Published:Updated:

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்!

ம.பிரியதர்ஷினி

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்!

ம.பிரியதர்ஷினி

Published:Updated:

கிறிஸ்துமஸை உற்சாகமாக கொண்டாடி மகிழ உதவும் விதத்தில், `எக்லெஸ் மினி சாக்லேட் கப் கேக்' மற்றும் `கிறிஸ்துமஸ் ட்ரீ மெரின்க்யூஸ்' ஆகியவற்றை செய்யும் முறையை வழங்குகிறார்கள் சிங்கப்பூரைச் சேர்ந்த காயத்ரி சரவணன் (ஈஸிகுக்புக் பிளாக்) மற்றும் சென்னையைச் சேர்ந்த திவ்யா பிரமிள் (யு டூ கேன் குக் பிளாக்). இருவரும் ஃபுட் பிளாக் ஸ்பெஷலிஸ்ட்டுகள்.

எக்லெஸ் மினி சாக்லேட் கப் கேக்

தேவையானவை:

 மைதா மாவு - ஒன்றரை கப், சர்க்கரை - ஒரு கப், ஸ்வீட் இல்லாத கோகோ பவுடர் - கால் கப், வெஜிடபிள் ஆயில் - அரை கப், பால் - ஒரு கப், பேக்கிங் சோடா - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், ஆப்பிள் சிடர் வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன்.

பட்டர் க்ரீம் தயாரிக்க:

உப்பில்லாத, ரூம் டெம்ப்ரேச்சருக்கு கொண்டு வரப்பட்ட வெண்ணெய் - 100 கிராம், சர்க்கரை பவுடர் - 100 கிராம், வெனிலா எசன்ஸ் - சில துளிகள், நன்கு அடித்த க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், கோகோ பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்.

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்!

செய்முறை:

`பேக்கிங் அவன்'-ஐ 350 டிகிரி செல்ஷியஸில் சூடுபடுத்தி வைத்துக்கொள்ளுங்கள். மினி கப் கேக் பேன் ஒவ்வொன்றின் உள்ளேயும் கப் கேக் லைனரை வைத்து நன்கு அழுத்திவிடுங்கள். வாய் அகன்ற பவுலில் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, பேக்கிங் சோடா, ஸ்வீட் இல்லாத கோகோ பவுடரை சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளுங்கள். மற்றொரு பவுலில் பால், வெனிலா எசன்ஸ், ஆப்பிள் சிடர் வினிகர், எண்ணெய் (வெஜிடபிள் ஆயில்) ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

இனி கலந்து வைத்த மாவு கலவையை எண்ணெய் கலவை பவுலில் ஊற்றி கட்டிபடாமல் நன்கு அடித்து கலக்குங்கள். இந்தக் கலவையை கப் கேக் லைனரின் உள்ளே கால் பாகத்துக்கு நிரப்புங்கள். இப்படி எல்லா கப்புகளிலும் கேக் கலவையை ஊற்றி வையுங்கள்.

இந்த கேக்கை பேக்கிங் `அவனின்' உள்ளே வைத்து 16 முதல் 18 நிமிடம் வரை வேகவிடுங்கள். அல்லது டூத்பிக்கால் கேக்கின் நடுவே அவ்வப்போது குத்திப் பாருங்கள். மாவு ஒட்டாமல் டூத்பிக் வெளியே வரும்போது கேக்கை `அவன்'-ல் இருந்து எடுத்துவிடுங்கள்.

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்!

`அவன்'-ல் இருந்து வெளியே எடுத்த `பேன்'-ஐ கூலிங் ரேக்கில் (கம்பிகளால் ஆன ஒரு ஸ்டாண்ட்) வைத்து ஆறவிடுங்கள். ஆறியதும் கேக் லைனரோடு கேக்கை கப் மோல்டுகளில் இருந்து தனியாக எடுத்துவையுங்கள்.

ஒரு பவுலில் க்ரீமோடு வெண்ணெய்யை சேர்த்து நன்கு நுரைத்து வரும் வரை அடித்து கலக்குங்கள். இத்துடன் வெனிலா எசன்ஸ், கோகோ பவுடர், சர்க்கரை பவுடர் சேர்த்து நன்கு அடித்து கலக்குங்கள். இவற்றை க்ரீமுக்கான கோனில் போட்டு கேக்கின் மேலே டெகரேட் செய்து பரிமாறுங்கள்.

கிறிஸ்துமஸ் ட்ரீ மெரின்க்யூஸ்

தேவையானவை:

முட்டையின் வெள்ளைக்கரு - 2 முட்டையினுடையது (சுமார் 75 கிராம்), சர்க்கரை பவுடர் - 125 கிராம், வெனிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன், பைப்பிங் பேக் - 1 (கேக் மீது க்ரீம்களை டிசைன் செய்யப் பயன்படுவது; முக்கோண வடிவில் இருக்கும் இந்த பேக்கின் உள்ளே மாவை ஊற்ற வேண்டும். இது டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்), பைப்பிங் நாசில் - 1, பிங்க் மற்றும் க்ரீன் கலர் ஃபுட் எசன்ஸ் - சிறிதளவு

செய்முறை:

முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பவுலில் சேர்த்து எலெக்ட்ரிக் பீட்டரால் மீடியமான ஸ்பீடில் மூன்று முதல் நான்கு நிமிடம் நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள். இதனை அடித்து கொண்டிருக்கும்போதே ஒவ்வொரு டேபிள்ஸ்பூனாக சர்க்கரை பவுடரை சேர்த்து அடித்து கிளறிக்கொண்டே இருங்கள். இதில் ஃபுட் எசன்ஸை சேர்த்து தொடர்ந்து அடித்து கலக்குங்கள். இந்தக் கலவையை கொஞ்சம் எடுத்து இரண்டு கைகளால் தேய்த்து பாருங்கள். கலவை மிருதுவாக இருந்தால் மெரின்க்யூஸ் ரெடி என்று அர்த்தம். இந்த கலவையை ஒரு பவுலில் கொட்டி, அதனை மூன்று போர்ஷன்களாக பிரியுங்கள்.

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்!

ஒவ்வொரு போர்ஷனையும் தனித்தனியாக ஃபுட் கலர் சேர்த்து மீண்டும் அடித்து கலக்கினால் கலர் சமமாக மாவில் பரவி நிற்கும். பேக்கிங் அவனை 95 டிகிரியில் பதினைந்து நிமிடம் சூடு படுத்துங்கள். பேக்கிங் டிரேயின் உள்ளே பர்ஸ்மென்ட் பேப்பரை விரித்துக்கொள்ளுங்கள். பைப்பிங் பேக்கின் அடிப்பகுதியை அரை இன்சுக்கு வெட்டிக் கொள்ளுங்கள். அந்த பேக்கின் உள்ளே பைப்பிங் நாசிலை போட்டால் அது  பைப்பிங் பேக்கின் உள்ளே வெட்டப்பட்ட இடத்தில் உட்கார்ந்துகொள்ளும். (பார்ப்பதற்கு பேனா முனை போன்ற வடிவில் இருக்கும்).  இப்போது பைப்பிங் பேக்கின் உள்ளே எதாவது ஒரு ஃபுட் கலர் கலந்த  மாவை ஊற்றி பேக்கின் மேலிருந்து கீழாக அழுத்தி பர்ஸ்மென்ட் பேப்பரின் மேலே கிறிஸ்துமஸ் ட்ரீ போன்று  பிழிந்துகொள்ளுங்கள். மீதமிருக்கும் ஃபுட் கலர் மாவுகளையும் இதேபோல் கிறிஸ்துமஸ் ட்ரீ போல பர்ஸ்மென்ட் பேப்பரில் பிழிந்துகொள்ளுங்கள். இதனை 'அவன்'-ல் உள்ள ரேக்கில் வைத்து மூடி ஒன்றரை முதல் ஒன்றேமுக்கால் மணி நேரம் வைத்து வேகவிடுங்கள். நாற்பது நிமிடம் ஆகும் போது `அவன்'-னின் கதவைத் திறந்து கலவை வெந்துவிட்டதா என்று செக் செய்துகொள்ளுங்கள்.  கலவை வெந்து மெரின்க்யூஸ் மொறுமொறு என்று ஆகும்போது பர்ஸ்மென்ட் பேப்பரில் இருந்து மெல்ல மேலே எழும்பும். `அவன்'-ஐ  அணைத்து ரேக்கில் இருந்து பேக்கிங் டிரேவை எடுத்து வெளியே வைத்து ஆறவிடுங்கள். ஆறிய மறுநிமிடம் அதனை ஏர்டைட் கன்டெய்னரில் போட்டு மூடிவிட்டால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.