Published:Updated:

டெரக்கோட்டா ஜுவல்லரி...தெம்பான வருமானம்!

கே.அபிநயா   படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

டெரக்கோட்டா ஜுவல்லரி...தெம்பான வருமானம்!

கே.அபிநயா   படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:

பொதுவாகவே பெண்களுக்கு ஜுவல்லரி மேல் ஒரு கிரேஸ் இருக்கும். அந்த கிரேஸ்தான் என்னையும் பிசினஸ் லேடியா மாத்தி இருக்கு!''

- சொல்லும்போதே உற்சாகம் பொங்குகிறது சென்னை, சுப்ரஜாவுக்கு!

''ஒரு நாள் நானும் என் சகோதரியும் ஒரு நிகழ்ச்சிக்குப் போனோம். அங்க வந்த ஒரு பொண்ணு போட்டுட்டு இருந்தடெரக்கோட்டா ஜுவல்லரி, என் மனசை கவர்ந்து இழுக்க, அதை எப்படியாவது வாங்கிடணும்னு கூகுள்ல தேடிப் பாத்தேன். எல்லாமே எக்கச்சக்க விலை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெரக்கோட்டா ஜுவல்லரி...தெம்பான வருமானம்!

'கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலையே’னு ஃபீல் பண்ணதோடு மட்டும் விட்டுடாம... டெரக்கோட்டா ஜுவல்ஸ் எப்படி செய்யறதுனு ரெண்டு பேருமே தேடித் தேடிக் கத்துக்கிட்டோம்.

நாங்க செஞ்சத, நாங்களே போட்டுப் பாத்தோம். இதைப் பாத்து நிறைய பேர் ஆர்டர் கொடுத்ததோட கத்துக்கொடுக்க சொல்லியும் கேக்க ஆரம்பிச்சாங்க. இப்ப ரெண்டு வருஷமா கிளாஸும் நடத்திட்டு இருக்கோம். இதுவரைக்கும் 600 பெண்களுக்கு மேல் பயிற்சி கொடுத்திருக்கோம். செய்யுற நகைகளை ஃபேஸ்புக்லயும் அப்லோடு பண்ணுவோம். இது எங்களுக்கு இலவச விளம்பரமா இருக்கு. என் சகோதரி, சொந்த காரணங்களுக்காக பிசினஸ்ல இருந்துவிலகிட்டதால, தனியாதான் பார்த்துட்டிருக்கேன்.

மாசம் 5 பேருக்கு பயிற்சி கொடுத்தாலே 10 ஆயிரம் கிடைக்கும். ஒரு நபருக்கு 300 முதல் 400 ரூபாய்தான் செலவாகும். சின்னமுதலீட்டோட நாமே நகைகளைத் தயாரித்து, விற்பனை செய்தா அதன் மூலமாவும்சம்பாதிக்கலாம். ஆகமொத்தம், நேரத்தையும் திறமையையும் பொறுத்து குறைந்தபட்சம் 10 ஆயிரம் முதல்... லட்சம்ரூபாய் வரைகூட வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்'' என்கிறார் சுப்ரஜா தெம்பாக!

டெரக்கோட்டா ஜுவல்லரி பிசினஸ் பற்றிய தகவல்கள் மற்றும் இந்த தொழிலின் நுணுக்கங்கள் பற்றி வழிகாட்டும் ஒலியில் ஜனவரி 13 முதல் 19 வரை பேசுகிறார் சுப்ரஜா.

044 - 66802912 என்ற எண்ணை டயல் செய்யுங்க.

''ஆர்வமும் முழு முயற்சியும் இருந்தா போதும், ஒரே மாதத்தில் நல்ல நியூஸ் ரீடரா வர முடியும். இதைத் தவிர, ஃபுல் டைம், பார்ட் டைம்னு ஏகப்பட்ட தொழில் வாய்ப்புகளும் நம்மை சுத்தியே நிறைஞ்சிருக்கு'' என்று சொல்லும், ஜான் லோபஸ், செய்தி வாசிப்பாளராவதற்கான பயிற்சி வகுப்பு நடத்துகிறார். கூடவே, பலவிதமான தொழில் வாய்ப்புகளுக்கும் வழிகாட்டுகிறார். அடிப்படையில் இவர்,

டெரக்கோட்டா ஜுவல்லரி...தெம்பான வருமானம்!

தகவல் அறியும் உரிமை இயக்கம்' என்ற அமைப்பின் நிறுவனர். இதன் மூலமாக பல்வேறு சமூக பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

"ஏற்கெனவே ஏகப்பட்ட சேனல்கள், இதுல புதுசுபுதுசா வேற வந்துட்டும் இருக்கு. அதனால, நியூஸ் ரீடர் வேலைக்கான வாய்ப்புகள் நிறையவே காத்திட்டிருக்கு. நல்ல பேச்சுத் திறனும் குரல்வளமும் மட்டும்தான் தகுதிகள்.

டெரக்கோட்டா ஜுவல்லரி...தெம்பான வருமானம்!

துணி புத்தம் புதுசா இருக்கும்... வாங்கி ஒரு வாரம் கூட ஆகியிருக்காது. கொஞ்சம் போல கிழிஞ்சுட்டதுக்காக தூக்கி மூலையில போட்டுடுவோம். இதுமாதிரி துணிகள்ல ஹேண்ட் பேக், தலையணை உறை, ஷாப்பிங் பேக் இப்படி பலதையும் நீங்களே தயாரிக்கலாம். இதுல கொஞ்சம் போல பூ வேலைப்பாடுகள் மாதிரி ஏதாவது டிசைன் செய்துட்டா... மொத்தமும் பணம்தான். இதுக்காக பெருசா மூதலீடு எல்லாம் தேவைப்படாது.

டெரக்கோட்டா ஜுவல்லரி...தெம்பான வருமானம்!

காபிக்கு எப்பவுமே நல்ல டிமாண்ட் இருக்கிறது, காபியைத் தேடி நீங்க அலையறதுல இருந்தே புரிஞ்சுக்கலாம். அதனால மக்கள் அதிகமா வேலை செய்யுற, நடமாடுற இடங்களா பார்த்து காபி வெண்டிங் மெஷினை வாங்கிப் போட்டுட்டா... சுலபமான வருமானம்தான்'' என்று வருவாய்க்கான சுலப வழிகளாக அடுக்கும் ஜான் லோபஸ், தகவல் அறியும் உரிமைச் சட்டம், நியூஸ் ரீடர் வேலை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், காபி வெண்டிங் பிசினஸ், தையல், ஃபுளோரல் டிசைனிங் என்று பல எளிய பிசினஸ்கள் பற்றி வழிகாட்டும் ஒலி பகுதியில் ஜனவரி 20 முதல் 26 வரை உங்களுக்குக் கற்றுத்தருகிறார்.

044  - 66802912 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism