Published:Updated:

'அடிக்கடி கரும்பை கடி கடி!’

ந.ஆஷிகா

'அடிக்கடி கரும்பை கடி கடி!’

ந.ஆஷிகா

Published:Updated:

''என்னது கரும்பா? அதை கடிச்சு மென்னு துப்புறதுக்குள்ள வாய் வலிக்குமே'' 

எனப் புலம்புபவரா நீங்கள்? உங்க எண்ணத்தை மாத்திக்கோங்க. கரும்பால என்னென்ன பலன்கள் இருக்குனு என தெரிஞ்சிக்க, டயட்டீஷியன் பூங்கோதை சொல்லும் இன்ட்ரஸ்டிங் பிட்ஸ் இங்கே...

1. கால்சியம், குரோமியம், புரோட்டீன், விட்டமின்ஸ், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்துனு கரும்பில் இருக் குற சத்துக்களை எண்ணிட்டே போகலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2. கரும்பில் இருக்கும் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்ஸ், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மஞ்சள்காமாலை நோய் இருப்பவர்கள் அடிக்கடி கரும் பைக் கடிக்கலாம்.

3. செரிமானம், சருமப் பொலிவு இதுக்கெல்லாம் உதவியா இருக்குறதோட, உங்க உடம்புல இருக்குற கெட்ட கொலஸ்ட்ரால் 'டக்’குன்னு குறையவும் கரும்பு சாப்பிடணும்.

'அடிக்கடி கரும்பை கடி கடி!’

4.கரும்புச் சாற்றில் இருக்கும் புரோட்டீன், கிட்னி செயல்பாட்டுக்கும், கிட்னியில் கற்கள் வராமல் தடுக்கவும் பயன்படுறதோட யூரினரி இன்ஃபெக்‌ஷன் வராமலும் தடுக்கும்.

5.தாகத்தை சட்டுனு தணிக்கும் நேச்சுரல் எனர்ஜி டிரிங்க்ஸ், நம்ம கரும்புதான்.

6.ரத்தத்தில் உள்ள ஹீமோகுளாபின் அளவை மேம்படுத்துற பவர், கரும்புக்கு இருக்கு. அதனால ஜூஸா சாப்பிடுறதோட, கடிச்சு மென்னு சாப்பிட் டோம்னா, சத்துக்கள் எதுவும் வீணாகாம, மொத்தமா கிடைச்சுடும்.

7.ஆலும் வேலும்    போலத்தான் க ரும்பு் பல்லுக்கு  உறுதி சேர்க்கும். அதனால வலுவான பல்லுக்கு உத்தரவாதம் வேணும்னா, அடிக்கடி கரும் பைக் கடிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism