Published:Updated:

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

பொன்.விமலா, ஷாலினி நியூட்டன்

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

பொன்.விமலா, ஷாலினி நியூட்டன்

Published:Updated:

அட்டென்ஷன் கூலிங் கிளாஸ்!  

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

வீடியோ, ப்ளூடூத் போன்ற வசதிகள் போன்ல இருக்கும்னு தெரியும். ஆனா, நம்ம கண்ணாடியிலயும் இருந்தா எப்படி இருக்கும்? அப்படி ஒரு கண்ணாடியை ஓ.டி.ஜி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இதில் வைஃபை, ப்ளூடூத், சாட்டிலைட் நேவிகேஷன், வீடியோ பிளேயர் போன்ற இணைப்பு சேவைகளும் உள்ளன. நாம் எங்கே, எதைப் பார்க்கிறோம் என்பதை அறிய சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நமது தலை அசைவுகளை 3டி படமாகக்கூட காணலாம். மைக்ரோசாஃப்ட் நிறுவனம், இந்த கண்ணாடிக்கான காப்புரிமையை சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்க உள்ளது. இக்கண்ணாடியின் விலை 5,000 அமெரிக்க டாலர்களாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆத்தி!

 நடமாடும் 6டி தியேட்டர்!

நடமாடும் மருத்துவனை, நடமாடும் துணியகம், நடமாடும் ஏ.டி.எம்... இந்த வரிசையில் வந்துவிட்டது, நடமாடும் தியேட்டர். மேலைநாடுகளில் இருப்பதுபோல் நாம் இருக்கும் இடத்துக்கே வந்து படம் காட்டும் தியேட்டர்கள், இந்தியாவிலும் அறிமுகமாக உள்ளன. 6டி தொழில்நுட்பத்தில் 18 முதல் 20 பேர் அமர்ந்து காணக்கூடிய வகையில் மார்க்கெட், பூங்காக்கள், பீச் போன்ற மக்கள் கூடும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, மக்களைக் குதூகலப்படுத்தப் போகின்றனவாம் இந்த 6டி தியேட்டர்கள். முதற்கட்டமாக டெல்லியில் அறிமுகமாகும் புதிய மின்னணு தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்தத் திரையரங்கில் ஆறு மாறுபட்ட கோணங்களில் இருக்கையை சரிசெய்து கொள்ளும் வசதியும், தீ, பனி, தண்ணீர், புகை, காற்று போன்ற மிகவும் நுணுக்கமான ஒலிகளைக் கொண்ட 21 வகையான ஒலிக் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

அதிநவீன பயாஸ்கோப்னு சொல்லுங்க!

'சினிமாவுக்கு நோ குட்பை!’

தொழிலதிபர் வருண்மணியனுக்கும், த்ரிஷாவுக்கும் இடையேயான கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுவிட்டது. 'ஜனவரி 23ம் தேதி வருண்மணியனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் நடக்கும்'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் த்ரிஷா தெரிவித் திருப்பதுதான் சமீபத்திய ஹாட் நியூஸ்.

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

திருமண தேதி முடிவான உடன் நானே அறிவிக்கிறேன். நடிப்பை கைவிடுவது பற்றி எந்த எண்ணமும் இல்லை. இன்னும் 2 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். 2015ம் ஆண்டில் நான் நடித்து 4 படங்கள் வெளியாக இருக்கின்றன'' என்றும் த்ரிஷா ட்வீட்டியிருக்கிறார்.

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடப்போறாங்கோ!

இந்தியாவின் முதல் திருநங்கை மேயர்!

ட்டீஸ்கர் மாநிலம், ராய்கார் மாநகராட்சிக்கு சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தலில் போட்டியிட்ட மது கின்னார் என்கிற 35 வயது திருநங்கை, செல்வாக்கு மிக்க அரசியல் கட்சிகளான பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களையெல்லாம் மண்ணைக் கவ்வச் செய்து, மேயர் பதவியைப் பிடித்துவிட்டார். இதன்மூலம் நாட்டிலேயே மேயராக தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை என்ற பெருமையும் இவரை வந்து சேர்ந்திருக்கிறது.

இந்தத் தேர்தலுக்காக 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே செலவு செய்துள்ளதாக கூறும் மது கின்னார், 8ம் வகுப்புதான் படித்துள்ளார். பல்வேறு வேலைகளைச் செய்தும், ரயில்களில் ஆடிப்பாடி பணம் சேகரித்தும் வாழ்க்கையை நகர்த்தி வந்தவர், தற்போது இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு சாதித்திருக்கிறார்.

அப்போ கண்டிப்பா ஒரு ராயல் சல்யூட்!

புயலின் ’லைவ் சாட்டிங்’!

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

னவரி 6-ம் தேதி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களின் காட்டில் செம மழை! தன் பிறந்தநாளான அன்றைய தினத்தை வித்தியாசமாகக் கொண்டாட நினைத்தவர், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ரசிகர்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்கப் போவதாக அறிக்கைவிட... சூடுபிடித்தது ஃபேஸ்புக். நிகழ்ச்சித் தொகுப்பாளரான சலீம் சுலைமான், லைவ் ஸ்ட்ரீமில் ரஹ்மானிடம் கேள்விகளைப் படிக்க, அவர் அதற்கு உற்சாகமாகப் பதில் அளிக்க... குஷியோ குஷி ஆனார்கள் ரசிகர்கள். பிறந்தநாள் வாழ்த்துகளை பலரும் லைவ்வாக அனுப்பிவைக்க, அவர்கள் முன்னிலையிலேயே கேக் வெட்டி குதூகல மானார் ரஹ்மான். பர்த்டே அறிவிப்பு ஏதாவது இருக்கிறதா என ரசிகர்கள் கேட்டதற்கு,

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

இரவு 12 மணிக்கு பாருங்கள்’ என சஸ்பென்ஸ் கொடுத்தவர், சரியாக 12 மணிக்கு

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

ழிகிதிஷி’ எனும் தனது புது இசை ட்ரூப்பின் முன்னோட் டத்தை ஷேர் செய்து, ரசிகர்களை ’வாவ்’ சொல்ல வைத்துவிட்டார்.

அப்ப நள்ளிரவு புயல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism