Published:Updated:

சென்னை... சான்ஸே இல்ல!

க.தனலட்சுமி, படங்கள்: ச.ஹர்ஷினி

சென்னை... சான்ஸே இல்ல!

க.தனலட்சுமி, படங்கள்: ச.ஹர்ஷினி

Published:Updated:

'சான்ஸே இல்ல ... சான்ஸே இல்ல...நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல!’னு நாமளே நம்ம புகழ் பாடாம, வெளிநாட்டில் இருந்து படிப்புக்காக நம்ம சிங்காரச் சென்னையில் டென்ட் அடிச்சிருக்குற என்.ஆர்.ஐ கேர்ள்ஸ்கிட்ட கேட்போமா!

சீப் அண்ட் சீஃப் ஸ்டடீஸ்!

'தமிழியன்ஸ்... பாசக்காரங்க!''னு கொஞ்சம் இங்கிலீஷ், கொஞ்சும் தமிழ்ல பேசினாங்க, அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு கெமிக்கல் இன்ஜீனியரிங் படிக்கும் பசந்தி சிங்கம்பள்ளி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை... சான்ஸே இல்ல!

''பூர்வீகம் மும்பை. அப்பா, புராஜெக்ட் மேனேஜரா இருக்கிறதால சவுதி அரேபியா, துபாய்னு சுத்தி, இப்போ கத்தாரில் செட்டில் ஆயாச்சு. கெமிக்கல் இன்ஜீனியரிங்தான் படிப்பேன்னு ஒத்தக் கால்ல நின்னப்போ... சென்னை, குஜராத்னு ரெண்டு சாய்ஸ் கொடுத்தார் அப்பா. சென்னையை 'டிக்’ அடிச்சேன். தெரியுமா... வெளிநாட்டுல அறுபது லட்சம் செலவு பண்ணி படிக்க வேண்டிய இந்தப் படிப்பை, இங்க ஆறே லட்சத்துல படிச்சுடலாம். இங்கதான் எஜுகேஷன் சீப் அண்ட் சீஃப்!''

''தமிழ்நாடு ரொம்ப டிவைன்!''

''பண்டிகைகள், கோயில்கள், திருவிழாக்கள், மார்கழி மாச இசைக் கச்சேரின்னு தமிழ்நாடு ரொம்ப டிவைன். இங்கயே செட்டில் ஆயிடலாம்னு தோணுது!''னு மெய்சிலிர்க்கும் கீத்திகா பிறந்தது மும்பை. வளர்ந்தது எல்லாம் குவைத். அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரியின் மூன்றாமாண்டு கெமிக்கல் இன்ஜீனியரிங் மாணவி.

சென்னை... சான்ஸே இல்ல!

''எங்க அப்பா, அம்மாவுக்கு நேட்டிவ் சென்னைங்கிறதால, தமிழ் நல்லா தெரியும். சென்னையைவிட, எனக்குப் பாண்டிச்சேரி ரொம்பப் பிடிக்கும். பீச், அன்னை அரவிந்தர் ஆசிரமம், ரம்மியமான சாலைகள்னு அது அழகான அனுபவம். சென்னை சூப்பர்! ஆனா, சென்னைக்காரங்க ரொம்ப ஹாட். அப்புறம்... இந்தியாவோட எஜுகேஷன் பேட்டர்னை இன்னும் கொஞ்சம் மாத்தினா நல்லா இருக்கும்னு தோணுது. அடிப்படை எல்லாம் நல்லா சொல்லிக் கொடுத்தாலும், மனப்பாடம் பண்ண வைக்குற எக்ஸாம் பேட்டர்ன்களை மாத்தலாம்!''

''தலப்பாகட்டு பிரியாணி... தமிழர்கள் கொடுத்து வெச்சவங்க..!''

'எலுமிச்சம்பழத்துல இருந்து ஏரோபிளேன் வரைக்கும் எல்லாமே ஈஸியா கிடைக்கும். அதான் சென்னை!''னு ஸ்வீட்டா ஆரம்பிச்ச கிருத்திராவ், குவைத் பக்கத்துல இருந்து வந்திருக்காங்க. அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு ஐ.டி படிக்கிறாங்க.

சென்னை... சான்ஸே இல்ல!

''நான் பிறந்தது ஆந்திராவுல தான். வேலைக்காக குடும்பத்தோட அப்பா குவைத் கிளம்பினப்போ, என்னையும் நாடு கடத்திட்டாங்க. சென்னை காலேஜ்லதான் சேருவேன்னு அடம் பண்ணி ஓடிவந்துட்டேன். காரணம், நெட்ல அவ்ளோ பார்த்திருக்கேன், படிச்சிருக்கேன்... சென்னை பத்தி! சத்தியமா சொல்றேன்... என் வாழ்க்கையிலேயே நான் எடுத்த உருப்படியான முடிவு இதுதான். இங்க எனக்கு ரொம்ம்ம்பப் பிடிச்சது, தலப்பாகட்டு பிரியாணி. லீவ் நாட்களில் ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து பெசன்ட் நகர் பீச்சுக்கு போய் சுத்திட்டு பிரியாணி சாப்பிடுறதுல அப்படி ஒரு சுகம்! இதுக்காகவே தமிழ்ப் பையனைக் கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா, இந்த தமிழ்தான் தகராறா இருக்கு. ஆட்டோ அங்கிள் எவ்ளோ கேட்குறாருனே தெரியமாட்டேங்குது!''

''உத்து உத்துப் பார்க்குறாங்க!''

''மாடர்ன் டிரெஸ் போட்டா, உத்து உத்துப் பார்த்தே உசுரை எடுத்துடறாங்கம்மா உங்காளுங்க!''னு செல்லக் கோபத்தோட ஆரம்பிச்ச பிருந்தா, கிண்டி பொறியியல் கல்லூரியில் எம்.எஸ்ஸி., எலெக்ட்ரானிக்ஸ்  மீடியா மூன்றாம் வருடம் படிக்குறாங்க. பொண்ணுக்கு சொந்த ஊரு சேலம்.

சென்னை... சான்ஸே இல்ல!

''விவரம் தெரியுற வயசுக்குள்ளயே விசா வாங்கி கனடா கூட்டிட்டுப் போயிட்டாங்க. அம்மா, அப்பா ரெண்டு பேரும் அங்கதான் வேலை பார்க்குறாங்க. ஸ்கூலிங் முடிச்சதும், இங்க வந்துட்டேன். ஆனா, மூணு வருஷம் ஆகியும் எனக்கு சென்னை செட் ஆகல. சுடி, குர்தானு இண்டியன் டிரெடிஷனல் உடைகள் எனக்கு செட் ஆகல. வெஸ்டர்ன் வேர் போட்டா, ஏதோ நான் மட்டும் தனியா தெரியுறதோட, எல்லாரும் உத்து உத்து வித்தியாசமா பார்க்குறாங்க. சாப்பாடு, க்ளைமேட்னு எதுவும் வொர்க் அவுட் ஆகல. ஆனாலும் எனக்கு இந்தியாவுல பிடிச்ச ஒரே விஷயம்... கோயில்கள். ரெண்டாவது விஷயமும் இருக்கு.... இந்தியன்ஸோட ஹெல்ப்பிங் டெண்டன்ஸி உலகத்துல வேற எங்கயும் பார்க்க முடியாது!''

பிரவுட் டு பி இண்டியன்ஸ்யா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism