Published:Updated:

"பெண்களே, நாலு குழந்தை பெத்துக்கோங்க...”

ஒரு கமெண்ட்...பல பதிலடி!பொன்.விமலா, கே.அபிநயா சு.ராஜா, ர.நந்தகுமார், தி.கௌதீஸ்   படங்கள்: ச.வெங்கடேசன்

"பெண்களே, நாலு குழந்தை பெத்துக்கோங்க...”

ஒரு கமெண்ட்...பல பதிலடி!பொன்.விமலா, கே.அபிநயா சு.ராஜா, ர.நந்தகுமார், தி.கௌதீஸ்   படங்கள்: ச.வெங்கடேசன்

Published:Updated:
"பெண்களே, நாலு குழந்தை பெத்துக்கோங்க...”

ரு குழந்தையைப் பெற்று வளர்ப்பதே பெரும்பாடு பலருக்கும். இந்தச் சூழலில், ''இந்து மதத்தை வளர்க்க ஒரு பெண், நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதில் ஒரு குழந்தையை ராணுவத்துக்கும், ஒரு குழந்தையை துறவியாகவும் அனுப்ப வேண்டும்!'' எனப் பேசி அதிர்ச்சி கிளப்பியிருக்கிறார், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, பி.ஜே.பி கட்சி எம்.பியான சாஷி மகராஜ். இவருடைய இந்தக் கருத்து நாடெங்கிலும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்க... நம் ஊர்ப் பெண்களின் பதிலடி இங்கே!

சுதா, வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"பெண்களே, நாலு குழந்தை பெத்துக்கோங்க...”

''நாட்டின் மீது அக்கறை உள்ளவங்க யாரும் இப்படிப் பேச மாட்டாங்க. ஏற்கெனவே மக்கள்தொகை பெருகி வழியும் இந்தியாவில், இந்தக் கருத்து எவ்வளவு அபத்தம்? பெண்கள் என்ன, குழந்தைகளைப் பெத்துப் போடுற இயந்திரங்களா?''

குஷ்பு, நடிகை, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்

"பெண்களே, நாலு குழந்தை பெத்துக்கோங்க...”

''நாலு குழந்தைகளைப் பெத்துக்கணும்னு சொல்ற இந்த எம்.பி., அவங்கள வளர்க்க, படிக்க வைக்க, கல்யாணம் பண்ணிக் கொடுக்க, வேலை வாங்கிக் கொடுக்க எல்லாம் எந்தப் பொறுப்பை ஏத்துக்கப் போறார்? இல்லை, பி.ஜே.பி அரசாங்கம் நாலு குழந்தைகளை வளர்க்குறதுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொருளாதார ரீதியா உதவுமா? பிற்போக்குப் பேச்சுகளை ப்ளீஸ் நிறுத்திக்கோங்க!''

ஜலஜா, வங்கி ஊழியர்

"பெண்களே, நாலு குழந்தை பெத்துக்கோங்க...”

''ஒரு குழந்தை பிறந்தாலே அம்மா வீட்டுல விட்டு, பக்கத்து வீட்டுல விட்டு,

"பெண்களே, நாலு குழந்தை பெத்துக்கோங்க...”

டே கேர்’ல விட்டுனு படாதபாடு படவேண்டியிருக்கு. இந்தத் திண்டாட்டத்தை யோசிச்சுதான் ரெண்டாவது குழந்தைக்கே 'நோ’ சொல்லிடறாங்க. இதுல நாலா? விளங்கிடும்!'’

முத்துமணி, கல்லூரி மாணவி

"பெண்களே, நாலு குழந்தை பெத்துக்கோங்க...”

''ஸ்கூல் ஃபீஸ், காலேஜ் ஃபீஸ் பத்தி எல்லாம் ஏதாவது தெரியுமா அந்த எம்.பிக்கு? நாலும் பெண் குழந்தைகளா பிறந்தா, நம்ம நாட்டுல வரதட்சணை கொடுக்க அந்த அப்பா, அம்மா வங்கிக் கொள்ளைதான் அடிக்கணும்!''

ரொஹையா, மருத்துவர்

"பெண்களே, நாலு குழந்தை பெத்துக்கோங்க...”

''இது, அபத்தமான ஆணாதிக்கம்! ஒரு எம்.பியே இப்படிப் பேசுறது அவரோட அறியாமையைக் காட்டுது. அர்த்தமில்லா இந்தப் பேச்சுக்கு நாம ஏன் முக்கியத்துவம் தரணும். ஜஸ்ட் இக்னோர்!''

"பெண்களே, நாலு குழந்தை பெத்துக்கோங்க...”

லஷ்மிபிரியா, கல்லூரிப் பேராசிரியர்

''நாலு பெத்துக் கோங்கனு சொல்ற இந்த மாதிரியான எம்.பிக்களை வெச்சுக்கிட்டு, நம்ம நாட்டை என்ன நிலைக்குத் தள்ளப் போறாங்களோனுதான் கவலையா இருக்கு!''

"பெண்களே, நாலு குழந்தை பெத்துக்கோங்க...”

வேணி, பூ வியாபாரி

''ம்க்கும்... இப்ப இருக்குற விலைவாசிக்கு ஒரு புள்ளையை வளர்க் குறதுக்கே மூச்சுத் திணறுது. இதுல நாலு பெத்து நடுத்தெருவுல விடுறதாம்மா? யாரோ சொன்னாருன்னா நீங்களும் கேட்க வந்துட்டீங்களே!''

ஆனந்தி, ஆட்டோ ஓட்டுநர்

"பெண்களே, நாலு குழந்தை பெத்துக்கோங்க...”

''எனக்கு நாலு பெண் குழந்தைங்க. கணவர் இறந்துட்டாரு. புள்ளைங் களுக்கு வயிறு நிறைய கஞ்சி ஊத்தி, பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி, பண்டிகைகளுக்கு புதுத்துணி எடுத்துக் கொடுத்து, நோவுகளுக்கு வைத்தியம் பாத்துனு நான் படுற கஷ்டத்துல எள் முனையாச்சும் அப்படிப் பேசுன அந்தப் பெரிய மனுஷருக்குத் தெரியுமா? மொதல்ல விலைவாசி உயர்வு, ஸ்கூல் ஃபீஸு, காலேஜ் ஃபீஸு, கல்யாணச் செலவு எல்லாம் என்ன நெலமையில இருக்குனு, மேடையில இருந்து கீழ எறங்கி வந்து பாருங்க. அதவிட்டுட்டு... நாலு பெத்துக்கோ, ஏழு பெத்துக்கோனு''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism