Published:Updated:

கோலமாமணி!

அ.ஆமினா பீவி, படங்கள்: ஜெ.முருகன்

கோலமாமணி!

அ.ஆமினா பீவி, படங்கள்: ஜெ.முருகன்

Published:Updated:

ண்ணீருக்கு அடியில் கோலம், தண்ணீரில் மிதக்கும் கோலம், மணமக்கள் கோலம், 2,000 சதுர அடி கோலம் என... கோலத்தில் மகிழ்ந்து கரைந்து கொண்டிருப்பவர், புதுச்சேரியைச் சேர்ந்த மாலதி! கோலத்துக்காகவே 'கலைமாமணி’ விருது பெற்றிருக்கும் இவரை, சந்தித்தோம்!

கோலமாமணி!

''புதுச்சேரி, சாரதா வித்யாலயா பள்ளியில் ஏழாம் வகுப்பு படிச்சப்போ, எங்க பள்ளியில் கொண்டாடும் 'சாரதா ஜெயந்தி' விழாவுக்கு, வரவேற்புக் கோலம் போடச் சொன்னாங்க என் வகுப்பு ஆசிரியர். அப்ப போட்டதுதான், என்னோட முதல் கோலம். ஆர்ட் அண்ட் கிராஃப்ட்டில் விருப்பம் இருந்ததால, கோலத்திலும் புதிய உருவங்கள், வண்ணங்கள்னு கற்பனையை புகுத்த ஆரம்பிச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுவா, கோலம் போடும்போது, அவுட்லைன் போட்டுட்டுதான் கலர் கொடுப்பாங்க. நான் கோலத்தை வண்ணப் பொடிகள்லதான் ஆரம்பிப்பேன். அதிலேயே விரும்பும் உருவங்களைக் கொண்டு வருவேன். அதேபோல, என் கோலங்கள்ல திருத்தல்களே இருக்காது!'' எனும் மாலதி, கடந்த 25 ஆண்டுகளில் 10,000 வகைக் கோலங்கள் போட்டிருக்கிறார்.

கோலமாமணி!

''குறைந்தபட்சம் 1 சதுர அடி முதல் 2,000 சதுர அடி வரை கோலம் போட்டிருக்கேன். சில வருஷத்துக்கு முன்ன ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கலை ஆராய்ச்சியாளர்கள், நம் நாட்டுக் கோலம் பத்தி ஆராய்ச்சி செய்ய வந்திருந்தாங்க. டெல்லியில் நடந்த 'பார்டர் கிராஸிங் புரோகிராம்’கிற கலை நிகழ்ச்சியில், அவங்க கூட நானும் பங்கேற்று, அவங்க குறிப்பிடும் உருவங்களையும், படங்களையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் கோலமா வரைஞ்சது புதுமையான அனுபவம்!

கோலமாமணி!

கோலத்தில் பலவகை இருக்கு. புள்ளி வெச்சசிக்குக் கோலம், நம்ம பாரம்பர்யம். அதுல ஒரு புள்ளியில் ஆரம்பிச்சு, பல புள்ளிகளைச் சுத்தி, இறுதிப் புள்ளியில் முடிக்கிறது சாதாரண விஷயம் இல்ல. அதுதான் தமிழ்நாட்டுப் பெண்களோட சிறப்பு.

கோலமாமணி!

நம்ம வீட்டில் கிடைக்கூடிய எளிமையான பொருட்களைப் பயன்படுத்தியே, புதுமையான கோலங்கள் போடலாம். உதாரணமா, கல் உப்பு, தூள் உப்பு, மரத்தூள், நவதானியம், அரிசி, கலர் வத்தல், மணி, முத்து, மணல், கற்பூரம் இதெயெல்லாம் பயன்படுத்திக் கோலம் போடும்போது, கோலத்துக்கு ஒரு கவர்ச்சி கிடைக்கும். மணல் சிற்பம் செதுக்குறது போல, மணல்ல தத்ரூபமா காட்சியளிக்கும் கோலம் போட முடியும். ஃபிரெஞ்சு சாக் பவுடர் பயன்படுத்தி தண்ணீருக்கு அடியிலும், தண்ணீரின் மீதும் கோலம் போடலாம்!'' என்று விவரங்களை அடுக்கி, பிரமிக்க வைத்த மாலதி,''திருமணங்கள்ல மணமக்களின் புகைப்படங்களைக் கோலமா வரையுற டிரெண்ட் உருவாகியிருக்கு. நானும் அந்த வகைக் கோலம் போடுறேன். திருமண வரவேற்பு பகுதியில், எனக்குக் கொடுக்கப்பட்ட மணமக்கள் போட்டோவை தத்ரூபக் கோலமா வரைவேன். திருமணப் பத்திரிகையில் பிரபலமான நபர்களோட இசைக் கச்சேரியைக் குறிப்பிடுற மாதிரி, 'மாலதியின் மணமக்கள் கோலம்’னு என்னோட பெயரையும் குறிப்பிடுவாங்க!'' என்று மகிழும் மாலதி, புதுச்சேரி, டெலிவிஷன் சேனல் மூலமாக, சுலபமாகக் கோலம் போடும் கலையை கற்றுக்கொடுக்கிறார்.

கோலமாமணி!

லலிதா கலை பயிற்சி வகுப்பு’ மூலமாக தற்போது கோல வகுப்புகளும் எடுக்கிறார்.

'கோலத்தில் கின்னஸ் ரெக்கார்ட்... இதுதான் என்னோட லட்சியம்!''

விரல்களில் பிசுபிசுக்கும் கோலப்பொடியுடன் விடை கொடுக்கிறார் மாலதி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism