அவள் வாசகிகள் மற்றும் என் மேல் அன்பு கொண்ட சகோதரிகள், தோழிகள் எல்லாருக்கும் என்னோட புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்!

புது வருஷம் பிறக்கிற நாளும், நம்மோட இன்னொரு நாள்தான். இருந்தாலும், ஒரு புது விஷயத்தோட ஆரம்பம்; புது முடிவின் ஆரம்பம்; புது மாற்றத்தின் ஆரம்பம்... இப்படி எதுவா வேணாலும் இருக்கலாம்.

'ஆரம்பம்’ என்பது, நம் எல்லாருக்குமே வாழ்க்கையில் ரொம்பத் தேவை. நாம எல்லாருமே ஒவ்வொரு புது வருஷ ஆரம்பத்துலயும் சில விஷயங்கள் செய்யணும்னு முடிவெடுப்போம். போகப்போக நாம நினைச்சதை முடிக்க முடியாம, நம்மை அறியாமலேயே தவறுகள் செய்றோம். சில கெட்ட பழக்கங்களைச் சேர்த்துக்கிறோம். ஏதோ ஒரு நேரத்தில் உக்காந்து, கடந்த வருஷத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, நமக்கே கஷ்டமா இருக்கும்! 'ச்சே... உடம்பை இப்படி கவனிக்காம விட்டுட்டேனே’, 'தேவைக்கும் அதிகமா பொருட்கள் வாங்கிச் சேர்த்துட்டேனே’, 'உயிர்த் தோழிகிட்ட பேசி ஒரு வருஷம் ஆச்சே!’னு ஏதோ ஒண்ணு இருக்கும். சிலர், வேலையில் ரொம்ப மூழ்கிப் போனதால நண்பர்களைக்கூட மறந்திருப்பாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படி உக்காந்து, கடந்த வருஷத்தைத் திரும்பிப் பார்த்து யோசிக்கிறதை, 'taking stock 'சொல்வாங்க ஆங்கிலத்தில். அதாவது, கடையில் சரக்கு இருப்பைக் கணக்கெடுக்கிற மாதிரி!

'கண்மணி அன்போடு... ’ கெளதமி! -9

புது வருஷம்னு இல்ல.. வருஷம் முழுவதும் ஓடிட்டே இருக்கிற நாம, அப்பப்போ இந்த மாதிரி நின்னு, பார்த்து, புரிஞ்சுகிட்டு, நாம செய்த விஷயங்கள்ல நல்லது இருந்தா, நம்மை நாமே பாராட்டிட்டு, அதைத் தொடர்றதுக்கான முடிவு... இல்ல, செய்ற விஷயங்கள்ல ஏதாவது தவறா தெரிஞ்சுதுனா, அதைத் திருத்திக்கிறதுக்கான முடிவு... அதுவும் இல்லைனா, 'அய்யோ, இதுவரைக்கும் இதை என்னால பண்ணவே முடியலயே!’னு புதுசா ஒரு விஷயத்தைத் தொடங்குறதுக்கான முடிவு... இப்படி முடிவெடுக்கிறதுக்கான தருணத்தை நாம கண்டிப்பா எடுத்தே ஆகணும்.

முக்கியமா, இந்த ஆரம்பத்திலயாவது, உக்காந்து சிந்திக்கக் கொஞ்ச நேரம் ஒதுக்குங்க. நாம நினைச்சதுல என்னெல்லாம் நம்மால சாதிக்க முடிஞ்சதுனு சிந்திச்சுப் பாருங்க. அதாவது, இவ்வளவு சம்பாதிச்சோம், இவ்வளவு சவரன் நகை வாங்கினோம், கார் வாங்கினோம், வீடு வாங்கினோம்னு 'மெட்டீரியலா’ இல்லாம, பர்சனலா உங்க வளர்ச்சியைப் பத்தி யோசிச்சுப் பாருங்க.

'ஒரு தனி மனுஷியாக நான் எப்படி வளரணும்? எனக்குள்ளே எப்படிப்பட்ட பலத்தை நான் உருவாக்கிக்கணும்? இன்னும் என் குணங்கள்ல என்ன மாற்றத்தைக் கொண்டு வரணும்?’ இப்படி உங்களுக்குள்ளான மாற்றங்களைப் பத்தி சிந்திச்சு, அதைச் செயல்படுத்துறதுக்கான ஆரம்பமாவும் இதை எடுத்துக்கலாம்.

உதாரணமாக சொல்லணும்னா, சிலர் ரொம்ப ரிசர்வ்டா இருப்பாங்க. யார்கிட்டயும் அவ்வளவு எளிதில் பேசவோ, பழகவோ மாட்டாங்க. ரொம்ப நல்லா தெரிஞ்சவங்களைத் தவிர வேற யார்கிட்டயும் எதையும் பகிர்ந்துக்க மாட்டாங்க... என்னை மாதிரி! அந்த மாதிரி இருக்கிறவங்க எல்லாம், இந்த வருஷத்தில் இன்னும் அதிக பேர்கிட்ட பேசிப் பழகி, புது நட்புகளை உண்டாக்கிக்கிறதுக்கான உறுதி எடுத்துக்கிட்டு, தன்னை மாத்திக்க முயற்சிக்

கலாம்  நான் முடிவு எடுத்துக்கிட்ட மாதிரி!

சரி, இன்னொரு முக்கியமான விஷயம் பத்தி பேசலாமா!

நீங்க ஒரு விஷயம் கவனிச்சீங்களா? நமக்கு சகிப்புத்தன்மை கொஞ்சம் ஜாஸ்திதானே..! பெண்களாகிய நாம, அநியாயத்துக்கு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டுப் போவோம். வீட்டுலயும் சரி, வேலை செய்ற இடங்களிலும்

சரி... எல்லா பக்கங்களிலும் எல்லா விஷயங்களிலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம். அதுவும் இந்தக் காலத்தில், ஸ்ட்ரெஸ்ஃபுல்லான இந்த வாழ்க்கை முறையில் 'பொறுத்துக்கிறது’ங்கிறது ரொம்ப அதிகமாயிடுச்சு! பொறுமையா இருக்கறதுல தப்பே இல்லங்க... நமக்கு வேண்டப்பட்டவங்களுக்காகவும் முக்கியமான சூழலிலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறதில தப்பே இல்ல. சொல்லப்போனா சகிப்புத் தன்மைங்கிறது ரொம்ப முக்கியமான குணம். ஆனா, அதுக்கும் ஒரு எல்லை இருக்கு. உதாரணத்துக்கு, உண்டிவில்லில் (கவட்டை) கல்லை வெச்சு இழுக்கப்படும் ரப்பர்பேண்டின் நீட்சிதான் சகிப்புத்தன்மைக்கான அளவுகோல். அதை அளவுக்கு மீறி இழுத்தா, பேண்ட் அறுந்து போயிடும்.

அளவுக்கு மீறி சகிப்புத்தன்மை மேல பாரத்தைப் போட்டுட்டோம்னா, ரப்பர் பேண்ட் மாதிரி அதுவும் முறிஞ்சு போயிடும். அதனால, யாருக்காகப் பொறுத்துக்கிறோமோ அவங்களுக்கும் நமக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லாமப் போயிடும்.

சமீபத்தில் என் தோழிகிட்டே இதுபத்தி நான் பேசிகிட்டு இருந்தபோது, அவ தினமும் அனுபவிக்கிற கஷ்டத்தைப் பத்தி சொல்லிட் டிருந்தா!

''இப்படியேதான் தினமும் போய்கிட்டு இருக்கு... எல்லா பக்கத்திலிருந்தும் டென்ஷன். எனக்குனு ஒரு அஞ்சு நிமிஷம் ஒதுக்கிட்டு, அமைதியா உக்காந்து மூச்சுவிடக்கூடமுடியல... தலையே வெடிச்சிடும் போல இருக்கு.''

நான் பதில் பேசாம, அமைதியா கேட்டுட்

டிருந்தேன்.

''என்ன கௌதமி... ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிற?''

நான் அழுத்தமா சொன்னேன்...

'' 'இது போதும்! என்னால இதுக்கு மேல தாங்கவோ, பொறுத்துக்கவோ முடியாது’ங்கிற வார்த்தை உன் வாயிலிருந்து வந்தால்தான் உன் வாழ்க்கை மாறும்!''

''திடீர்னு 'என்னால தாங்க முடியாது, நான் பொறுத்துக்க மாட்டேன்’னு எப்படி சொல்ல முடியும்? என் வாழ்க்கையில் இருக்கிறவங்க என்ன ஆவாங்க?''

''ஒண்ணுமே ஆக மாட்டாங்க. ஏன்னா, இந்தளவு உன்னுடைய டென்ஷன் வளர்ந்த துக்கு உன்னோட அளவுக்கு மீறின சகிப்புத் தன்மையும் ஒரு காரணம். எதுக்குமே ஒரு எல்லை உண்டு!''

''ஆமா... நீ ஈஸியா சொல்லிடுவ... ஆனா, வீட்டிலும் ஆபீஸிலும் அப்படி இருக்கிறது சாத்தியமா?''னு கேட்டா அந்தத் தோழி. அதே கேள்விதான் உங்க மனசிலும் இருக்கும்னு எனக்குப் புரியும்.

இதுக்கு நான் சொல்லப் போற பதில், ஏதோ தியரி புத்தகத்தில் இருந்து எடுத்துச் சொல்றதா நினைக்காதீங்க. என் வாழ்க்கையில் நான் அனுபவிச்சு உணர்ந்துகொண்ட ஒரு விஷயம்! இதைப்பத்தி நான் அடுத்த இதழ்ல விளக்கப் போறேன்..!

பேசுவோம்...

தொகுப்பு: பிரேமா நாராயணன்

என்னோட புத்தாண்டு சபதம்!

இப்ப, என்னோட பர்சனல் லைஃப்ல, நான் சில முடிவுகளை எடுத்திருக்கேன். என் ஹெல்த், டயட், எக்ஸர்சைஸ்னு எல்லா விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்போறேன். எனக்கு ஸ்வீட்ஸ் ரொம்பப் பிடிக்கும். ஸ்வீட்ஸ் நிறைய சாப்பிடுவேன். அதை இனி குறைச்சுக்கப் போறேன். அதோடு, இன்னொரு முக்கியமான விஷயம்... முன்னயே சொன்ன மாதிரி, நானும் நிறைய பேரோட பேசப் போறேன். ஏன்னா,நான்கூட அதிகமா பேசறவ இல்லதான். இந்த வருஷத்தில் அதை மாத்திக்கிட்டு, ஐ வான்ட் டு டாக் டு மோர் பீப்பிள். உண்மையைச் சொல்லணும்னா, அவள் விகடனின் இந்தத் தொடர், அதுக்கான வாசலை எனக்குள்ள திறந்து வெச்சு, உதவி செய்திருக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism