Published:Updated:

‘வல்லவளுக்கு ஹேண்ட் பேக்கும் ஆயுதம்தான்!’

‘செல்ஃப் டிஃபன்ஸ் செல்லம்மா’க்கள் ம.மாரிமுத்து, படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

‘வல்லவளுக்கு ஹேண்ட் பேக்கும் ஆயுதம்தான்!’

‘செல்ஃப் டிஃபன்ஸ் செல்லம்மா’க்கள் ம.மாரிமுத்து, படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

Published:Updated:
‘வல்லவளுக்கு ஹேண்ட் பேக்கும் ஆயுதம்தான்!’

‘அவன் என்னை ஃபாலோ பண்றான்ப்பா... பயமா இருக்கு!’னு ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேர்ள்ஸ் புலம்பினதெல்லாம் போயே போச்! ‘அவன் ஃபாலோவா செய்றான்... அவனை நான் என்ன செய்றேன் பார்!’னு ரோடு சைடு ரோமியோக்களை தைரியமா சமாளிக்கிற ஸ்மார்ட் கேர்ள்ஸ்தான் காலத்தின் தேவை!

‘‘அப்படியான சூழல்ல என்னவெல்லாம் செய்யணும்னு நாங்க சொல்றோம் கேளுங்க!’’னு லைனுக்கு வந்தாங்க, காரைக்குடி, டாக்டர் உமையாள் ராமநாதன் பெண்கள் கல்லூரி கேர்ள்ஸ்!

‘‘வல்லவளுக்கு ஹேண்ட் பேக்கும் ஆயுதம் தான்!’’னு ஆரம்பிச்ச பி.ஏ., ஆங்கிலம், மூன்றாமாண்டு படிக்கும் மீனாட்சி, ‘‘பொண்ணுங்க எப்பவும் கையில ஒரு ஹேண்ட் பேக் வெச்சுக்கணும். குறிப்பா, பஸ்ல போகும்போது. நம்ம வயசுப் பசங்ககூட பயந்து பயந்து சைட் அடிக்கிறதோட நிறுத்திக்குவாங்க. ஆனா, சித்தப்பா வயசுல இருக்கிறவனுங்க பண்ற சேட்டை இருக்கே... அதுல இருந்து நம்மை தற்காத்துக்கிற தைரியம்தான் அவசியம். கூட்டத்துல சாக்கோட சாக்கா இடிக்க வர்ற மாதிரி தெரிஞ்சதுனா, ஹேண்ட் பேக்கை வெச்சு அவனை ஒரே தள்ளு தள்ளிவிட்டுட்டு, நாம ஸ்ட்ராங்கா நின்னுக்கணும். திடீர்னு லேடி விஜய்காந்த் ஆகி, போட்டிருக்கிற ஹீல்ஸால அவன் கால்ல ஓங்கி ஒரு மிதியும் மிதிக்கலாம். அவனுக்கு நாம போல்டா ரியாக்ட் பண்றோம்னு தெரிஞ்சுடும். அப்புறம் நம்ம பக்கம் வர மாட்டான். ஆனா, அவனுக்குப் பயந்து ஒரு அடி, ரெண்டு அடியா நாம அமைதியா நகர்ந்து போனா, அட்வான்டேஜ் எடுத்துக்குவான்!’’னு சொன்னவங்க, 
 

‘‘ஆட்டோவில் தனியா போக வேண்டியிருந்தா, வீட்டுல யாருக்காச்சும் போன் பண்ணி, ‘இந்த ரூட்ல வந்துட்டு இருக்கேன். ஆட்டோ நம்பரா? ம்.. குறிச்சிக்கோங்க’னு டிரைவருக்குக் கேட்கிற மாதிரி தகவல் சொன்னா, அவர் கோச்சையாகிடுவாப்ல (பயந்துடுவாப்ல). நோட் இட்!’’னு டிப்ஸும் கொடுத்தாங்க மீனாட்சி.

‘வல்லவளுக்கு ஹேண்ட் பேக்கும் ஆயுதம்தான்!’

‘‘வீட்டுல எல்லாரும் ஊருக்குப் போயிருக்காங்க, கல்யாணத்துக்குப் போயிருக்காங்க, கோயிலுக்குப் போயிருக்காங்க, நாம தனியா இருக்கோம்னு க்ளூ கிடைச்சா போதும், இந்த வெட்டிப் பசங்க வீட்டை வீட்டைச் சுத்திசுத்தி வந்து வெறுப்பேத்துவாங்க. அப்போ என்ன பண்ணணும்னா... அப்பா, அண்ணா, அம்மா துணியை எல்லாம் வெளிய இருந்து பார்த்தா தெரியுற மாதிரி கொடியில் காயப் போடணும். அப்பா, அண்ணா துணிகளை ஹைலைட் செய்யணும்ங்கிறது குறிப்பிடத்தக்கது. அதேபோல, வீட்டு வாசல்ல, நிறைய செருப்புகளை போட்டு வெச்சுடணும். இங்கயும் அண்ணா, அப்பா செருப்புகளை ஹைலைட் செய்யணுங்கிறது குறிப்பிடத்தக்கது. ‘டேய்... அந்த வீட்டு ஜிம் பாய்ஸ் எல்லோரும் வீட்டுலதாண்டா இருக்காங்க’னு பசங்க சிதறி ஓடிடுவாங்கள்ல!’’னு சிரிக்கிறாங்க, பி.ஏ., ஆங்கிலம், மூன்றாமாண்டு படிக்கும் சாந்தகுமாரி.

பி.எஸ்ஸி., முதலாமாண்டு, பயோடெக் படிக்கும் மதுபாலா, இன்னும் டெக்னிக்கலா யோசிக்கிறாங்க. ‘‘ஹேண்ட்பேக்ல எப்பவும் ரெண்டு வெப்பன்ஸ் வெச்சுக்கோங்க. ஒண்ணு, குடை... இன்னொண்ணு, பெப்பர் ஸ்பிரே. தனியா நடந்து போறப்போ ஃபாலோ பண்றது, கிட்ட வந்து டீஸ் பண்றதுனு யாராவது பண்ணினா, முதல்ல குடையை எடுக்கிற மாதிரி எடுத்து, அதை அந்த சுமார் மூஞ்சி குமாரு மூஞ்சி மேல விரிச்சிவிடுங்க. அவன் தடுமாறும்போது சட்டுனு பெப்பர் ஸ்பிரேவை எடுத்து மூஞ்சில அடிச்சி விட்டுடுங்க. `ஏதோ ஆக்‌ஷன் சீக்வன்ஸ் மாதிரி இருக்கு, நம்மால முடியுமா'னு எல்லாம் தயங்காதீங்க கேர்ள்ஸ். வேணும்னா வீட்டுல ஒரு பொம்மைகிட்ட, பார்க்ல இருக்கிற சிலைகிட்டனு இதை பிராக்டீஸ் பண்ணி வெச்சுக்கோங்க. அப்புறம் ஃப்ரீ ஹேண்டா பண்ணி பிரமாதப்படுத்திடலாம்!’’னு `தம்ப்ஸ் அப்' காட்டுறாங்க மது.

‘‘பொண்ணுங்க கூட்டமாவோ சிங்கிளாவோ போகும்போது, மொபைல்ல சிச்சுவேஷனல் சாங் பிளே பண்ணி இம்ப்ரஸ் பண்ண நினைக்கிற இடியட்ஸுக்கு ஒரு வழி சொல்றேன். ‘அன்புள்ள சந்தியா’, ‘அஞ்சனா’னு அவனுங்க பிளே பண்ணினா, ‘நீ திங்கிற சோறுலதான்... உப்பே போடலையா’னு ஏற்கெனவே கட் செய்து மொபைல்ல சேவ் பண்ணி வெச்சிருக்கிற பாட்டை பிளே பண்ணணும். பையன் வாலைச் சுருட்டிடுவான்’’னு அலர்ட் செய்றாங்க பி.ஏ., ஆங்கிலம், இறுதியாண்டு படிக்கும் சோஃபியா.

பி.ஏ., ஆங்கிலம், இறுதியாண்டு படிக்கும் கார்த்திகா, ‘‘ஏதாச்சும் ராங் கால், மெசேஜ் வந்தா, ‘போலீஸ் டிப்பார்ட்மென்ட்ல இருக்கிற எங்க மாமாகிட்ட (சும்மாச்சுக்கும்) உன் நம்
பரைக் கொடுத்து, நீ எந்த ஊரு, எந்தத் தெருவுல இருந்தாலும் அட்ரஸ் டிரேஸ் பண்ணி, ரெண்டே நாள்ல ஸ்டேஷன்ல உட்கார வைக்கிறேன் பாருடா!’னு போல்டா வார்ன் பண்ணுங்க...’’

- தில்லா பேசினாங்க கார்த்திகா!

கடைசியா, எல்லா கேர்ள்ஸும் கோரஸா கேட்டாங்க... ‘‘என்ன பாய்ஸ்... கண்ணு ‘வேர்க்குதா’?!’’