Published:Updated:

கர்ப்பம் என்பதை கணிக்கத் தெரியாதா டாக்டருக்கு?

கே.அபிநயா

கர்ப்பம் என்பதை கணிக்கத் தெரியாதா டாக்டருக்கு?

கே.அபிநயா

Published:Updated:

''என் தோழிக்கு நேர்ந்த கசப்பான மருத்துவ அனுபவம், மற்றவர்களுக்குப் பாடமாக இருக் கட்டும் என எழுதுகிறேன்...'' என்ற முன்னுரையுடன், திருச்செந்தூரைச் சேர்ந்த நம் வாசகி பொற்கலா சுப்பிரமணியன் எழுதியிருக்கும் கடிதம் இங்கே...

கர்ப்பம் என்பதை கணிக்கத் தெரியாதா டாக்டருக்கு?

 ''ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறாள் திருமணமான என் தோழி. நான்கு வயதில் மகள் உண்டு. ஒரு நாள் தோழிக்கு கடுமையான வயிற்றுவலி (வழக்கமாக மாதவிடாய் நாட்களில் பலருக்கும் வரும் வயிற்று வலி, அவளுக்கு இருப்பதில்லை). இந்தத் தருணத்தில் மாதவிடாய் நாட்கள் முடிந்தும், அவளுக்கு ரத்தப்போக்கு நிற்கவில்லை. என்ன ஏதென்று புரியாமல், அருகில் இருந்த சின்ன கிளினிக் ஒன்றுக்கு அழைத்துச் சென்றோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு ஊசி போட்டு, சில மாத்தி ரைகள் கொடுத்த மருத்துவர், 'மாதவிடாய் வயிற்று வலி இந்த மாத்திரையில் சரியாகிடும்’ என்றார். 'ஆனா, இது மாதவிடாய் வயிற்று வலி இல்ல டாக்டர்’ என்று எங்கள் உள்ளுணர்வு உணர்த்தியதை அவரிடம் தெரிவிக்க, 'அப்போ இது கர்ப்பப்பை கோளாறா இருக்கும். ஸ்கேன் செய்து பார்த்து, பிரச்னை பெருசா இருந்தா, கர்ப்பப்பையை எடுக்க வேண்டியதா இருக்கும்!’ என்றார்.

அடுத்த குழந்தைக்காக ஆசையாக காத்திருந்த தோழியும் அவள் கணவரும் இடிந்து போனார்கள். இன்னொரு பக்கம், வயிற்று வலியும் நின்றபாடில்லை. தகவல் தெரிந்து ஊரிலிருந்து வந்த தோழியின் அம்மா, அனுபவமிக்க வேறு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவர், 'உங்க பொண்ணு கர்ப்பமா இருக்காங்க. ரத்தக்கசிவுக்கு தாமதிக்காம சிகிச்சை அளிக்கத் தவறியதால, இப்போ கரு கலைஞ்சிடுச்சு. உடனடியா டி அண்ட் சி பண்ணணும்’ என்றார். இதைக் கேட்ட தோழி, 'என் குழந்தையை எப்படியாவது காப்பாத்திக் கொடுங்க...’ என்று கதறினாள். மருத்துவரோ, அரை மணி நேரத்துக்குள் கருக்கலைப்பு செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்து என்று எச்சரிக்க, வேறு வழியில்லாமல் அது நடந்தது.

கர்ப்பம் என்பதை கணிக்கத் தெரியாதா டாக்டருக்கு?

'முதலிலேயே அனுபவமிக்க மருத்துவரிடம் சென்றிருந்தால், சிசுவை இழந்திருக்க மாட்டாள்' என்று எங்கள் தவறை எண்ணி எண்ணி மறுகுகிறோம். இன்னொரு பக்கம், நம் வீட்டுப் பாட்டிகள் நாடி பிடித்தே கர்ப்பத்தை உறுதி செய்ததெல்லாம் நடந்திருக்க, ஒரு மருத்துவரால் அதைக் கண்டுபிடிக்க, குறைந்தபட்சம் யூகிக்கக்கூட முடியவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

தோழிகளே... என்ன பிரச்னை என்றாலும், மருத்துவரிடம் செல்வது என்பதைவிட, தரமான, அனுபவமிக்க மருத்துவரிடம் செல்வது முக்கியம் என்பதை மனதில் வையுங்கள். பிரச்னையை பெரிதாகவிட்டு வருந்திப் பயனில்லை... எங்களைப் போல!’'

கர்ப்பம் என்பதை கணிக்கத் தெரியாதா டாக்டருக்கு?

வாசகியின் கடிதம் பற்றி, சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் உமா செல்வத்திடம் கேட்டபோது, ''பொதுவாக, பிரசவத்துக்கு முந்தைய கால ஆலோசனைக்காக (Pre Pregnancy Counselling) மகப்பேறு மருத்துவரிடம் பெண்கள் செல்வது நல்லது. இது போன்ற இழப்புகள் நிகழாத வண் ணம் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்கு இது உதவும்.

கர்ப்பம் தரித்த பின் ரத்தப்போக்கு இருந் தால், கவனித்த நொடியில் மருத்துவரிடம் செல்லும்பட்சத்தில், உடல்நிலையைப் பொறுத்து கசிவைத் தடுத்து சிசுவைக் காப்பாற்றும் வாய்ப்புகள் உண்டு. இந்தத் தோழிக்கு கருச்சிதைவு நேர்ந்துள்ளதால், அடுத்த குழந்தைக்கு 3 - 6 மாத இடைவெளி அவசியம். அந்தக் காலத்தில் சத்தான உணவையும், ஓய்வையும் பெறவேண்டும். கூடவே, மனதளவில் அவரை மீட்கும் மருத்துவ ஆலோசனைக்கும் அழைத்துச் செல்ல வேண்டும்!'' என்று அக்கறையுடன் சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism