிலிருக்கும் செயின்ட் ஜான் பாப்திஸ்த் தேவா லயத்தில் மிகப்பெரிய பெட்டி ஒன் றில் பத்திரமாக இந்தத் துணியைப் பாதுகாத்து வருகின்றனர். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை துணியைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதித்து வந்துள்ளனர். பிறகு, சுற்றுச்சூழல் காரணங்களால் துணிக்கு பாதிப்பு வரலாம் என்பதால், பார்வையாளர்களுக்கு தடை போட்டுவிட்ட
னர். என்றாலும், அந்தத் துணியை வீடியோ படமெடுத்து, தேவலாயத்தில் ஒளிபரப்பிக்கொண்டே இருக்கிறார்கள். முதல் தடவையாக கடந்த 2013-ம் ஆண்டில் தொலைக்காட்சி
யில் இதை ஒளிபரப்பு செய்தனர். அப்போது பேசிய ஃபாதர் ஃபிரான் சிஸ், ``இந்த புனிதத்துணியில் இருப்பது இறந்த ஒரு மனிதனின் உருவமாக இருந்தாலும், அது நம்மை உற்று நோக்கும் ஏசு
பிரானின் உருவமாகவே நமக்குத் தோன்றுகிறது. இந்த முகத்தின் வழியாக, ஏசு கிறிஸ்து நம்முடன் உரையாடுவதாக நாம் உணர முடிகிறது'' என்று கூறியிருக்கிறார்.