Published:Updated:

எட்டு மெடல்... நித்யா!

சு.ராஜா,  படங்கள்: ச.வெங்கடேசன்

எட்டு மெடல்... நித்யா!

சு.ராஜா,  படங்கள்: ச.வெங்கடேசன்

Published:Updated:

மிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக 2013- 2014 தேர்வில், எட்டுப் பதக்கங்களுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார், நித்யா! வேலூர் மாவட்டம், அக்ஸீலியம் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி மாணவி நித்யாவின் மனதில் நிறைந்த சந்தோஷம், முகத்திலும் வழிந்தது!

எட்டு மெடல்... நித்யா!

 ''காலேஜ் ஃபர்ஸ்ட் வருவேன்னு நினைச்சேன். எங்க பிரின்ஸிபால் மேம், ஹெச்.ஓ.டி மேம் எல்லாம், 'நீ யுனிவர்சிட்டி ரேங்க் வாங்குவே'னு சொல்லி ஊக்கப்படுத்தினாங்க. ஆனா, ஸ்டேட் ஃபர்ஸ்ட்... ஆனந்த அதிர்ச்சிதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலேஜ் தொடங்கி மூணு மாசத்துல திடீர்னு சிலபஸ் மாத்திட்டாங்க. எல்லோரும் குழம்பிட்டோம். இருந்தாலும், எங்க காலேஜில் நம்பிக்கையும் நல்ல பயிற்சியும் கொடுத்தாங்க. நான் கடின உழைப்பைக் கொடுத்தேன். எங்க அப்பா, அம்மா என் படிப்புக்கு சுதந்திரம் கொடுத்தாங்க. இதெல்லாம் சேர்ந்துதான் இந்த எட்டு மெடலை என் கையில் சேர்த்திருக்கு. என் வாழ்க்கையில் நான் வாங்கின முதல் அவார்ட் இதுதான். அதுவும் கவர்னர்கிட்ட. சந்தோஷத்தை வார்த்தைகளில் சொல்லத் தெரியல!'' என்று சிலிர்த்தார் நித்யா.

தொடர்ந்தவர், "நான் ஆசிரியர் துறையைத் தேர்ந்தெடுத்தது, ஒரு ஆப்ஷனா இல்ல. வேண்டி விரும்பிதான் படிச்சேன். ஒரு நாட்டின் முன்னேற்றம் பள்ளி வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுதுனு சொல்வாங்க. எவ்வளவு பெரிய பொறுப்பிருக்கு ஆசிரியர்களுக்கு! ஒரு ஆசிரியையா என் பொறுப்பை நான் 100 சதவிகிதம் நிறைவேற்றுவேன். எனக்குப் பிடிச்ச டீச்சர்னு யோசிச்சா, என்னோட ப்ளஸ் டூ கெமிஸ்ட்ரி ஆசிரியை ரீட்டா டீச்சர்தான் பளிச்னு ஞாபகம் வர்றாங்க. காரணம், அவங்களோட ஃப்ரெண்ட்லியான அணுகுமுறைதான். நானும் அப்படியான ஆசிரியையாதான் இருக்க விரும்புறேன்!

பாடங்களைத் தினசரி வாழ்க்கையோட ஒப்பிட்டுக் கற்றுக்கொடுக்கிறது, மாணவர்கள் அதை சுலபமா புரிஞ்சுக்க வழி வகுக்கும்கிறது என் நம்பிக்கை.  புத்தகங்களோட மாரல் வகுப்புகளும் வேணும் என்பது என் கருத்து. அதுதான் மாணவர்களை நல்ல மனிதர்களாகவும் வளர்த்தெடுக்கும்...''

படபடவென அடுக்கும் நித்யா, அதே கல்லூரியில் இப்போது எம்.எஸ்ஸி., கணிதம் முதல் வருடம் படிக்கிறார். ஒரு மாதம் முன்புதான் திருமணம் முடிந்திருக்கிறது. கணவர் ஆனந்தன், ராணுவத்தில் பணியாற்றுகிறார்.  

உங்கள் மாணவர்களையும் மெடல் வாங்க வையுங்கள் நித்யா டீச்சர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism