''என் வாழ்க்கையில் ஒரு டென்ஷன் வந்திருக்குனா, அதை நான் ஏத்துக்கிட்டதுனாலதானே இருக்கு? அப்படி உங்க வாழ்க்கையில் உள்ள டென்ஷனுக்கும், நீங்கதான் பொறுப்பு!''

இந்த விஷயத்தை, தொடர்ந்து விரிவா பேசுவோம்னு சொல்லியிருந்தேன் இல்லையா? நிச்சயம் நாம பேச வேண்டிய, ஒவ்வொருவரும் உணர வேண்டிய விஷயம் இது.

எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரேமாதிரியான சம்பவங்கள் நடந்தாலும், அவரவரைப் பொறுத்து அதன் விளைவுகளும் முடிவுகளும் மாறுபடும். சம்பவங்கள் என்றால், வெற்றி, தோல்வி, சந்தோஷம், விபத்து, லாபம், இழப்பு... எல்லாமேதான்! இவற்றை எதிர்கொள்ளும் விதம், அவரவர் வயசு, இயல்பு, படிப்பு, அவங்க இருக்கிற நிலைமை, மனநிலை, ஆரோக்கியம், ஆளுமை எல்லாத் தையும் பொறுத்துத்தான் இருக்கும்.

சிலர் இந்தத் தருணங்களை எல்லாம், ரொம்ப பக்குவமா, சுலபமா கடந்துடுவாங்க. என்ன வந்தாலும் சிரிச்சுட்டே இருந்துடுவாங்க. சிலர், எப்போ பார்த்தாலும் டென்ஷன் ஆகறது... ஒரே நேரத்தில் கையில் நாலஞ்சு வேலைகளை வெச்சுக்கிட்டு, எந்த வேலையையும் ஒழுங்காக முடிக்காம இருப்பாங்க! இன்னொரு டைப், அதைப் பண்ணணுமா... வேண்டாமா, இதைச் செய்யலாமா... வேண்டாமானு சந்தேகத்திலும், குழப்பத்திலுமே இருக்கிறவங்க. இந்த மாதிரி பலவிதங்களில் மனிதர்கள் இருக்காங்க! நாம எல்லோருமே இதில் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்தவங்களாகத்தான் இருப்போம். ஆனா, ஒவ்வொரு சந்தோஷம் அல்லது துக்கச் சூழ்நிலையிலும் 'இது நமக்கு மட்டுமே நடக்குது’ங்கிற மாதிரிதான் பெரும்பாலானவங்க நினைச்சுக்குவோம்.

இந்த மாதிரி தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் வரும்போது, பெரும்பாலானவங்க இதை எப்படிக் கையாண்டிருக்காங்கனு பார்த்து, பாடம் கத்துக்கிட்டு, நம்ம வாழ்க்கையில் அப்ளை பண்ணிக்கணும்.

உதாரணத்துக்கு என் வாழ்க்கையையே எடுத்துக்கிட்டீங்கனா, என் பிரச்னைகள் என்ன... எனக்கு என்னென்ன சவால்கள் இருக்குனு பார்த்தா, என் பெரிய பிரச்னையே... எதுக்குமே 'நோ’ சொல்லத் தெரியாத என் இயல்புதான்! எனக்கு வேண்டப்பட்டவங்க யார், என்ன கேட்டாலும், 'முடியாது’னு சொல்ல மாட்டேன். ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான் இருக்கு. நாம தலைகீழா நின்னாகூட, அது ஜாஸ்தியாகப் போறதில்ல. இருந்தாலும், யாராவது கேட்டாங்கனா, அந்த 25-வது மணி நேரத்துக்கான வேலையை 'செய்றேன்’னு ஏத்துக்குவேன். அதை எப்படி, எப்போ பண்ணப் போறேன்றதெல்லாம் அப்புறம்! 'முடியாது’னு சொல்லி அவங்களை 'ஹர்ட்’ பண்ணிடக் கூடாது! அது ஒண்ணுதான் அந்த நேரத்துக்கு முக்கியமாக இருக்கும்.

ஒரு கட்டத்துல, எல்லா பொறுப்பையும் இழுத்துப் போட்டுக்கிட்டுத் திணறும் அந்த விநாடியில் எனக்குள்ளேயே தோண ஆரம்பிச்சுது... ''அரே... என்ன பண்ற நீ? யாரையும் புண்படுத்தக்கூடாதுனு எல்லாத் தையும் செய்றேன்னு ஏத்துக்கிற! ஆனா, நீயும் மனுஷிதானே! உன்னால இவ்வளவுதான் பண்ண முடியும்னு எல்லாத்துக்குமே ஒரு எல்லை இருக்கு இல்லையா?''்னு எச்சரிக்கை கொடுத்துச்சு உள்மனசு.

எல்லோருக்குமே அந்த எல்லைக்கோடு வரும்! எவ்வளவுதான் மெனக்கெட்டாலும், 'அப்பாடா... இனி என்னால முடியாதுடா சாமி!’னு ஒரு தருணம் வரும் பாருங்க, அந்தச் சூழ்நிலை வந்ததுனா, நீங்க யாரை ஏமாத்தக்கூடாது, புண்படுத்தக் கூடாதுனு நினைக்கிறீங்களோ, அவங்க வேலையை அரைகுறையா விடத்தான் வேண்டியிருக்கும். ஏத்துக்கிட்ட பொறுப்பை முழுமையாக முடிக்க முடியலனா உங்க ரெண்டு பேருக்குமே நல்லது இல்லையே!

இதனால வர்றது பிஸிக்கல் ஸ்ட்ரெஸ், மென்டல் ஸ்ட்ரெஸ் மட்டுமில்ல... அந்த உதவியைக் கேட்டவங்களை ஏமாத்திட்டோமேங்கிற மனவருத்தம்... எல்லாத்தையும்விட, 'அய்யோ... நான் ஒரு வேலையை ஒப்புக்கிட்டு, இப்படி செய்யமுடியாமப் போயிடுச்சே!’னு எனக்கு என் மேலேயே ஏற்படும் வருத்தமும் குற்றஉணர்வும் மிகப் பெரியதாக இருக்கும்!

வேற வேற சூழ்நிலைகள்ல நாம எல்லோருமே இந்தத் தப்பைப் பண்றோம். நானும் அதே தப்பைப் பண்ணிட்டிருந்தேன். 'நாம தப்பு பண்றோம்’னு எங்கே உணர்ந்தேன்னா, முதல்ல, இதனால யாருக்குமே பிரயோஜனம் இல்லாமப் போகுதுனு புரிஞ்சப்போதான்!

''இது போதும்... இதுக்கு மேல என்னால முடியாதுனு நீ சொல்லணும்''னு என் தோழிக்குச் சொன்னதா, போன இதழில் நான் உங்ககிட்ட சொல்லியிருந்தேன். என்னோட அனுபவத்தை வெச்சுத்தான், அவளுக்கு இதை நான் சொன்னேன்.

ஆமாங்க... இப்பவும் சொல்றேன்...

'என்னால இது முடியாது! பிராக்டிகலா, இது நடக்கிற காரியம் இல்லை! உதவி செய்யணும்னுதான் இருக்கு. ஆனாலும் பிஸிக்கலா என்னால முடியாது’ங்கிறதைச் சொன்னா, உங்களைச் சுத்தி இருக்கிறவங்க, உங்க மேல அக்கறை உள்ளவங்க, உண்மையிலேயே உங்களுக்கு வேண்டப்பட்டவங்க... உடனே அதைப் புரிஞ்சுக்குவாங்க.

இது உங்க வாழ்க்கை... உங்க மனசு... உங்க உடம்பு... உங்க ஆரோக்கியம்... உங்க மண்டைக்குள்ள இருக்கும் உங்க பிரச்னை, உங்களோட தலைவலி! அதை நீங்கதான் அனுபவிக்கப் போறீங்க! இதுக்குத் தீர்வும் நீங்கதான் கண்டுபிடிக்கணும்.

நம்மைச் சுத்தி இருக்கிற பிரச்னைகள், அதனால் வரும் அழுத்தங்கள் நிறைய இருக்கலாம்... பலருடைய சூழ்நிலைகள் நாம் சொல்ற அளவுக்கு சாதாரணமா இருக்காது, தெரியும் எனக்கு! எனக்கே சில நேரங்கள்ல தோணும், 'அய்யோ... இவங்களுக்கு நான் எப்படி சொல்ல முடியும்? இவ்வளவு சிக்கலா இருக்கே!’னு. அந்த மாதிரி சென்சிட்டிவான தருணங்களில் கொஞ்சம் யோசிச்சு, கொஞ்சம் புத்திசாலித்தனமா முடிவெடுங்க. முடிஞ்சா யாராவது ஒரு வெல்விஷர்கிட்ட அட்வைஸ் கேளுங்க. இல்லைனா, 'அவள் விகடன்’ மாதிரி பத்திரிகைகளில் கவுன்சலிங் எழுதுறவங்ககிட்டயாவது ஆலோசனை கேளுங்க. பெயரைச் சொல்லாமல் கடிதம் போட்டாவது உதவி கேட்கணும்!

இதில் எந்தத் தப்புமே இல்லைங்க. 'எனக்கு உதவி வேணும்!’ என்கிற வார்த்தை உங்க வாயிலிருந்து வரணும். அதைக் கேட்கக் கூச்சப்படாதீங்க. ஒரு குழந்தை வாயைத் திறந்து அழலைனா... அதுக்குப் பசிக்குதுங்கிற விஷயம், அதனுடைய தாய்க்குக் கூடத் தெரியாம போயிடும்!

பேசுவோம்...

தொகுப்பு: பிரேமா நாராயணன்