Published:Updated:

குட்டீஸ் சாம்ராஜ்யத்தின் ‘குரல்’ தளபதிகள்!

செந்தில்குமார், படங்கள்: ப.சரவணகுமார்

குட்டீஸ் சாம்ராஜ்யத்தின் ‘குரல்’ தளபதிகள்!

செந்தில்குமார், படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:

ங்கள் வீட்டில் குட்டீஸ் இருக்கிறார்களா? ரிமோட் அவர்கள் கையில் சிறைப்பட்டுக் கிடக்கிறதா? சோட்டா பீம், டோரா புஜ்ஜி, மோட்டு  பட்லூ, கரடிகள் சங்க கரடிகள்,  நிஞ்சா ஹட்டோரி இவர்களையெல் லாம் உங்கள் வீட்டு உறுப்பினர்கள் போல உணர்கிறீர்களா?

பல வீடுகளிலும் இதே கதைதான்!

பரவலாக எல்லா மொழி சேனல்களிலும் ஒளிபரப்பாகும் இந்த கார்ட்டூன் கேரக்டர்களுக்கு தமிழ் வெர்ஷன்களில் குரல் கொடுப்பவர்களைச் சந்திப்போமா?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குட்டீஸ் சாம்ராஜ்யத்தின் ‘குரல்’ தளபதிகள்!

நாம் சென்ற இடம், அப்துல்லா என்பவர் நடத்தும், சென்னை, கோடம்பாக்கத்தில் இருக்கும் 'குரலகம்’ வாய்ஸ் ரெக்கார்டிங் ஸ்டுடியோ!

திருவண்ணாமலை அருகில் உள்ள பூதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர், செபாஸ்டின். ''சினிமா வரலாற்றை மாத்தி எழுதணும்னு ஆசைப்பட்டு, ஒரு நல்ல நாள்ல சென்னைக்கு வண்டியேறினவங்கள்ல நானும் ஒருத்தன். வழக்கமா சினிமாவுல வாய்ப்புத் தேடி அலையுறவங்க படுற கஷ்டத்தை எல்லாம் நானும் பட்டேன். மூணு வருஷம் இப்படியே ஓடுச்சு. ஒரு நாள் ராதாரவி சார், தன் சொந்த செலவில் என்னை டப்பிங் யூனியன்ல சேர்த்துவிட்டு, 'வயித்துல பசியை வெச்சுக்கிட்டு வாய்ப்புத் தேடாத.

முதல்ல பசியைப் போக்கு.அப்புறமா வாய்ப்பைத் துரத்தலாம்’னு சொன்னார். அவரோட கைராசி, என் பசி அன்னியோட தீர்ந்துடுச்சு. 500 படங்களுக்கும் மேல டப்பிங் பேசிட்டேன். கணக்கில்லாத அளவுக்கு சீரியல்களில் பேசிட்டேன். இருந்தாலும் குழந்தைகளுக்கான கார்ட்டூன்களுக்குப் பேசும்போதுதான் திருப்தி கிடைக்குது!'' என்று செபாஸ்டின் சொல்ல, 'டேய் பட்லூ, சோம்பேறிக்கு சோறு வெச்சவனே! என்னோட போர்ஷனை நான் பேசிட்டேன். இனி நீயும் அந்தப் பூசணிக்காய் மண்டையனும்தான் பேசணும்!'' என்று கார்ட்டூன் கேரக்டரான 'மோட்டு’வின் குரலில் செபாஸ்டினை கலாய்த்தபடி வந்தமர்ந்தார் இ.எம்.எஸ் முரளி.

'24 வருஷமா டப்பிங் துறையில இருக்கேன். என் அப்பாவும், சகோதரரும்கூட டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ்தான். பொதுவா கார்ட்டூன்ஸுக்கு டப்பிங் பேசுறதுதான் கஷ்டம்னு சொல்வாங்க. ஆனா, அது எனக்கு இஷ்டமாகிப் போச்சு. சினிமால நிறைய பேருக்கு டப்பிங் பேசுறேன். சன் டி.வியில் ஒளிபரப்பாகும் 'மகாபாரத'த்துல சகுனிக்கு குரல் கொடுக்கிறேன். அதே சன் டி.வியில் 'பொம்மலாட்டம்’ சீரியல்ல 'நாயுடு’ கேரக்டரில் நடிக்கிறேன்.

வால்ட் டிஸ்னியின் முக்கியமானஎட்டு கார்ட்டூன் கேரக்டர்களுக்கு அப்ரூவ்டு வாய்ஸ் என்னோடதுதான். இப்போ சூப்பர் டூப்பர் ஹிட்டான 'மோட்டு பட்லூ’வில் 'மோட்டு’வின் கேரக்டருக்குப் பேசுறேன். 'பாப்பாய் தி செய்லர்’ கார்ட்டூனில் 'பாப்பாய்’க்கு பேசி ஹிட்டானது போல, இந்த 'மோட்டு’ கேரக்டர் வாய்ஸும் செம ஹிட். அதிலும் இந்த 'மோட்டு’ யாரையும் பெயர் சொல்லியே கூப்பிடமாட்டான். 'அந்த மண்டையா இந்த மண்டையா'னு நான் வாயில வர்றதை எல்லாம் சொல்லுவேன். குழந்தைகளுக்கு அது ரொம்ப பிடிச்சுப் போச்சு!'' என்று முரளி சொல்ல, 'ஒவ்வொரு வார்த்தையையும் குழந்தைகள் கவனிப்பாங்க. எந்தச் சின்னத் தப்பும் பண்ணிடக் கூடாதுனு எச்சரிக்கையோடதான் பேசுவோம். இதுதான் இந்த கேரக்டர் பேச வேண்டிய கருத்துனு மட்டும் மொழிபெயர்ப்பாளர் குறிப்பு அனுப்பிருப்பார். நாங்கதான் சொந்தமா வாயசைவுக்கு ஏற்ற சொற்களைப் போட்டுப் பேசுவோம். முரளியண்ணன் சொன்ன மாதிரி, மனசுக்குப் பிடிச்ச வேலைன்னா அது குழந்தைகளுக்குப் பிடிச்ச கேரக்டருக்கு குரல் கொடுக்கிறதுதான்!' என்றார் செபாஸ்டின்.

''ஹாலிவுட்டில் கார்ட்டூன் கேரக்டர்களுக்கு குரல் கொடுக்கிறது, பிரபல நடிக, நடிகைகள். அவங்களுக்கு எல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம். இங்க எங்க பொழப்பு ஏதோ ஓடுது. நான்

குட்டீஸ் சாம்ராஜ்யத்தின் ‘குரல்’ தளபதிகள்!

டிஸ்கவரி', 'நேஷனல் ஜியாகிரஃபிக்' மாதிரியான சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு பின்னணிக் குரல் கொடுக்கிறேன். 'நிஞ்சா ஹட்டோரி’ கார்ட்டூனில் வரும் 'ஷுசிமாரு’ங்கிற நாய் கேரக்டருக்கும், 'மோட்டுபட்லூ’வில் வரும், தமிழும் தெலுங்கும் கலந்து பேசும் 'கசாட்டா ராம்’ கேரக்டருக்கும் குரல் கொடுக்கிறேன்'' என்கிறார் பின்னணிக் குரல் கலைஞரான தீபக்.

'நான் நூற்றுக்கணக்கான படங்களிலும், டி.வி சீரியல்களிலும் டப்பிங் பண்ணியிருக்கேன். என் ஃப்ரெண்ட் ஒருத்தி ரொம்ப வற்புறுத்த, 'நிஞ்சா ஹட்டோரி’யில் வரும் 'சின்ஸு’ கேரக்டருக்குப் பேசினேன். அது நிறைய வாண்டூஸுக்குப் பிடிச்ச குரலாகிடுச்சு. டப்பிங் ஆர்ட்டிஸ்ட் இன்ஸ்டிட்யூட் வெச்சிருக்கும் ஹேமாமாலினி மேடம்கிட்ட என்னை எங்கப்பா சேர்த்துவிட்டார். அங்க கத்துக்கிட்ட விஷயங்கள்தான் இப்பவும் எனக்குக் கை கொடுக்குது'' என்ற காயத்ரி, ''பின்னணிக் குரல் கொடுக்கிறவங்களுக்கும் தமிழக அரசு சார்பில் விருது கொடுக்கணும்!'' என்று, கோரிக்கைக் குரல் கொடுத்தார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism