Published:Updated:

திட்டு வாங்கிய கைக்கடிகாரங்கள்!

பொன்.விமலா, ப.சூரியராஜ், சி.சந்திரசேகரன்படங்கள்: பா.காளிமுத்து, நா.ராஜமுருகன், ர.நந்தகுமார்

திட்டு வாங்கிய கைக்கடிகாரங்கள்!

பொன்.விமலா, ப.சூரியராஜ், சி.சந்திரசேகரன்படங்கள்: பா.காளிமுத்து, நா.ராஜமுருகன், ர.நந்தகுமார்

Published:Updated:

 அவள் விகடனும், ‘சத்யா’ நிறுவனமும் இணைந்து மதுரையில் நடத்திய ‘ஜாலி டே’ திருவிழாவுக்கு ‘சூப்பர்’ வாஷிங் பவுடர் நிறுவனமும் பலம் சேர்க்க, டிசம்பர் 7 அன்று ராஜா முத்தையா மன்றம் கொண்டாட்டத்தில் திக்குமுக்காடிப் போனது!

முந்தைய நாள் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட முன்தேர்வுப் போட்டி களில் கலந்துகொண்டபோதே, ‘நாளைக்கு எப்போ விடியும்னு இருக்கு!’ என்று தங்கள் ஆவலைச் சொல்லிப் போனார்கள் வாசகிகள். மறுநாள் ஆயிரம் இருக்கைகளுக்கு மேல் கொண்ட ராஜா முத்தையா மன்றம் நிரம்பி வழிய, சும்மா கறி தோசை போல சுடச்சுடவும், ஜிகர்தண்டா போல சிலுசிலுவென்றும் நடந்த ‘ஜாலி டே’யின் கலர்ஃபுல் நிமிடங்கள் இங்கே!

திட்டு வாங்கிய கைக்கடிகாரங்கள்!

தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, ரங்கஸ்ரீ மற்றும் புவனேஸ்வரி வரவேற்பு நடனமாடி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர். உடனடியாக ஒரு சர்ப்ரைஸ் போட்டி வைத்து கியர் ஏற்றினார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுபாஷினி. ‘நெத்தியில பெரிய பொட்டு வெச்சிருக்கிறவங்க எல்லாரும் மேடைக்கு வாங்க’ என அவர் அழைத்ததும், மேடையை நிறைத்தனர் வாசகிகள்!

அடுத்த சரவெடி, ‘டான்ஸ் மச்சி டான்ஸ்’. முதற்கட்டப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் மேடையேறி ‘ரிங்க ரிங்கா’, ‘ஜிங்குனமணி’ என வெளுத்தெடுக்க, அரங்கத்
தில் உற்சாகம் பற்றிக்கொண்டது. போட்டி யாளர்களுக்குப் போட்டியாக மேடைக்கு கீழே வாசகிகளும் ஆடித் தீர்க்க... கொலுசு, வளையல் சத்தங்களோடு விசில்களும் பறந்தது ஹைலைட்! ‘ஏன் கீழயே ஆடுறீங்க... மேடைக்கு வாங்க ஆடலாம்...’ என்று சுபாஷினி வாசகிகளை மேடைக்கு அழைத்தார். ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 100 வாசகிகளுக்கும் மேல் மேடையில் ஆசை தீர ஆடித் தீர்த்ததுடன், ‘அடுத்த பாட்டு..?’ என்று அரை மணி நேரத்துக்குப் பிறகும் அசராமல் கேட்டது, நம்மை அசர வைத்தது!

திட்டு வாங்கிய கைக்கடிகாரங்கள்!

‘இது 3டி கோலமா? அப்போ பார்க்கிறவங் களுக்கு 3டி கண்ணாடி கொடுப்பீங்களா?’ என்று தோழிகள் சந்தோஷமாகக் கதைத்துக்கொண்டே நடந்த ‘ரங்கோலி’ போட்டி, ஒபாமா மனைவி பெயர், குளிர்சாதனப்பெட்டியின் மினிமம் கொள்ளளவு என விறுவிறுப்பாக நடந்த ‘வினாடி - வினா’ போட்டி, ‘நான் ஆணை யிட்டால் - லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள - அது நடந்துவிட்டால் - கிவ் மீ எ உம்மா’ என பாடல்கள் கலக்கலாக கலக்கப்பட்டு நடந்த ‘உல்டா - புல்டா’ நடனப் போட்டி, இன்னும் ‘சூப்பர் ஹேர் ஸ்டைல்’, ‘மெஹந்தி’, ‘என் ஃப்ரெண்டை போல யாரு மச்சான்’ என அனைத்துப் போட்டிகளிலும் வாசகிகள் வியக்கவைக்க, வெற்றியாளர்களுக்கு மட்டுமல் லாமல், கலந்துகொண்ட அனைத்துப் போட்டி யாளர்களுக்கும் வழங்கப்பட்டன பரிசுகள்!

‘ஜாலி டே’-யை முன்னிட்டு, மதுரை, மேல மாசி வீதியில் உள்ள ‘சத்யா’ ஷோ ரூமில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற வாசகிகளுக்கு, `ஜாலி டே' மேடையில் பரிசுகள் வழங்கப்பட, முத்தாய்ப்பாக, ‘சத்யா’ வழங்கிய பம்பர் பரிசான ஃப்ரிட்ஜை ஆனந்த அதிர்ச்சியுடன் பெற்றுக்கொண்டார், வாசகி வாசுகி!

திட்டு வாங்கிய கைக்கடிகாரங்கள்!

‘சூப்பர்’ வாஷிங் பவுடர் சார்பில் நடத்தப்பட்ட, திருக்குறளில் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே ‘சூப்பர்’ சேர்த்துச் சொல்லும் போட்டியில், ‘சூப்பர்’ குறளை ‘சூப்பர்’ சூப்பராக ‘சூப்பர்’ சொல்லி ‘சூப்பர்’ பரிசுகளை வென்றனர் ‘சூப்பர்’ வாசகிகள்... ‘சூப்பர்’!

திருநெல்வேலி வாசகி சுந்தரி எஸ்தர், ‘திருநெல்வேலியில இருந்து தோழிகள் 15 பேர் சேர்ந்து, நேத்து காலையிலயே ‘ஜாலி டே’வுக்காக மதுரைக்கு வந்துட்டோம்!’ என்று ஆச்சர்யம் கொடுத்தார். இன்னும் தூத்துக்குடி, புதுச்சேரி என்று தொலைதூரம் கடந்து நம் குடும்பக் கொண்டாட்டத்துக்காக வந்திருந்த வாசகிகள் நிறைய!

விழாவுக்கு வந்திருந்த அனைத்து வாசகிகளுக்கும் ‘சத்யா’ வழங்கிய 500 ரூபாய்க்கான பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன. அன்று நம் வாசகிகளிடம் திட்டு வாங்கின... அவர்களின் கைக் கடிகாரங்கள்! நேரம் வேகமாகச் சென்றுவிட்டதாம்!

சுஹாசினி - கணேஷ் கூட்டணியின் சரவெடி!

‘தெய்வமகள்’ சீரியலின் ‘வினோதினி- மூர்த்தி’ ஜோடியான சுஹாசினி-கணேஷ்... தலைவாழை விருந்தில் மில்க் ஸ்வீட் போல, `ஜாலி டே’யை இன்னும் கலகலப்பாக்கினர்! இந்த சீரியல் காமெடி தம்பதி, மேடையிலும் ‘தம்பதி’யாக வலம் வந்து சரவெடி கொளுத்த, ‘‘என்ன அடிக்கடி சமையல் கட்டுக்கு போயிட்டு வர்றீங்க..?’’ என்று சுஹாசினி முறைக்க, ‘‘இல்ல வினோ... டாக்டர்தான் அடிக்கடி சுகர் இருக்கானு செக் பண்ணிக்கச் சொன்னார்!’’ என்று கணேஷ் முழிக்க, அரங்கம் ரசித்துச் சிரித்தது!

திட்டு வாங்கிய கைக்கடிகாரங்கள்!

‘எனக்கு இன்னொரு முகமும் இருக்கு!’ என்று மைக் எடுத்த சுஹாசினி, ‘ஹூஸ் த ஹீரோ’ பாடல் பாட, ‘ ‘வினோ’வா இது..?’ என்று அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். அடுத்ததாக அவர் ‘தகதகதக தகதகவென ஆடவா’ என குரலெடுக்க, தோழிகள் பிரமித்தனர். தொடர்ந்து, கிட்டத்தட்ட முக்கால்வாசி அரங்கம் இருக்கையைவிட்டு எழுந்து ஆட, பாட்டின் க்ளைமாக்ஸில் ஹேர்பேண்டை எல்லாம் கழற்றிவிட்டு சாமியாட்டம் ஆடினார்கள் தோழிகள்!

வெஸ்டெர்ன், மெலடி, டிவோஷனல் என சுஹாசினி பாடிய மூன்று பாடல்களும், `ஜாலி டே’யின் ஸ்பெஷல் ட்ரீட்!