Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

ஓவியங்கள்: சேகர்

குட்டீஸ் குறும்பு!

ஓவியங்கள்: சேகர்

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு!

 200

குட்டீஸ் குறும்பு!

கறார் பேத்தி!

எங்கள் மகளும் மருமகனும் பால் பாக்கெட் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார்கள். அவர்கள் மகளுக்கு நான்கு வயதுதான் ஆகிறது. ஆனால், பெரியவர்கள் பேசுவதுபோல் பேசுவாள். ஒருநாள் அவள் எங்கள் வீட்டுக்கு வந்தபோது, ‘`ஒரு பால் பாக்கெட் எடுத்து வந்திருக்கலாம்ல...’’ என்று கேட்டேன். ‘`பால், பாக்கெட்டுக்கு ஆறு ரூபாய் கூடிப் போச்சு...  தெரியும்ல!” என்றாளே பார்க்கலாம். அதை  இப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பு பொங்குகிறது.

- எம்.செல்லையா, சாத்தூர்

குட்டீஸ் குறும்பு!

யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்!

எனக்கும் என் மகளுக்கும் கார், பஸ் என்று எதில் பயணம் செய்தாலும் வாந்தி வந்துவிடும். சென்ற வாரம் என் அக்கா மகளின் நிச்சயத்துக்கு விழுப்புரம் செல்ல, நெல்லை ரயில் நிலையத்தில் காத்திருந்தோம். என் தங்கையும் அவளுடைய 6 வயது மகனும் என்னுடன் இருந்தனர். ரயில் 2-ம் நம்பர் பிளாட்பாரத்துக்கு வருவதாக அறிவிப்பு வர, உடனே என் தங்கையின் மகன் ``ரயில் வந்துகொண்டிருக்கிறது. வாந்தி எடுப்பவர்கள் உடனடியாக எடுத்துவிடுங்கள்’’ என்று அறிவிப்புக் குரலிலேயே சொன்னதைக் கேட்டு... நாங்கள் மட்டுமில்லாமல்,  சுற்றி நின்றவர்களும் சிரித்துவிட்டனர்!

குட்டீஸ் குறும்பு!

- என்.குர்ஷித், பணகுடி

‘வெல் கோ!’

எனது வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் ஒரு பெண் தன் குழந்தையிடம் ``வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால், `வெல்கம்’ சொல்ல வேண்டும்’’ என்று கூறியிருந்தாள். ஒருமுறை சொந்தக்காரர்கள் ஊரிலிருந்து வந்தபோது, அந்தக் குழந்தை  அவர்களை ‘‘வெல்கம் அங்கிள், வெல்கம் ஆன்ட்டி!’’ என்று வரவேற்றது கண்டு மகிழ்ந்தனர். ஆனால், 2 நாட்கள் கழித்து அவர்கள் ஊருக்கு புறப்படும்போது ‘‘வரட்டுமா கண்ணு?’’ என்று கேட்க, அந்த சுட்டி, ‘வெல் கோ’ என்று கூறியதைக் கேட்டு திகைத்து நின்றனர்!

- சம்பத் குமாரி, திருச்சி