Published:Updated:

ஜப்பான்காரர்களுக்கு மெஹந்தி கிளாஸ்!

ந.ஆஷிகா

ஜப்பான்காரர்களுக்கு மெஹந்தி கிளாஸ்!

ந.ஆஷிகா

Published:Updated:

''மருதாணி இலைகளை அம்மியில் அரைச்சு, அதை பிளாஸ்டிக் பேப்பரில் நானே செய்த கோனில் ஃபில் பண்ணி, மெஹந்தி போட ஆரம்பிச்சவ, இன்னிக்கு வெளிநாட்டினருக்கு மெஹந்தி கோர்ஸ் எடுக்குற அளவுக்கு வளர்ந்திருக்கேன். இந்த மெஹந்தி மேல எனக்கிருக்கிற ஆர்வம்தான் அதுக்குக் காரணம்!'' 

கஸ்டமருக்கு விரல்கள் சிவக்க மெஹந்தி டிசைன் வரைந்து அனுப்பிவிட்டு, நமக்காக வந்தமர்ந்தார் சென்னையைச் சேர்ந்த பிரேமா வடுகநாதன்!

''காஸ்மட்டாலஜி படிச்சேன். அந்தத் துறை,என் வீட்டினருக்குப் பிடிக்கல. ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவா, வீட்டில் இருந்தே செய்ற தொழில்களா யோசிச்சேன். சின்ன வயசுல மருதாணி போட்டுவிட்டு எல்லோர்கிட்டயும் பாராட்டு வாங்கின சந்தோஷங்கள் நினைவுக்கு வர, சரி அதையே தொழிலா எடுக்கலாம்னு, ஒரு குஜராத்தி பெண்கிட்ட முறையா பேஸிக் மற்றும் அட்வான்ஸ்டு மெஹந்தி கிளாஸ் போனேன். பிறகு, என் கற்பனைத் திறனையும் சேர்த்துக் கலக்க ஆரம்பிச்சேன். என் தோழிகள், உறவினர்கள் வட்டத்தில் பலத்த வரவேற்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜப்பான்காரர்களுக்கு மெஹந்தி கிளாஸ்!

நண்பர் மகளுக்கு கல்யாண மெஹந்தி போட்டுவிட்டப்போ, 'சூப்பர்! இதையே பார்லர்ல போய் போட்டிருந்தா எவ்வளவு காசு வாங்கியிருப்பாங்க தெரியுமா? நீயும் புரொஃபஷனலா பண்ணு!’னு நண்பர் ஊக்கம் கொடுத்தார். அப்படி முதல் முறையா ஒரு பொண்ணுக்கு ரெண்டு கை மற்றும் கால்களுக்கு புரொபஷனலா மெஹந்தி போட்டதுக்கு நான் வாங்கின பணம், 300 ரூபாய்! அதைத் தொடர்ந்ததோட, மெஹந்தி கிளாஸும் எடுக்க ஆரம்பிச்சேன்.

நான் எப்பவும் கையில் மெஹந்தி போட்டிருப்பேன். ஒருமுறை மால் போயிருந்தப்போ, ஒரு ஜாப்பனீஸ் பொண்ணு என் கையைப் பார்த்துட்டு, 'இந்த டாட்டூவை எனக்கும் சொல்லிக் கொடுங்க!’னு சொன்னா. சரினு அட்ரஸ் கொடுத்துட்டு வந்தா, மறுநாள் எம்பஸிலயிருந்து அவ ஃப்ரெண்ட்ஸையும் கூட்டிட்டு வந்துட்டா. அதிலிருந்துதான் வெளிநாட்டினருக்கும் மெஹந்தி கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன். வருஷா வருஷம் எம்பஸியில இருந்தே ஃபாரினர்ஸை எங்கிட்ட கிளாஸுக்கு அனுப்பி வெக்க ஆரம்பிச்சாங்க. நாலு வருஷமா ஒவ்வொரு வருஷமும் 10 பேட்ச் நடத்திட்டு வர்றேன். மெஹந்தி... என் வாழ்க்கையை கலர்ஃபுல் ஆக்கிடுச்சு!''

- முத்தம் வைக்கிறார் மெஹந்தி கோனுக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism