Published:Updated:

‘‘புரிதல் இருந்தால், பிரிதல் இருக்காது!’’

இசைக்குயில்களின் இல்லறம்வே.கிருஷ்ணவேணி,   படம்: ஆ.முத்துக்குமார்

‘‘புரிதல் இருந்தால், பிரிதல் இருக்காது!’’

இசைக்குயில்களின் இல்லறம்வே.கிருஷ்ணவேணி,   படம்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:

டிசம்பர் மாத சங்கீத சீஸனில் இசையில் கரைந்துகொண்டிருக்கும் பாடகிகள் சுதா ரகுநாதனும், மஹதி ஸ்ரீகுமாரும்! மேடையில் இவர்களை நாம் அறிவோம்... ‘இவர்களின் வீடுகளில் எப்படி..?!’
- சொல்கிறார்கள் இசைக் குயில்களின் இணைக் குயில்கள்!

‘‘புரிதல் இருந்தால், பிரிதல் இருக்காது!’’

‘‘இதைவிட சந்தோஷம் இந்த உலகத்தில் இருக்கா என்னங்கிற நிறைவான வாழ்க்கை எனக்குக் கிடைக்கக் காரணம், சுதா!’’ என்று அன்பால் அறிமுகம் கொடுக்கிறார், சுதா ரகுநாதனின் கணவர் எம்.சி. ரகுநாதன்!

‘‘சுதாவை நான் ‘சுதாம்மா’னுதான் கூப்பிடுவேன். சுதாம்மாவுக்கும் எனக்கும் பெரியவர்கள் பார்த்து நடத்தின திருமணம். அவங்களோட சமயோஜித புத்தி, ஞாபகசக்தி, எல்லோரையும் கவரும் பேச்சு, டிரெஸ்ஸிங் சென்ஸ்... இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். தினமும் தவறாம யோகா பண்ணுவாங்க. கச்சேரிகளில் பிஸியா இருந்தாலும், குடும்பத்தையும் அழகா பேலன்ஸ் பண்ணுவாங்க. அவங்களுக்கு நிறைய மொழிகள் தெரியும். சூப்பரா சமைப்பாங்க. மத்தவங்களோட மனசு புரிஞ்சு நடந்துக்கிறதுல அவங்களுக்கு நிகர் அவங்கதான். உறவுகளில் யாருக்காவது பிறந்தநாள், திருமணநாள் என்றாலோ, விசேஷங்கள் வந்தாலோ... சம்பந்தப்பட்ட நபருக்குப் பிடிச்ச மாதிரி கிஃப்ட் வாங்க ரொம்ப மெனக்கெடுவாங்க. எங்க பசங்க கௌஷிக்கையும், மாளவிகாவையும் படிப்பிலும் பழக்கவழக்கத்திலும் பர்ஃபெக்ட்டா வளர்த்தெடுத்திருக்கிற ‘சூப்பர் மாம்’ அவங்க!

சுதாம்மா பாடுறதுல ‘நாட்டைக்குறிஞ்சி’ங்கற ராகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல ‘சொன்னதை செய்திட சாகசமா’ங்கற பாடல்ல வர்ற ‘என்னம்மோ என்னை மயக்கிவிட்டு’ங்கிற வரியை அவங்க பாடக் கேட்கும்போது, சொர்க்கத்தை செவியால் பார்த்த மாதிரி இருக்கும் எனக்கு. அவங்க ஒவ்வொரு முறை கச்சேரிக்குப் போகும்போது அந்த முகவரி, நேரம், கார் டிரைவர்னு எல்லாவிதத்திலும் அவங்களுக்கு 100 பர்சன்ட் உதவியா இருப்பேன். அவங்களோட எல்லா கச்சேரிகளுக்கும் போக எனக்கு நேரம் கிடைக்காது. என்றாலும், நேரம் கிடைக்கும்போது மிஸ் பண்ணாமல் போயிடுவேன். நான் ரொம்ப பெருமைப்படுற விஷயம், அவங்க வாங்கின ‘பத்மஸ்ரீ’, ‘சங்கீத கலாநிதி’, கலைமாமணி விருதுகள்தான்!'' என்று சொல்லும் ரகுநாதன்,

``என் பிசினஸ் டென்ஷன்ல நான் குரலை உயர்த்திப் பேசினா, சுதாம்மா அமைதியாயிடுவாங்க. அவங்க டென்ஷனா இருக்கும்போது நான் அமைதியாயிடுவேன். இந்தப் புரிதல்தான் எங்க வீட்டை இசையைப் போல தாலாட்டுது!’’ என்கிறார் சுதாவைப் பார்த்தபடியே!

‘‘புரிதல் இருந்தால், பிரிதல் இருக்காது!’’

ஹதியின் கணவர் ஸ்ரீகுமார், முகம் மற்றும் வாய் சீரமைப்பு நிபுணர். சென்னை, மதுரவாயல், மீனாட்சி பல் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர். அரும்பாக்கத்தில் கிளினிக் நடத்துவதுடன், பல்வேறு மருத்துவமனை களில் கன்சல்டன்ட்டாகவும் இருக்கிறார். ‘‘எங்களோடது அரேஞ்ச்டு கம் லவ் மேரேஜ்! ரெண்டு குடும்பமும் ஃப்ரெண்ட்ஸ். எனக்கு கர்னாடிக் மியூசிக்கில் ரொம்ப ஆர்வம். மஹதி அம்மாகிட்டதான் நான் புல்லாங் குழல் கத்துக்கிட்டேன். என் தம்பி ஸ்ரீநாத், மஹதி அப்பாகிட்ட கர்னாடிக் மியூசிக் கத்துக்கிட்டார். ரெண்டு குடும்பமும் எங்களுக்கு கல்யாணம் பண்றதா முடிவெடுத்து, நாலு வருஷம் கழிச்சுதான் திருமணம் நடந்தது. அந்த இடைப்பட்ட காலத்தை எங்க புரிதலை அடர்த்தியாக்க பயன்படுத்திக்கிட்டோம்.

கேரியர் உமன் பலரும், ‘கல்யாணத்துக்கு அப்புறம் நான் என் சுதந்திரத்தையே இழந்துட்டேன்’னு புலம்புறதுண்டு. அதனால, எந்த சந்தர்ப்பத்திலும் மஹதியோட கேரியர் பாதிக்கப்படக் கூடாதுங்கறதுல நானும், என் குடும்பமும் உறுதியா இருந்தோம். பேங்க்ல வேலை பார்க்கிற எங்கம்மா மல்லிகா பலராமன், மஹதியை மகளாதான் நடத்துவாங்க. பிப்ரவரி 27 என் பையன் சமர்த் பிறந்தான். பிப்ரவரி 16 வரைக்கும் கச்சேரி பண்ணினாங்க மஹதி. குழந்தை பிறந்த நாலு மாசத்துக்குள்ள மறுபடியும் மேடை ஏற ஆரம்பிச்சிட்டாங்க. அவ்வளவு சின்சியர். ரெண்டு பேருமே குழந்தையைப் பார்த்துக்கிறதுல சம பங்கு எடுத்துக்குவோம். குடும்பம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் ‘நாம்’ என்ற ஆங்கிளில்தான் ரெண்டு பேரும் யோசிப்போம்.
 
2001-ம் வருஷம் ‘காதல் ஜாதி’ படத்துல இளையராஜா சார் இசையில பாடின ‘என்னை மறந்தாலும்’ பாடல்தான் மஹதி பாடின முதல் திரையிசைப் பாட்டு. அந்த வாய்ஸ்... சான்ஸே இல்லை! அப்புறம் ‘சாமி’ படத்தில் இவங்க பாடின ‘ஐய்யய்யோ ஐய்யய்யோ பிடிச்சிருக்கு’ பாடலும், ‘பீமா’ படத்துல ‘முதல் மழை என்னை நனைத்ததே’ பாடலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

சூப்பரா சமைப்பாங்க. பனீர் வெஜ் டிஷ், ஃபிரைடு ரைஸ் இது ரெண்டும் மஹதியோட ஸ்பெஷல். மஹதியை நான் ‘குட்டு’, ‘மாய்’னு செல்லமா கூப்பிடுவேன். எனக்கு டிராயிங்ல இன்ட்ரஸ்ட். என்னோட ஒவ்வொரு ஓவியத்தையும் ப்ளஸ், மைனஸ் சொல்லி மெருகேற்றுவது மாய்தான்'' எனச் சொல்லும் ஸ்ரீகுமார் சொன்ன ஹேப்பி லைஃப் சீக்ரெட் -

‘‘எப்ப பேசணும்... எப்ப வாயை மூடிக்கணும்கிறத கணவன் - மனைவி ரெண்டு பேருமே தெளிவா தெரிஞ்சு வெச்சிருக்கோம்! இந்த மார்கழி சீஸனில் அவங்க ரொம்ப பிஸியா இருக்கறதால... குழந்தையோட ஃபுல் கேர் டேக்கரா பதவி ஏத்துக்கிட்டேன்'' என்று சொல்லி சிரிக்கிறார்.