Published:Updated:

சாந்தினி கபூர்... அன்பின் அடையாளம்!

கே.அபிநயா

சாந்தினி கபூர்... அன்பின் அடையாளம்!

கே.அபிநயா

Published:Updated:

னவரி 14, சாந்தினி கபூர் ஐ.ஏ.எஸ், பெங்களூரில் இருக்கும் தன் மகளுடன் விடுமுறையைக் கொண்டாட சென்றபோது, கார் விபத்தில் சிக்கி இறந்துபோனது, தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'நேர்மையான, உதவும் குணம் கொண்ட, தைரியமான ஒரு பெண் அதிகாரியை இழந்துவிட்டோம்' என்றே தலைமைச் செயலக வட்டாரத்தில் கலங்கிச் சொல்கிறார்கள்.

சாந்தினி கபூர்...  அன்பின் அடையாளம்!

''மத்திய அரசின் கீழ் டெல்லியிலும் வேலை பார்த்திருக்காங்க. சென்னையிலும் நிறைய பதவிகள்ல இருந்திருக்காங்க. நேர்மையான அதிகாரி. 23 வருஷம் சர்வீஸ்ல, எவ்வளவு வேலைச்சுமைக்கு இடையிலும், ரொம்ப ரிலாக்ஸ்டா வேலை பார்ப்பாங்க. கஷ்டத்தில் இருக்குறவங்களுக்கு, சிறப்புக் கவனம் கொடுத்து உதவுவாங்க. தினமும் அவரோட அலுவலகத்துல பர்சனலா உதவி கேட்டு குறைந்தபட்சம் ரெண்டு பேராவது வந்திருப்பாங்க. தன்னோட சொந்த நிலத்தில், ஆதரவற்றவங்க, முதியோர், ஊனமுற்றவர்களுக்கு இல்லம் கட்டணும்கிறது அவங்க கனவா இருந்துச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு பக்கம் இந்த இளகின மனசுனா, இன்னொரு பக்கம் ரொம்ப தைரியசாலி, சாகச விரும்பி. அடிக்கடி மகாபலிபுரம் வரை சைக்கிளிங் பண்ணுவாங்க. பொங்கல் விடுமுறையில் ஓசூர் காடுகள்ல தன் மகளோட டிரக்கிங் போற ஐடியாவுலதான் உறவினர்களோட கார்ல கிளம்பிப் போனாங்க. அப்பதான் இந்த விபத்து!'' என்று ஈரமும் நேசமுமாக சாந்தினி பற்றிப் பகிர்கிறார்கள் சக ஊழியர்கள்!

சாந்தினியின் உதவியாளர் பேசும்போது, ''54 வயசுலயும் அத்தனை ஹார்டு வொர்க். சனி, ஞாயிறுகூட வேலை பார்ப்பாங்க. ஆனா, எங்களுக்கெல்லாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 'ஹேப்பி வீக் எண்ட்!’னு மறக்காம சொல்வாங்க. அவங்களுக்காக நடந்த இரங்கல் கூட்டத்துல 100 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கலந்துகிட்டாங்க. அந்தளவுக்கு எல்லார்கிட்டயும் அன்பா பழகுவாங்க.

தன் அப்பா, அம்மா மேல அவங்க அவ்வளவு மரியாதையா இருக்குறதைப் பார்த்துதான், நானும் என் பெற்றோர்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு கத்துக்கிட்டேன். தன் பொண்ணுகிட்ட, அத்தனை பணிச்சுமைக்கு இடையிலும் அவங்க செலவழிக்கிற நேரத்தைப் பார்த்து தான், குழந்தை வளர்ப்பை தெரிஞ்சுக்கிட்டேன்!

தமிழ்நாடு முதல்வர் அறிவிக்கிற சிறப்பு சலுகைகளை அமல்படுத்துவது, கண்காணிப்பது பெரிய வேலை. இந்த ரெண்டரை வருஷமா நிதானமாவும் தெளிவாவும் பொறுப்போடயும் இந்தப் பணியைச் செய்துட்டிருந் தாங்க சாந்தினி மேடம். அவங்களோட மறைவு,

பர்சனலா எனக்கு பெரிய இழப்பு'' என்றார் கலங்கிய கண்களுடன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism