Published:Updated:

டிஸ்... டிஸ்... டிஸ்லைக்!

பி.ஆனந்தி, படங்கள்: மீ.நிவேதன்

டிஸ்... டிஸ்... டிஸ்லைக்!

பி.ஆனந்தி, படங்கள்: மீ.நிவேதன்

Published:Updated:

ஃபேஸ்புக்ல 'டிஸ்லைக்’னு ஒரு ஆப்ஷன் வரப்போகுதுனு அப்பப்ப பேசிட்டே இருக்காங்க. உடனே, ''வாழ்க்கைக்கும் ஒரு டிஸ்லைக் ஆப்ஷன் கொடுத்தா, நீங்க எதையெல்லாம் டிஸ்லைக்குவீங்க?!'' என்ற மாபெரும் (ச்சும்மா ஒரு 'பில்ட்அப்'தான்!) கேள்வியுடன், சென்னை, அண்ணா யுனிவர்சிட்டி எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையின் மூன்றாம் வருட மாணவிகளுடன் ஒரு ஜாலி ரைடு!

 திவ்யபாரதி

டிஸ்... டிஸ்... டிஸ்லைக்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நான் எப்பவும் கொஞ்சம் புரொஃபஷ னலாதான் பேசுவேன். எனக்கு ட்ரிங்க்ஸ் அடிச்சுட்டு வண்டி ஓட்டுறவங்க, பப்ளிக் பிளேஸ்ல சிகரெட் பிடிக்குறவங்களை எல்லாம் சுத்தமா பிடிக்காது. அப்புறம்... கட்சி, ஆட்சி, கூட்டணினு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் குறை சொல்லிக்கிறாங்களே இந்த அரசியல் வாதிங்க... அவங்களுக்கு எல்லாம் மொத்தமா டிஸ்லைக் (இதுதான் புரொஃபஷனலா பேசுறதா..?!).''

ஐஸ்வர்யா பிரியதர்ஷினி

டிஸ்... டிஸ்... டிஸ்லைக்!

''ஆறு மாசத்துக்கு ஒரு தடவை செமஸ்டர் வெச்சு, அதுக்கு நடுவுல இன்டர்னல்ஸ் வெச்சு, அதுல நாம வாங்குற சிங்கிள் டிஜிட் மார்க்கை கிளாஸ்ல சத்தமா சொல்லி அசிங்கப்படுத்தினு... இந்திய உயர் கல்வித் தேர்வுத் துறைக்கே ஒரு டிஸ்லைக்மா (நாம பேசுறதெல்லாம் நேஷனல் லெவல்தான்!). பரீட்சைக்கு முதல் நாள் மொட்டை மாடியில இருந்து குதிச்சுடலாம் போல இருக்கும்மா. என்னம்மா... இப்படிப் பண்றீங்களேம்மா?! அப்புறம்... ஏதோ பொண்ணுங்கள முன்ன பின்ன பார்த்ததே இல்லைங்கிற அளவுக்கு அன்லிமிட்டட் ஜொள்ஸ் விடுற கைஸுக்கு, டிஸ்லைக்கோ டிஸ்லைக்மா!''

அபர்ணா சேகர்

டிஸ்... டிஸ்... டிஸ்லைக்!

''ஃபேஸ்புக், டிவிட்டர்ல எல்லாம் தன்னைத் தானே புகழ்ந்து எழுதித் தீர்க்கிற புண்ணியவான்களுக்கு, முதல் டிஸ்லைக். எப்பப் பார்த்தாலும் ஏதோ முதுகுல இமயமலையை தூக்கி வெச்சிட்டு சுத்துற மாதிரி 'பொறுப்பு ஸீன்’ போடுறவங்களுக்கு ரெண்டாவது டிஸ்லைக். மத்தவங்க கெட்டுப் போகணும் என்பதையே மனசின் ஆசையா வெச்சிட்டு சுத்துறவங்களுக்கு மூணாவது டிஸ்லைக். 'எவனுமே வீட்டுக்குள்ள இருக்க மாட்டீங்களாடா? அப்படி எங்கதாண்டா இப்படிக் கூட்டம் கூட்டமா கௌம்பிப் போறீங்க? (அதானே!)’னு புலம்ப வைக்கிற சென்னை டிராஃபிக்குக்கு நாலாவது டிஸ்லைக்!''

திவ்யா பொன்னுச்சாமி

டிஸ்... டிஸ்... டிஸ்லைக்!

''நானே பார்த்துப் பார்த்து யுனீக்கா டிரெஸ் வாங்குவேன். ஆனா, என் டிரெஸ் மாதிரியே போட்டுட்டு எதிர்ல வர்றவங்களைப் பார்த்தா எப்படி இருக் கும்? அவங்களுக்கு ஒரு டிஸ்லைக், அவங்க போட்டிருக்கிற என் டிரெஸ்ஸுக்கு (இது அநியாயம்!) ஒரு டிஸ்லைக். சீனியர் சிட்டிசன்ஸ் எல்லாம் புரொஃபசரா கிளாஸ் எடுக்க வந்தா, அவங்களுக்கு ஒரு டிஸ்லைக், அவங்க சப்ஜெக்ட்டுக்கு ஒரு டிஸ்லைக். அப்புறம், இந்தக்ஆர்டிகிள்ல என் போட்டோ அழகா வரலைனா, உங்க போட்டோகிராஃபருக்கு ஒரு டிஷ்யூம் டிஸ்லைக்!''

திவ்யா சேகர்

டிஸ்... டிஸ்... டிஸ்லைக்!

''எங்க மெஸ் சாப்பாட்டுக்குப் போடணும் ஒரு பெரிய டிஸ்லைக். அய்யய்யோ... நினைச்சாலே நெஞ்சு பொறுக்குதில்லையே! பீச் என்ற அழகான இடத்தை, அங்கங்க ஜோடி ஜோடியா உட்கார்ந்து அசிங்கமாக்குற காதலர்களே... உங்களுக்கு 1001 டிஸ்லைக்ஸ். ஒருமுறை ஊர்ல இருந்து வந்த எங்கப்பாவை, இந்த சிங்காரச் சென்னையைச் சுத்திக்காட்டுறேன் பேர்வழினு தெரியாத்தனமா பீச்சுக்குக் கூட்டிட்டுப் போயிட்டேன். அந்தக் கொடுமையைப் பார்த்துட்டு, 'இனி நீ பீச் மணல்லயே கால் வைக்கக் கூடாது!’னு சத்தியம் வாங்கிட்டுதான் ஊருக்குப் போனார்!'' (சத்தியத்தைக் காப்பாத்துனீங்களானு சொல்லவே இல்லையே தங்காச்சி!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism