Published:Updated:

கேர்ள்ஸ் புரொஃபைல்!

தொகுப்பு: ரா.ஆனந்தி, படங்கள்: த.நிவாசன்

கேர்ள்ஸ் புரொஃபைல்!

தொகுப்பு: ரா.ஆனந்தி, படங்கள்: த.நிவாசன்

Published:Updated:

இந்த புரொஃபைலில் உள்ள கேர்ள்ஸ்... கோவை, பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரி மாணவிகள்!

திறமைகள் பலப்பல!

புரொஃபஷனல் டான்ஸர், டீச்சர், மாடல், பிசினஸ் கேர்ள்... பி.எஸ்ஸி., கெமிஸ்ட்ரி மூன்றாம் வருடம் படிக்கும் இஷாவின் புரொஃபைல், டிஸ்டிங்ஷன். கேம்பஸ் இன்டர்வியூலயும் தேர்வாகி, கைவசம் வேலையும் வெச்சிருக்கு பொண்ணு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

''முறைப்படி டான்ஸ் கத்துக்கிட்டு, நடன நிகழ்ச்சிகள் செய்துட்டு வந்தேன். எளிய உடற்பயிற்சிகள் இணைந்த நடனம் மூலமா உடலைப் பராமரிக்கும் பெண்களுக்கான பயிற்சி வகுப்புகள் எடுத்தேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அடுத்த முயற்சியா, 'டெக்கொ பார்ச்’ என்ற புதுவித கிராஃப்ட் தொழில்நுட்பத்தைக் கொண்டு புதுவித டிசைன் களில் மொபைல் கவர், வாலட், பேக், ஷூஸ்னு அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே கலை நயத்தோட உருவாக்குறேன். இதையெல்லாம் கடைகள்ல ஆர்டர் பெற்றும் செய்து தர்றேன். பெண்களுக்கான கிராஃப்ட் பயிற்சி வகுப்பு களும் எடுக்கிறேன். பொழுதுபோக்குக்காக மாடலிங் செய்ற பழக்கமும் உண்டு. ஏர் ஹோஸ் டஸ் ஆகணும்கிறதுதான் லட்சியம்!''

டேக் ஆஃப் இஷா!

உலகம் சுற்றும் சிட்டு!

பி.எஸ்ஸி., எகனாமிக்ஸ் முதலாமாண்டு படிக்கும் நிவேதா, துப்பாக்கி சுடும் வீராங்கனை.

''5 வருஷமா பயிற்சி எடுத்துட்டு இருக்கேன். மாவட்ட அளவிலான பல போட்டிகள்ல பரிசுகள் வாங்கியிருக்கேன். முதலாமாண்டு படிக்கும்போது, செக் குடியரசு நாட்டுல நடந்த ஜூனியர் இன்டர்நேஷனல் இண்டிவிஜுவல்  10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளியும், குழுவினருக்கான 25 மீட்டர் ஸ்போர்ட்ஸ் பிஸ்டலில் வெண்கலமும் வென்றேன். என்னோட முதல் சர்வதேசப் போட்டியிலேயே வெற்றி கிடைச்சது, ரொம்ப ஊக்கமா இருந்துச்சு. அடுத்து தேசிய அளவில் நடந்த சுரேந்திர சிங் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் ஜூனியர் பிரிவில், 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் தங்கம் வென்றேன். பின்பு, ஸ்பெயினில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பா பங்கேற்று, குழுவினருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் ஐந்தாவது இடம் பிடிச்சேன். ஒலிம்பிக், ஆசியப் போட்டிகளில் நிச்சயம் நம் தேசத்துக்காக தங்கத்தை வெல்வேன்!''

டிஷ்யூம் டிஷ்யூம்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

காலேஜ் சேர்மன் கீர்த்தனா!

ஐ.ஏ.எஸ் ஆவதே லட்சியம்,மூன்றாம் ஆண்டு பி.எஸ்ஸி.,மேத்ஸ் படிக்கும் கீர்த்தனாவுக்கு.

''எப்பவும் ஏதாவது ஒரு சர்வீஸ்ல இருக்கணும் எனக்கு. அதனாலதான் காலேஜ் சேர்மன் எலெக்‌ஷன்ல நின்னு ஜெயிச்சேன். இந்த மாணவ சமுதாய நிர்வாகப் பொறுப்பு, எனக்கு மகிழ்ச்சியா இருக்கு. ஓய்வுநேரங்களில், கவிதைகள் எழுதப் பிடிக்கும். கவிதைப் போட்டிகளில் எல்லாம் நிச்சயமா பரிசு வாங்கிடுவேன். என்.சி.சி ஸ்டூடென்ட் நான். மேற்கு வங்காளத்தில் நடந்த முகாமில், தேசிய அளவுப் பயிற்சிகளில் தமிழ்நாட்டுக்கு முதல் இடம் பெற்றுத் தந்த பெருமையை எனக்குச் சொந்தமாக்கிக்கிட்டேன். படிப்பிலும் சமர்த்துதான். 92% மதிப்பெண்களோட டிபார்ட்மென்ட் டாப்பரா இருக்கேன். ஐ.ஏ.எஸ் லட்சியமா இருந்தாலும், ஒரு அனுபவமா இருக்கட்டுமேனு குரூப்4,

எஸ்.எஸ்.சி. (Staff selection Commison) தேர்வுகளை எழுதி,  தேர்வும் ஆகியிருக்கேன். 'நாங்கள் இணைகிறோம் மாற்றத்துக்காக’ என்ற மாணவ அமைப்பை உருவாக்கி, மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லிட்டு வர்றோம்!''

நன்று!

மூன்று தங்கங்கள்!

பி.எஸ்ஸி, மூன்றாம் ஆண்டு படிக்கும் அருள்மொழி, என்.சி.சியில் மாநில அள வில் சாதனை மாணவி.

''பள்ளி நாட்களில் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல்னு நான் ஒரு ஸ்போர்ட்ஸ் ஸ்டார். மராத்தான்னா எனக்கு வெறி. எங்க போட்டி நடந்தாலும் கலந்துக்குவேன். கல்லூரியில் சேர்ந்ததும் என்.சி.சியில் சேர்ந்தேன். இதுவரை தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடந்த பயிற்சி முகாம்கள்ல பங்கேற்றிருக்கேன். முதலாமாண்டு டிரெயினிங் கேம்ப்ல 2.5 கி.மீ கிராஸ் கன்ட்ரி பிரிவில் தங்கப்பதக்கம் வாங்கினேன். மாநில என்.சி.சி குழுக்களுக்கு இடையேயான போட்டியில் யாரும் இதுவரை நிகழ்த்தாத சாதனையா மூன்று தங்கங்கள், முறையே அப்ஸ்டகிள்ஸ், அட்வான்ஸ் ஷூட்டிங், ஹெல்த்அண்ட் ஹைஜீன் பிரிவில் வாங்கினேன். தேசிய அளவில் டெல்லியில் நடந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான்  நிக்கோபார் மாணவிகளை ஒரு சீனியரா வழி நடத்தினேன். அங்க என்னோட சிறப்பான பங்களிப்பால, என்.சி.சியோட உயரிய விருதான 'லைன் ஏரியா டிராபி’யை வென்றேன்!''

நாட்டு நலப்பணி திட்டம்... அருள்மொழி இஷ்டம்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

ஃபேஷன் பட்டர்ஃப்ளை!                  

எம்.எஸ்ஸி., காஸ்ட்யூம் டிசைன் ஃபேஷன் முதலாம் ஆண்டு படிக்கும் சுனிதாவின் டிசைனர் ஆடைகளுக்கு, கல்லூரியில் நிறைய ரசிகைகள், வாடிக்கையாளர்கள்!

''பாரம்பர்யம், ஃபேஷன் கலந்த ஆடைகளை டிசைன் செய்து, நானே உடுத்தினேன். அதுக்கு மேட்சிங் கம்மல், செயின், வளையல், ஹேண்ட்பேக்னு அக்சஸரீஸும் நானே உருவாக்கினேன். அதையெல்லாம் பார்த்த தோழிகள், தங்களுக்கும் அதுபோல டிசைன் செய்து கொடுக்கச் சொல்லிக் கேட்டாங்க. இப்போ வெளியில் இருந்தும் ஆர்டர்கள் வருது. நெயில் ஆர்ட், ஃபேஸ் பெயின்ட்டிங்... இது ரெண்டும் என்னோட மற்ற திறமைகள். குறிப்பா, நெயில் ஆர்ட்டில் கார்ட்டூன் கேரக்டர்ஸ், குட்டி தீம்கள் எல்லாம் வரைவேன். பொட்டீக் ஷாப் ஒண்ணு ஆரம்பிக்கிறதுதான் ஆசை. அது பெண்களுக்கு மட்டுமானதாவோ ஆண்களுக்கு மட்டுமானதாவோ இல்லாம, ரெண்டு பேரும் ஜோடியா, திருப்தியா ஷாப்பிங் பண்ணும் விதமா இருக்கும்!''

கலக்குங்க! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism