Published:Updated:

நாங்கள்லாம் அம்பானிக்கு அக்கா பொண்ணுங்க!

ஒருநாள் தொழிலதிபர் கலாட்டா க.தனலட்சுமி,  படங்கள்: ச.ஹர்ஷினி

நாங்கள்லாம் அம்பானிக்கு அக்கா பொண்ணுங்க!

ஒருநாள் தொழிலதிபர் கலாட்டா க.தனலட்சுமி,  படங்கள்: ச.ஹர்ஷினி

Published:Updated:

''கைத்தொழில் ஒன்றைக் கத்துக்கிட்டு, ஒரு நாள் தொழிலதிபர் ஆகலாமா?!''னு சென்னை, காலேஜ் கேர்ள்ஸ் சிலரை இன்வைட் செய்தோம். 'ஸ்டைபண்ட் ஏதாச்சும் கொடுத் தீங்கனா, பாக்கெட் மணிக்கு ஆகுமே?’, 'ஏதாச்சும் ஜாப் ஃபேர் மேளா மாதிரியா..?!’, 'கவர்ன் மென்ட் ஸ்கீமா, இல்லை என்.ஜி,ஓ புரோகிராமா?’னு கேள்விகள் கேட்டுக் குடைச்சல் கொடுத்தவங்கள, 'ஸ்டாப் இட்!’ சொல்லி அவங்கவங்க ஸ்பாட்டுக்கு கூட்டிட்டுப் போனோம்!

'அபர்ணா... மளிகைக்கடை!’

''என்ன இந்தக் கடைக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க? இங்கதான் மாசமாசம் மளிகை வாங்குவோம்!''னு சொன்ன அபர்ணாவோட முகம் அதுவரை பிரைட்டாதான் இருந்தது. ''யெஸ்! இன்னிக்கு நீங்க இங்கதான் 'ஒரு நாள் மளிகைக்காரம்மா’ ஆகப்போறீங்க. அதுதான் அசைன்மென்ட்!''னு சொல்ல,''ஒரு விளக்கெண்ணெய், எண்ணெய் விக்கப் போகுதா!''னு செல்ஃபா பல்பு கொடுத்துக்கிட்டவங்களை செல்லமா தலையில் தட்டி, கல்லாவில் உட்கார வைத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாங்கள்லாம் அம்பானிக்கு அக்கா பொண்ணுங்க!

''பொருளோட விலையை எல்லாம் கடைக்காரம்மாகிட்ட கேட்டு வெச்சுக்கோங்க...''னு நாம சொல்ல,''எங்க வீட்டுல மாச மளிகை பட்ஜெட் போடுறதுல இருந்து, இதே கடையில வாங்கிட்டு வர்றது வரைக்கும் எல்லாமே நாங்கதான். எங்களுக்கேவா?!''னு அபர்ணா சலம்ப, நாம் சைலன்ட் மோடு.

'யம்மா, ஒரு கிலோ பொன்னியரிசி...’, 'வெல்லம் அரை கிலோ, நெய் அரை லிட்டர் கொடு...’, 'இடிச்ச புளி அரை கிலோ போடு’னு வந்து விழுந்த சவுண்ட்ல 'இடிச்சல்’ ஆகிட்டாங்க அபர்ணா. துவரம்பருப்பு கேட்டவருக்கு, பாசிப்பருப்பு கொடுக்க, ”என்னம்மா இது?''னு கஸ்டமர் நியாயம் கேட்க, ”இந்தப் பருப்புல இன்னிக்கு சாம்பார் வெச்சுப் பாருங்க. டேஸ்ட் சூப்பரா இருக்கும், புரோட்டீனும் அதிகமா கிடைக்கும்!''னு 'ஒரு நாள் டயட்டீஷிய’னும் ஆகி பட்டையைக் கிளப்பின அபர்ணா, ''நாங்கள்லாம் அம்பானிக்கு அக்கா பொண்ணுங்க!''னு பன்ச் வேற சொன்னாங்க. 'அக்கா ரெண்டு ரூபா கம்மியா இருக்கு... எனக்கு இந்த சாக்லேட் வேணும்’னு கேட்ட பாப்பாவுக்கு தன் கைக்காசைப் போட்டு அபர்ணா சாக்லேட் வாங்கிக் கொடுத்தது, இந்த எபிசோடின் சூப்பர் சென்ட்டிமென்ட் ஸீன்!

''புது டிரெஸ்... கிரீஸ்!''

சண்முகப்பிரியாவை ஸ்கூட்டியில் ஏத்திக்கிட்டு, திருவல்லிக் கேணி மெக்கானிக் ஷாப்ல போய் நிக்க, ''என்னாச்சு... டயர் பங்ச்சர் ஒட்டப்போறீங்களா?''னு அப்பாவியா கேட்டாங்க. ''நீங்கதான் ஒட்டப் போறீங்க. இன்னிக்கு நீங்க 'ஒரு நாள் மெக்கானிக்’ ஆச்சே!''னு நம்ம சதித்திட்டத்தைச் சொல்ல, ''அடப் பாவிங்களா... முதல்லயே சொல்லியிருந்தா பழைய டிரெஸ்ஸாச்சும் போட்டுட்டு வந்திருப்பேனே!''னு காத்துப் போன டயராகிட்டாங்க சண்முகப்பிரியா. அந்த நேரம் பார்த்து பங்ச்சர் ஒட்டறதுக்காக வரிசையா மூணு பைக் வந்து நிக்க, ஏரியா பரபரப்பாச்சு. சீஃப் மெக்கானிக், 'டயரைக் கழட்ட 10, 12 ஸ்பேனரை எடு...’னு பிரியாவுக்கு டிரெயினிங் கொடுக்க, அவங்க திருதிருனு முழுக்க, ''நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்ட!''னு நாம கலாய்க்க, நட்டு கழண்டுட்டாங்க பிரியா.

நாங்கள்லாம் அம்பானிக்கு அக்கா பொண்ணுங்க!

அடுத்து பிரேக் பிடிக்காத ஸ்கூட்டியோட ஒரு காலேஜ் பொண்ணு வர, ''இப்பப் பாருங்க என் திறமைய!''னு ரெண்டே நிமிஷத்துல பிரேக்கை சரி செஞ்சுட்டாங்க பிரியா.

''என் ஸ்கூட்டிக்கு நான்தான் எப்பவுமே பிரேக் சரி பண்ணுவேன்!''னு ஒரே பெருமை. காத்து அடிச்சு, டயரைக் கழட்டி, ஸ்பேர் பார்ட்ஸ் எடுத்துத் தந்து பிரியா ஒரு மணி நேரம் ஓய்வில்லாமல் உழைச்சதுல அவங்க மேக்கப் எல்லாம் கலைஞ்சு போக, ''இங்க பாருங்க என் புது டிரெஸ் எல்லாம் கிரீஸ் கறை!''னு ஒரே அழுவாச்சி காவியம்.

''கறை நல்லது பாப்பா!''னு ஓனர் கமென்ட் அடிக்க, ''சரி சரி... சம்பளத்தை தாங்க!''னு பிரியா கேட்க, சுதாரிச்ச ஓனர்... ''நீங்கதான் என் கடைக்கு வாடகை தரணும்!''னு திருப்பிக் கேட்க, நாம அப்பீட்டு!

''பொண்ணு பார்க்க வரும்போது..!''

'தர்ஷிகாவுக்கு என்ன அசைன்மென்ட் கொடுக்குறது..?’

ரொம்ப நேரமா பிடிபடாம யோசிச்சிட்டு இருந்தோம். கடுப்பான தர்ஷிகா, ''ரொம்ப டயர்டா இருக்கு... மச்சி ஒரு டீ சொல்லேன்!''னு கேட்க, ஐடியா!

''தர்ஷிகா இன்னிக்கு, ஒரு நாள் டீக்காரக்கா!''

''அய்யய்யோ... இந்த குக்கிங் மேட்டர் எல்லாம் நமக்கு செட் ஆகாதுப்பா''னு நழுவப் பார்த்தவங்கள, ''நீ வாடா செல்லம்... சொல்லித் தர நான் இருக்கேன்னு!''னு கூப்பிட்டாங்க அந்த டீக்கடைக்காரக்கா.

நாங்கள்லாம் அம்பானிக்கு அக்கா பொண்ணுங்க!

''நீங்க இருப்பீங்க ஆன்ட்டி. நான் போடற டீயைக் குடிக்குறவங்க உயிரோட இருக்கணுமே..!''னு தர்ஷிகா நியாயமா புலம்ப, டீக்காரக்கா விடுறதா இல்ல.

''சரி, ஆறிப்போன டீயில் சொல்லிக் கொடுங்க ஆன்ட்டி...''னு தர்ஷிகா கோரிக்கை வைக்க, ''இடது கையில கிளாஸப் புடிச்சிட்டு, வலது கையில கப்பை வெச்சுக்கிட்டு தூக்கி ஆத்து பார்ப்போம்...''னு அக்கா கொடுத்த டிரெயினிங் அரை மணி நேரத்துக்குப் போச்சு. அப்படியே டிகாக்‌ஷன் போடுறது, பால் எடுத்து ஊத்துறதுனு தர்ஷிகாவுக்கு சொல்லிக் கொடுக்குறதுக்குள்ள, டீக்காரக்காவே டயர்டு ஆகி நாலு டீ குடிச்சதுதான் மிச்சம்.

''ஆன்ட்டி ஒரு டீல். நீங்க டீ போடுங்க, நான் கல்லாவுல உட்கார்றேன்!''னு சொல்லி, அரை மணி நேரத்துல 200 ரூபாய் கல்லாக் காசு பார்த்துக் கொடுத்த தர்ஷிகா, கடைசியா டீக்காரக்காவுக்கு பை சொன்னப்போ, ''என்னைப் பொண்ணு பார்க்க வரும்போது நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரிதான் ஆன்ட்டி டீ போடுவேன்!''னு சொல்ல, டீக்காரக்காவுக்கு ஒரே சந்தோஷம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism