Published:Updated:

நல்ல மனங்களின் சங்கமம்...

‘காதல்’ சரவணனின் கல்யாண வாழ்க்கை! பொன்.விமலா,   படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

நல்ல மனங்களின் சங்கமம்...

‘காதல்’ சரவணனின் கல்யாண வாழ்க்கை! பொன்.விமலா,   படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:

ன் நண்பனுக்குப் பெண் பார்க்கச் செல் கிறார் அவர். திருமணத்துக் கான ஏற்பாடுகள் நடந்துகொண் டிருக்க, கடைசி நேரத்தில் நண் பன் அந்தப் பெண் ணைத் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார். பரிதாபமாய்க் கதறிய பெண்ணை, தானே திருமணம் செய்து அரவணைக்கிறார் மாப்பிள்ளையின் நண்பர். இதில் இன்னும் ஒரு சிறப்பு, அந்தப் பெண், மாற்றுத்திறனாளி. அவரைக் கரம் பிடித்தவர், திரைப்பட நகைச்சுவை நடிகர் ‘காதல்’ சரவணன்!

நல்ல மனங்களின் சங்கமம்...

‘காதல்’ படத்தில் உதவி இயக்குநர் கதாபாத் திரத்தில், ‘ஹீரோ + வில்லன்... குட் காம்பினேஷன்’, ‘4 இட்லி கெட்டி சட்னி’ போன்ற வசனங்களால் நம்மைச் சிரிக்க வைத்தவர், சரவணன். சமீபத்தில் ‘மஞ்சப்பை’ படத்தில் பிளம்பராக நடித்திருக்கிறார். சரவணனின் மனைவி மலர் அவரைக் கைத்தாங் கலாகப் பிடித்துக்கொண்டிருக்க, சென்னை-கே.கே நகரில் இருக்கும் தன் இல்லத்தில் 'பளிச்' புன்னகை யுடன் நம்மை வரவேற்றார் சரவணன். ஒரு வயது மகன் விகாஷ் விளையாடிக்கொண்டிருந்தான்.

‘‘பெங்களூரு தாண்டி ஒரு சின்னக் கிராமம் தான் எனக்கு சொந்த ஊர். அப்பா இல்லை. காபி தோட்டத்துல கூலி வேலை பார்த்த அம்மா மட்டும்தான். எனக்கு 4 அக்கா, 2 அண்ணன்.
எல்லாருக்குமே கல்யாணம் ஆயிடுச்சு. நான்தான் கடைசிப் பொண்ணு. அஞ்சு வயசு வரை ஓடியாடி விளையாடிட்டிருந்த நான், போலியோவால அதுக்கு அப்புறம் தவழ்ந்து போக ஆரம்பிச்சேன். 12 வயசுல ஆபரேஷன் செஞ்ச பிறகு, கைத்தாங்கலா நடக்க முடிஞ்சது. பாதங்கள் மடங்குன நிலையிலதான் நடக்க முடியும்.

எட்டாவது வரைக்கும் திருச்சி ஹாஸ்டல். அதுக்கு மேல வசதி இல்லாததால, வீட்டில் இருந்தே நேரடியா பத்தாவது பரீட்சை எழுதி பாஸ் பண்ணினேன். அக்கா வீட்டுல தங்கி ப்ளஸ் டூ, அப்புறம் டீச்சர் டிரெயினிங்னு படிச்சேன். சமயங்களில் ஒருவேளை மட்டுமே சாப்பாடு இருக்கும். ஆனாலும் படிப்பு மேல இருந்த நம்பிக்கையால எல்லாம் கடந்து வந்தேன்.

வேலைக்குப் போகணும்கிற ஒரே கனவோட இருந்த என்னையும் தேடி ஒரு மாப்பிள்ளை வந்தப்போ, எனக்கும் கல்யாண ஆசை வந்தது.

நல்ல மனங்களின் சங்கமம்...

அவருக்கும் என்னைப் பிடிச்சிருந்தது. போன்ல நல்லா பேசுவாரு. ஆனா, கல்யாணம் நெருங்குறப்போ நகைப் பிரச்னையால திடீர்னு பேசுறதை நிறுத்திட்டாரு. செத்துடலாம்போல இருந்துச்சு. அப்போதான் மாப்பிள்ளைகூட நண்பரா வந்திருந்த இவர்கிட்ட கதறினேன். ஆறுதல் சொன்ன இவர், ‘என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?’னு கேட்டாரு. அதிர்ச்சி, ஆனந்தம், அழுகைனு கலங்கிப் போனேன். இவர் எனக்குத் தாலி கட்டின நிமிஷத்துல இருந்து, கண்ணீரும் கஷ்டமும் என்னை விட்டு நீங்கிப்போச்சு...”

- கண்களில் நீர் முட்டுகிறது மலருக்கு.

‘‘மலர்... பையன் எதையோ வாய்ல வைக்கப் போறான் பாரு...’’ என்று மனைவியைக் கண்ணீரிலிருந்து திசைதிருப்பிவிட்டு, நம்மிடம் பேசிய சரவணன், ‘‘சொந்த ஊரு தேனி. ஃபைனான்ஸ், சீட்டு கம்பெனி, பேக்கரி, வீடியோ கடைனு ஒரு 10, 15 தொழில்கள் பண்ணி எல்லாத்துலயும் நஷ்டத்தைப் பார்த்தேன். அப்போதான் ‘சிவகாமி கம்ப்யூட்டர் ஜோசியர்’ என் கண்ணுல பட்டாரு. ‘அடேய் தம்பி, மெட்ராஸ் பக்கம் ஓடு. உன் ராசிக்கு சினிமா ராசி இருக்குடா!’னு துரத்திவிட்டாரு. அலையோ அலைனு அலைஞ்சு, மொதல் மொதலா ‘ஜெமினி’ படத்துல ஒரு சின்ன ரோல். அப்புறம் ‘காதல்’ல இருந்து ‘மஞ்சப்பை’ வரைக்கும் வந்துட்டேன். எனக்கு அண்ணன் தம்பிக ஆறு பேரு. சினிமாதான் வாழ்க்கைனு கல்யாணமே பண்ணிக்காம இருந்துட்டேன். பிறந்ததுல இருந்து உடம்பாலயும் மனசாலயும் கஷ்டமே அனுபவிச்ச மலரை கல்யாணம் பண்ணிக்கிட்டது, என் ஜென்மத்துல நான் செஞ்ச உருப்படியான விஷயம். விபத்து யாருக்கு வேணும்னாலும் நடக்கலாம். கல்யாணத்துக்கு அப்புறம் பொண்டாட்டிக்கு ஆக்ஸிடென்ட் நடந்து இதுபோல ஆகியிருந்தா, விட்டுட்டுப் போயிடுவோமா?’’

- அன்பான பார்வையால் அரவணைக்கிறார் சரவணன்!