பிரீமியம் ஸ்டோரி
இசைகளின் இனிய சங்கமம்!

‘லஷ்மன் ஸ்ருதி’, ஒவ்வொரு டிசம்பர் சீஸனிலும் நடத்தும் ‘சென்னையில் திருவையாறு!’ இசைப்பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்நிகழ்வின் சீஸன்-10, இந்த மாதம் 18-ம் தேதி முதல் ஆரம்பமாக இருக்கிறது. இசை பயிலும் மாணவர்கள் பலரின் கனவு, இதில் பங்கேற்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். இந்த சீஸனில், முதல் முதலாக வலதுகால் எடுத்து வைக்கும் இளம்கலைஞர்களின் சிறு அறிமுகம் இதோ!

இசைகளின் இனிய சங்கமம்!

ஸ்ரீ மதுமிதா

‘‘என் அம்மா ஹேமலதா மணி, வீணை வித்வான். அக்கா சாருலதா மணி, பின்னணிப் பாடகி. நானும் நான்கு வயதிலிருந்தே கர்னாடக இசை கற்று வருகிறேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறேன். திரைப்படங்களிலும் பாடியிருக்கிறேன். என் திரை இசைப் பயணத்தை ஹாரிஸ் ஜெயராஜ் சார் தொடங்கி வைக்க, தொடர்ந்து ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘ராம்’, ‘பருத்திவீரன்’, ‘ஸ்லம் டாக் மில்லியனர்’, ‘ஒகே ஒகே’, ‘நான் கடவுள்’ என்று பாடிக்கொண்டிருக்கிறேன். கடந்த வருடமே எனக்கு இந்நிகழ்ச்சியில் பாட வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், திருமணமாகி அமெரிக்கா சென்றுவிட்டதால் தவறவிட்டுவிட்டேன். அமெரிக்காவிலும் பல கச்சேரிகள் செய்து கொண்டிருக்கிறேன். இம்முறை `சென்னையில் திருவையாறில்’ ‘பக்தி மதுரம்’ என்ற தலைப்பில், முதல் ஒரு மணி நேரம் கர்னாடகப் பாடலும், கடைசி அரைமணி நேரம் நார்த் பஜன்ஸும் பாடவிருக்கிறேன்!’’

சரண்யா ஸ்ரீராம்

‘‘சங்கரி கிருஷ்ணன் மற்றும் திருமலை ஸ்ரீநிவாசன் அவர்களிடம் கடந்த 10 வருடங்களாக கர்னாடக சங்கீதம் கற்று வருகிறேன். முதல் முறையாக `சென்னையில் திருவையாறில்’ பாடவிருப்பது, பரவசமும், பொறுப்பும் கலந்த அனுபவமாக இருக்கிறது.

இசைகளின் இனிய சங்கமம்!

இந்தச் சபையில், தொடர்ந்து கச்சேரிகளில் பாடும் ராகங்களை எடுத்துப் பாடாமல், கேட்போருக்கு

இசைகளின் இனிய சங்கமம்!

மிகவும் பிடித்தமான, அதேசமயத்தில் உருக்கமான ராகங்களை எடுத்துப் பாடவும் முடிவு செய்திருக்கிறேன்!’’

ஐஸ்வர்யா

‘‘பிரபல கர்னாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கொள்ளுப் பேத்தி நான். எம்.எஸ். பாட்டியும், என் பாட்டி ராதா விஸ்வநாதனும்தான் என் இசைப்பயணத்தை ஆரம்பித்து வைத்தார்கள். இசையோடு வீணையும் கற்றுக்கொள்கிறேன். என் 11 வயதில் அரங்கேற் றம் செய்தேன். ‘எம்.எஸ்-ன் கொள்ளுப்பேத்தி’ என்று எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. அதை

இசைகளின் இனிய சங்கமம்!

நிறைவேற்ற வேண்டும். பாட்டியின் பெயரைக் காப்பாற்ற வேண்டும். அதற்காகவே ஒரு நாளில் ஐந்து மணி நேரம் வரை பிராக்டீஸ் செய்கிறேன்!’’

பத்மா ஷங்கர்

‘‘நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் மும்பை. மூன்று வயதிலிருந்து என் அம்மா லட்சுமி நாராயணனிடம் இசை கற்க ஆரம்பித்தேன். அந்த வயதிலேயே எந்தப் பாடலுக்கு என்ன ஸ்வரம் என்று எளிதாக கண்டுபிடித்து விடுவேனாம். அதனால் கர்னாடகப் பாடலோடு சேர்த்து வயலினும் கற்றுக்கொள்ளச் சொல்லி, ராமகிருஷ்ணா ஷர்மா அவர்களிடம் அனுப்பிவைத்தனர். இவர் லால்குடி ஜெயராமனின் மாணவர். என்னுடைய இசை தாகத்தை தீர்த்துக்கொள்ள மும்பையில் போதுமான வழி கிடைக்காததால், மும்பையிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டேன். சென்னை ரசிகர்களிடம் பாராட்டு வாங்கிவிட்டால் போதும், உலகில் எங்கும் பாராட்டு வாங்கிவிடலாம். நான் வயலின் கச்சேரி செய்யப்போகிறேன். அனைவருக்கும் பிடித்தமான, பிரியமான ராகங்களையும் பாடப் போகிறேன்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு