Published:Updated:

‘‘ஆர்டர்கள் வந்துட்டே இருக்கும்!’’

கே.அபிநயா, படங்கள்: ரா.ராம்குமார், ப.சரவணகுமார்

‘‘ஆர்டர்கள் வந்துட்டே இருக்கும்!’’

கே.அபிநயா, படங்கள்: ரா.ராம்குமார், ப.சரவணகுமார்

Published:Updated:

கைவினைப் பொருட்களில் சிறப்பான வருமானம் பெறும் லட்சக்கணக்கான பெண்களில், கன்னியாகுமரியைச் சேர்ந்த செண்பகவள்ளியும் ஒருவர்!

‘‘ஆர்டர்கள் வந்துட்டே இருக்கும்!’’

''நான் பன்னிரண்டாவது முடிச்சவொடனே வேலைக்குப் போக வேண்டிய சூழல். மேல படிக்க முடியலைன்னாலும், கிராஃப்ட்டில் என் ஆர்வத்தைத் திருப்பினேன். புக்ல படிச்சு, டி.வியில பார்த்து கத்துக்கிட்டுனு நான் பண்ற பொருட்களை எல்லோரும் பாராட்டுவாங்க. அதுக்கு முறையா கிளாஸ் போய் கத்துக்கலாம்னு நினைச்சப்போ, அதுக்கான கட்டணம் என்னால கட்ட முடியாத அளவுல இருந்துச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு விஷயத்துல நாம தளராத ஆர்வம் காட்டினா, அதுக்கான வழி கண்டிப்பா கிடைக்கும். எனக்கும் அப்படித்தான் கிடைச்சுது... மத்திய அரசின் சமுதாய மேம்பாட்டு திட்டம் மூலமா! அதைப் பத்தி தெரிய வந்ததும், அதில் சேர்ந்து ஐந்து கிராஃப்ட் கோர்ஸ்கள் முடிச்சேன். இப்போ மகளிர் திட்ட அலுவலகம் மற்றும் டீச்சர் டிரெயினிங் படிக்கிறவங்க ஆர்டர்கள் கேட்டால் கிராஃப்ட் பொருட்கள் செய்து கொடுத்துட்டு இருக்கேன்.

நான் செய்யும் பொருட்களுக்கு எல்லாம் நியாயமான விலைதான் நிர்ணயம் செய்வேன். அதேபோல, குறைந்த கட்டணத்தில்தான் பயிற்சி வகுப்புகளும் எடுக்குறேன். ஏன்னா, ஆரம்ப காலத்துல காசில்லாம நான் கிளாஸுக்குப் போக முடியாம திணறின மாதிரி, மற்ற பெண்களும் திணறக் கூடாதுனு நினைக்கிறேன். அதனாலதான் இந்தத் தொழில் எனக்கு பண நிறைவை மட்டுமில்லாம, மனநிறைவையும் தருது.

‘‘ஆர்டர்கள் வந்துட்டே இருக்கும்!’’

கிராஃப்ட் தொழிலில் மாதம் குறைந்தது 5,000 ரூபாய் சம்பாதிக்கலாம். நாம செய்யும் பொருட்களின் தரமும், அதில் நாம கலக்குற கற்பனைத் திறனும் முக்கியம். ஆர்டர்கள் பெறும்போது, அதை முடிக்க ஒரு வாரம் தேவைப்பட்டா, வாடிக்கையாளர்கிட்ட 10 நாட்கள் கெடு கேளுங்க. அப்புறம் ஒரு வாரத்தில் அதை முடிச்சுக் கொடுக்கும்போது, அவங்களுக்கு நம்ம மேல நம்பிக்கையும் நல்ல அபிப்பிராயமும் வரும். மறுபடியும் நம்மைத் தேடி வருவாங்க... நம்மை மட்டுமே தேடி வருவாங்க!'' என்று புன்னகைக்கும் செண்பகவள்ளி, கிராஃப்ட் தொழிலில் கற்றுக்கொள்ள வேண்டிய இதுபோன்ற இன்னும் பல நுணுக்கங்களை ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை 'வழிகாட்டும் ஒலி’யில் பேசுகிறார்... கேளுங்கள்!

044 - 66802912 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். கிராஃப்ட் தொழிலில் முன்னேற கற்றுக்கொள்ளுங்கள்.

''அரசின் சலுகைகளை அறிந்துகொள்ளுங்கள்!''

''பொதுவா, குழந்தை பிறக்குறவரைக்கும் ஒரு வேலைக்குப் போறாங்க. அப்புறம் குழந்தைக்காக வேலையை விட்டுட்டு, அதை வளர்க்குறதில் கவனம் செலுத்துறாங்க. குழந்தைக்கு 6, 7 வயதானதும், பள்ளிக்குச் செல்லும் நேரம் இவங்க ஃப்ரீயா இருக்குறதால, ஏதாவது வேலைக்குப் போகலாமேனு நினைக்குறாங்க. 'ஒருத்தவங்ககிட்ட வேலைக்குப் போறதை விட, நாமளே ஏதாவது ஒரு சுயதொழில் செய்தால், வேலை நேரத்தை நம்ம வசதிப்படி அமைச்சிக்கிறதோட, வீட்டுல இருந்தே பார்த்துக்கலாமே'னு நினைக்கு றாங்க. ஆயிரக்கணக்கான சுயஉதவிக்குழு பெண்களிடம் பேசும்போது, நான் அறிஞ்சுகிட்ட பொது மனஓட்டம்தான் இதெல்லாம்!'' என்று சொல்லும் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் துணைத்தலைவர் அமுதா, இத்தகையோருக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்.

‘‘ஆர்டர்கள் வந்துட்டே இருக்கும்!’’

'' வீட்டில் இருந்து தொழில் செய்ய நினைக்கும் பெண்கள், எங்களிடம் ஆர்வமா பயிற்சிக்கு வர்றாங்க. இதில் படிச்சவங்க, படிக்காதவங்க வேறுபாடு எல்லாம் இல்ல. சொந்தக் காலில் நிற்கத் துடிக்கும் பெண்களுக்கு நிறைய தொழில் பயிற்சிகளை நாங்க வழங்குறோம்.

தொழில் ஆரம்பிக்க மத்திய, மாநில அரசுகள் ஏராளமான உதவித் திட்டங்களையும், சலுகைகளையும் வழங்குது. உதாரணமா, 'குழுமம் மேம்பாட்டுத் திட்டம்’. இதில் ஒரு குழுமமா தொழில் தொடங்கும் பெண்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே அந்தத் தொழிலுக்கு ஒரு கோடி வரை மானியம் தருது. இப்படி இன்னும் பல ஆச்சர்யமூட்டும் திட்டங்களையும் அரசு வழங்குது. இதைப் பத்தின விழிப்பு உணர்வு இல்லாததுதான் வருத்தமான விஷயம். இதையெல்லாம் தெரிஞ்சுக்கிறது, பெண்களை சுயதொழில் களத்தில் தைரியத்தோட இறங்க வைக்கும்!'' எனும் அமுதா, பிப்ரவரி 3 முதல் 9 வரை, சுயஉதவிக் குழுக்கள், சுயதொழில்கள், அரசு சலுகைகள், திட்டங்கள், மானியங்கள் என பல தகவல்களை 'வழிகாட்டும் ஒலி’யில் வழங்குகிறார்... குறித்துக்கொள்ளுங்கள்!

நீங்கள் டயல் செய்யவேண்டிய எண் 044 - 66802912.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism