Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு!

 200

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குட்டீஸ் குறும்பு!

 ஆஹா... ஸ்வாஹா!

க்கத்து வீட்டில் குடியிருக்கும் பெண்மணி எங்கள் வீட்டுக்கு வந்து, தான் சீட்டு நடத்துவதாகவும், அதில் சேரும்படியும் கூறி சீட்டுப்பணம் குறித்தும், அதில் வரும் லாபம் குறித்தும் பேசிச்சென்றார். அவர் சென்றதும் என் மாமியார், ’'பேப்பரை எடுத்தாலே சீட்டு மோசடி பற்றித்தான் அதிகம் வருது. நம்பி போடவே பயமா இருக்கு. பேங்கில் போட்டா... குறைஞ்ச வட்டியா இருந்தாலும் நிம்மதியா இருக்கலாம்'' என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த என் மகள், ”ஆமா, ஆமா... பேங்க்ல போட்டா உங்க பணம் ஆஹா... சீட்டுல போட்டா உங்க பணம் ஸ்வாஹா!’' என்று டி.வியில் வரும் நகைக்கடை விளம்பரத்தை இமிடேட் செய்ய, அதைக் கேட்டு நாங்கள் சிரித்துத் தீர்த்தோம்!

- பி.ராணி, சேலம்

குட்டீஸ் குறும்பு!

திசையெங்கும் கடவுள்!

ன் ஐந்து வயது பேத்திக்கு குறும்பு ஜாஸ்தி. சகட்டுமேனிக்கு எல்லோரையும், குறிப்பாக என்னைக் கலாய்ப்பதில் அவளுக்கு ஏக குஷி! ஒரு நாள் சாமி பூஜை முடிந்ததும் அவளை அழைத்து, ”சாக்கு நமஸ்காரம் பண்ணு. படிப்பு நல்லா வரும்’' என்றேன். அவள் சாமி படத்துக்கு எதிர்திசையில் நமஸ்காரம் செய்ய, நான் பதறிப்போய், ”என்னடி இது... சாமி இந்த பக்கம் இருக்குடி. அதுகூட தெரியலையா?’' என்று கத்தினேன். அவளோ கூலாக, ”ஏன் பாட்டி, நீதானே நேத்திக்கு சொன்னே, ”சாமி எல்லா இடத்துலயும் இருக்காரு'னு. அப்ப இந்தப் பக்கத்துலயும் இருக்கணும்ல?'' என்றாள் குறும்பாக!

எல்லோரும் சிரிக்க, நான் மட்டும் அவ்வ்வ்வ்!

- ஆர்.மாலதி, ஸ்ரீபெரும்புதூர்

குட்டீஸ் குறும்பு!

ரிப்பன் இருந்தா... ஃபீமேல்!

ன் செல்ல மகனுக்கு ஆங்கிலத்தில் ஆண் பால், பெண் பால் பற்றி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் சொல்லி தந்துவிட்டு, சில உதாரணங்களைக் கூறி விளக்கினேன். பிறகு, அஃறிணையான நியூட்டர் ஜெண்டர் பற்றிக் கூறிவிட்டு சில கேள்விகளைக் கேட்டேன். அப்போது ”டைப்ரைட்டர் என்பது என்ன ஜெண்டர்?'’ என கேட்க, 'ஃபீமேல்’ என்று கூறினான். எப்படி எனக் கேட்க, ”அதுக்குதான் ரிப்பன் இருக்கே!’' என்றானே பார்க்கலாம். குபீர் என சிரித்துவிட்டேன்.

- கே.தீபிகா, சென்னை-116

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism