Published:Updated:

சர்வீஸ் `நான்-ஸ்டாப்!'

பொன்.விமலா, படம்: ஜெ.வேங்கடராஜ்

சர்வீஸ் `நான்-ஸ்டாப்!'

பொன்.விமலா, படம்: ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:

''கல்யாணத்துக்கு முன்ன ஒரு ஸ்கூல்ல டீச்சரா வேலை பாத்துட்டு இருந்தேன். கல்யாணத்துக்கு அப்புறம் வயசான மாமியார், மாமனாரைப் பாத்துக்கணும்னு வேலையை விட்டுட்டேன். அதுவும் நல்லதுதான். இல்லைனா... இன்னிக்கு நான் ஒரு பிசினஸ் உமன் ஆகியிருக்க முடியாது!''

 புன்னகையும் வார்த்தைகளும் கோத்துப் பேசும் தமிழரசிக்கு வயது 46.

ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் என சொல்லக்கூடிய வேலைகளை, சில நேரங்களில் பெண்கள் கையில் எடுத்து, அவர்களை விட சிறப்பாக செய்து அசத்துவார்கள். அப்படியான ஒரு தொழிலைக் கையில் எடுத்து, பாராட்டுகளையும் வெற்றிகளையும் குவித்துக் கொண்டிருக்கிறார், 'வானபி ஏஜென்சீஸ்’ உரிமையாளரான தமிழரசி. மின்சாரம் தட்டுப்படும் நேரங்களில் பயன்படுத்தக்கூடியயு.பி.எஸ் கருவியை விற்பனை செய்வதுடன், நேரடியாக வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சென்று, சர்வீஸ் செய்துகொடுக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்வீஸ் `நான்-ஸ்டாப்!'

''20 வருஷத்துக்கு முன்ன கல்யாணம் ஆச்சு. அடுத்தடுத்து ரெண்டு பெண் குழந்தைகள், கூடவே வயசான மாமியார், மாமனாரைப் பார்த்துக்கிற பொறுப்புல, வேலையை விட்டேன். நான் அப்படியே முடங்கிடக் கூடாதுனு, என் கணவர்தான் அடிக்கடி சொல்லிட்டே இருப்பார். ஏதாவது பிசினஸ் பண்ணலாமேன்னு முடிவு பண்ணினோம்.

2006-ம் வருஷம் ஆரம்பத்துல மின்சாரத் தட்டுப்பாடு தமிழ்நாட்டுல தலைவிரித்தாட ஆரம்பிச்சுது. அப்பதான் இந்த யோசனை வந்துச்சு. ஆரம்பத்துல தனியார் பேட்டரி நிறுவனத்துல வினியோகஸ்தராக முடிவு பண்ணி, அவங்க நடத்துன பயிற்சிக்குப் போனேன். ஒரு மாசத்துல 5 யு.பி.எஸ் விற்பனை செய்யணும்கிறது, அவங்க எனக்குக் கொடுத்த டார்கெட். நான் ஒன்பது விற்றுக் கொடுத்தேன். என் உழைப்பு மேல எனக்கே நம்பிக்கை வர, முகலிவாக்கத்துல 2006-ம் வருசம் 'வானபி ஏஜென்சீஸ்’ ஆரம்பிச்சுட்டேன்!''

துல்லியமான கணிப்பும் தளராத முயற்சியும் இருந்ததால், தமிழரசி சீக்கிரமே தொழில் முனைவோர் ஆகியிருக்கிறார்.  

''கணவரோட புரிதலும் ஒத்துழைப்பும் ஊக்கம் கொடுத்துட்டே இருந்தது. ஒரு தமிழ் ஆசிரியையா இருந்த நான், யு.பி.எஸ் டிஸ்ட்ரிபியூட்டர். விற்பனை மட்டுமில்லாம, பயிற்சி மூலமா சர்வீஸ் பண்ணவும் கத்துக்கிட்டு, வாடிக்கையாளர்களோட வீடுகளுக்கே சர்வீஸ் பண்ணப் போக ஆரம்பிச்சப்போ, என்னை நினைச்சு எனக்கே பெருமையா இருந்தது. ஆரம்பத்துல எப்படி வொயரிங் பண்றதுனுகூட தெரியாது. நான் நியமிச்சிருந்த ரெண்டு எலெக்ட்ரீஷியன்கள் கூடவே போய் எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.

நாமதான் வேலைக்கு ஆள் வெச்சுருக்கோமே, எதுக்கு சர்வீஸ் ஏரியாவுக்குப் போகணும்னு ஒருநாளும் யோசிச்சதே இல்ல. கடை விளம்பரத்துக்காக வீடு வீடா போய் நோட் டீஸ் கொடுத்தது, யு.பி.எஸ் கனெக்‌ஷன் வேலைகளுக்காக ஏணியில் ஏறியது, வாடிக்கையாளர்களோட வீட்டு அட்ரஸ் தெரியாம ரோட்டில் அலைஞ்சது, சில வீடுகளில் நாய் துரத்தினதுனு இதில் நிறைய சங்கடங்களைக் கடந்திருக்கேன். ஆனாலும் அந்த தொழில்முறை சங்கடங்களுக்கு, என்னை ஒரு பெண்ணா நினைச்சு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறதில்ல. தொழில்ல இதெல்லாம் சகஜம்தான்னு கடந்து போயிட்டே இருப்பேன்''

- படபடப் பேச்சு தமிழரசிக்கு.

''பெரிய முதலீடு எதுவும் செய்யல. ஆரம்பத்துல, பேட்டரியை வாங்கி விக்கிறதுல கிடைச்ச லாபத்தைதான் தொழிலுக்குப் போட்டேன். ஒரு கடைக்கு முதலாளியா இருக்குறதோட, இப்பவும் கஸ்டமருக்குப் பிடிச்ச சர்வீஸ் உமனா இருக்குறதுல எனக்கு பெருமைதான். 10 வருஷமா இந்தத் தொழில்ல இருக்கேன். நிறைவா சம்பாதிச்சிருக்கேன். என் ரெண்டு பொண்ணுங்களையும் நல்லா படிக்க வெச்சு, அவங்க திருமணத்துக்கான சேமிப்பும் பண்ணிட்டேன்!'' என்ற தமிழரசி,

''எந்தத் தொழிலை எப்ப பண்ணினா ஜெயிக்கலாம் என்ற சமயோசித புத்தி இருந்தா போதும், நாம அந்தத் தொழில்ல ஜெயிக்கலாம். இப்ப மின் தட்டுப்பாடு குறைஞ்சிருக்கு. இந்தத் தொழில் இனிமே நல்லா போகுமானு பயப்படாம கூடவே அடுத்த தொழில் என்னன்னு யோசிச்சுப் பாத்தேன். வாட்டர் லெவல் கன்ட்ரோல்னு சொல்லக்கூடிய கருவியை இப்ப விற்பனை செய்துட்டு இருக்கேன். இதோட பயன்பாடு என்னன்னா, வாட்டர் டேங்க்ல தண்ணீர் நிரம்பிட்டா, இந்தக் கருவி தானா தண்ணீர் மோட்டாரை ஆஃப் பண்ணிடும். அதேபோல தண்ணீர் இல்லைனா, தானாவே ஆன் ஆகி தண்ணீர் தொட்டியை நிரப்பிடும். மக்கள் நிச்சயம் இதுக்கும் வரவேற்பு தருவாங்க!''

நம்பிக்கையுடன் கைகுலுக்குகிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism