Published:Updated:

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

ஷாலினி நியூட்டன்

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

ஷாலினி நியூட்டன்

Published:Updated:

இந்தியாவில் அதிகம் லைக்குகளை  பெற்ற டீஸர்!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடிப்பில் பொங்கல் சிறப்புத் திரைப்படமாக வெளியாக உள்ள ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமா பிரபலங்கள் பலரும் அதை தங்களது சமூக வலை பக்கங்களில் ஷேர் செய்து தங்களது கருத்துகளை வெளியிட்டனர். 24 மணி நேரத்தில் ‘ஐ’ படத்தின் டீஸர் 14 லட்சத்தைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸர் கணக்கீட்டளவில் அதைவிட சற்றுக் குறைவுதான். என்றாலும், இதுவரை அதிக லைக்குகள் பெற்ற தமிழ் பட டீஸராக ‘ஐ’ படத்தின் டீஸர் 41 ஆயிரம் லைக்குகளைக் கடந்திருந்தது. தற்போது இந்த சாதனையை முறியடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ டீஸர், 68 ஆயிரம் லைக்குகளை தொட்ட முதல் இந்தியப் படமாகவும் பதிவாகியுள்ளது. இந்த டீஸர் 30 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து டிரெண்டாகியுள்ளது.

சூப்பர்!

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

50,000 பேர் இணைந்து நடத்திய கின்னஸ் சாதனை!

டிசம்பர் 7-ம் தேதியை 1949 முதல் நாம் கொடி தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த வருட கொடி நாள் அன்று, ரோட்டரி இன்டர்நேஷனல் சங்கம் சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் காலை 8.30 மணிக்கு 50,000 பேர் பங்கேற்ற மனித கொடி சாதனை முயற்சி நடைபெற்றது. அவர்கள் அனைவரும் வண்ண அட்டைகளை மூவண்ணக் கொடி வடிவில் தொடர்ந்து 5 நிமிடங்கள் வரை கைகளில் ஏந்தியிருந்ததன் மூலம், இது உலக சாதனையாக கின்னஸில் இடம்பிடித்துள்ளது. இந்தச் சாதனை முயற்சியை கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்துள்ளது. இதற்கு முன்பு பாகிஸ்தானில் உள்ள லாகூரில் கடந்த பிப்ரவரியில் 28,957 பேர் சேர்ந்து உருவாக்கிய மனித தேசியக் கொடியே உலக சாதனையாக இருந்துவந்தது. இந்தச் சாதனை இந்தியாவில், தமிழ் மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

சல்யூட் சிட்டிசன்ஸ்!

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

நடிகருக்கு மரியாதை!

பெங்களூருவில் உள்ள கந்தீரவா ஸ்டுடியோவில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் நினைவாலய திறப்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சரோஜாதேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 7 கோடி மதிப்பில் 800 இருக்கைகள் கொண்ட திறந்தவெளி அரங்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது நினைவாலயம். இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும் போது, ‘என் வாழ்நாளில் ஒரே ஒரு மனிதரிடம் மட்டுமே ஆட்டோகிராஃப் வாங்கியிருக்கிறேன். அவர்தான் ராஜ்குமார்!’ என்றார் உருக்கமாக!

சூப்பர் ஆட்டோகிராஃப்!

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!
ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

சாகித்ய அகாடமி கவிதை அரங்கில் கபிலன் வைரமுத்து!

டிசம்பர் 6-ம் தேதி கொச்சியில் நடைபெற்ற சாகித்ய அகாடமியின் தெற்கு - வடகிழக்கு கவிதை விழாவில் கலந்துகொண்டு கவிதை வாசிக்க, தமிழகத்தில் இருந்து அழைக்கப்பட்டிருந்தார்கள்... எழுத்தாளர் கபிலன் வைரமுத்துவும், கவிஞர் ரவிசுப்ரமணியமும். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளம் இலக்கியவாதிகளும், அனுபவம் மிக்க எழுத்தாளர்களும் தங்கள் கவிதைகளை மேடையேறி பகிர்ந்துகொண்டு மொழியின் மூலமாக இந்தியாவின் பல்வேறு சமூக பண்பாட்டு உறவுகளைப் பலப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாக நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்துறை பிரமுகர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் கலந்துகொண்ட இளம் கவிஞர், கபிலன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துகள்!

20 பேருக்கு சவால் வைத்த த்ரிஷா!

சமந்தா, தமன்னாவைத் தொடர்ந்து த்ரிஷா தாம்பரம் அருகில் உள்ள முடிச்சூரில் புதிதாக திறக்கப்பட உள்ள விலங்குகள் காப்பகத்தில் EFI (Environment Foundation of India) உடன் இணைந்து ‘க்ளீன் இந்தியா’ பணி செய்தார். சில நாட்களுக்கு முன்பு, சமந்தா, த்ரிஷாவுக்கு ‘க்ளீன் இந்தியா’ சவால் வைத்தார். அதன்படி சவாலை ஏற்றுக்கொண்ட த்ரிஷா இப்போது ‘க்ளீன் இந்தியா’ பணியை செய்து முடித்ததுடன் 20 நடிகர்களுக்கு இந்தச் சவாலை வைத்துள்ளார். அதில் CCI டீமில் உள்ள விஷால், விக்ராந்த், விஷ்ணு, ஜீவா, சிவா, சாந்தனு, பிருத்வி, ஆர்யா, ஷாம், காந்த், பரத், ஜித்தன் ரமேஷ், ரமணா உள்ளிட்ட 19 பேரும், இவர்களுடன் ‘ஜெயம்’ ரவியும் அடக்கம்! 

சபாஷ் த்ரிஷ்!

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!
ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

விரல்நுனியில் உலகின் அதிமேதாவி!

ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகளும் சரி, ஆய்வுகளும் சரி இன்றளவும் பல விஞ்ஞானிகளுக்கும் அறிவியல் வல்லுநர்களுக்கும் அறிவுக்களஞ்சியமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தினர் தன் வசம் உள்ள ஐன்ஸ்டீன் பற்றிய தகவல்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக மாற்றி எளிதாக தேடக்கூடிய வகையில் வடிவமைத்துள்ளனர். இணையத்தில் எத்தனையோ வடிவில் ஐன்ஸ்டீன் பற்றிய தகவல்கள் இருப்பினும் டிஜிட்டல் முறையில் இதுவே முதல்முறை. அறிவியலில் ஆர்வமுள்ளோருக்கு இந்தத் தளம் பொக்கிஷம்!

ஐன்ஸ்டீன் போற்றி!