Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

ஓவியங்கள்: சேகர்

குட்டீஸ் குறும்பு!

ஓவியங்கள்: சேகர்

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு!

 200    

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

’யானையைப் பார்த்து கத்துக்கோ!’

குட்டீஸ் குறும்பு!

டி.வியில் நேஷனல் ஜியோகிரஃபிக் சேனல் பார்த்துக்கொண்டிருந்தோம். காட்டில் யானைக்குட்டி ஒன்று திரிந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்த எங்கள் வீட்டுச் சுட்டி அகிலேஷ், ”அம்மா, நான் ரோட்ல விளையாடினா திட்டறயே... அந்தக் குட்டி யானை காட்டில் திரியறதுக்கே அவங்க அம்மா திட்டாம இருக்காங்க பார்த்தியா..!'' என்றான்.

இதைக்கேட்ட பிறகு வீடு அதிர சிரிக்காமலா இருக்கமுடியும்!

- ஆர்.நந்தினி, வந்தவாசி

வாரம் ஒரு நாள் என்ன செய்யணும்?

குட்டீஸ் குறும்பு!

முதலாம் வகுப்பு படிக்கும் என்மகன் படிப்பில் நம்பர் 1, குறும்பிலும் அப்படியே! ஒரு நாள் பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது 'வாரம் ஒரு முறை நகத்தை வெட்டிக்கொள்வது நல்லது’ என்ற பதிலுக்கு உரிய கேள்வியை அவனிடம் இருந்து வரவழைக்க ”வாரம் ஒரு முறை எதை கட் பண்ண வேண்டும்?'' என்று கேட்டேன். '”வாரம் ஒரு நாள் ஸ்கூலுக்கு கட் அடிக்கணும்'’ என்று அவன் சர்வசாதாரணமாக சொன்ன பதிலை கேட்டு, வீட்டில் உள்ள அனைவரும் சிரித்து மகிழ்ந்தோம்.

- எஸ்.லஷ்மி, சேலம்

தூத்துக்குடி... சாத்துக்குடி!

குட்டீஸ் குறும்பு!

என் தந்தை, சிறுவர் சிறுமியருக்கு 'பலதுறை பயிற்சி வகுப்பு’ நடத்தி வருகிறார். தேசத் தலைவர்கள் தியாகம், புராணக் கதைகள், ஸ்லோகங்கள் சொல்லித் தருவார். நான் அவருக்கு உதவியாக இருப்பேன். ஒரு நாள் வ.உ.சிதம்பரனார் பற்றி கதை கூறி, அவரது தியாகத்தைப் புரியவைத்து, அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தார் எனக் கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு குட்டிப் பெண், ''தாத்தா எனக்கு சாத்துக்குடிதான் தெரியும். அது என்ன தூத்துக்குடி? அது எப்படி இருக்கும்?'' என்றாளே பார்க்கலாம்!

அவளுக்கு விளங்க வைக்க என் தந்தை பட்ட பாடு அப்பப்பா... இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது!

- சாயிதாசன், ஈரோடு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism