Published:Updated:

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

ஷாலினி நியூட்டன்

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

ஷாலினி நியூட்டன்

Published:Updated:

அலறிய பெண்!

ஹிட்ஸ்...  ஹிட்ஸ்...

பிரிட்டிஷ்-கொலம்பியாவில் ஒரு பெண் தாமதமாக வந்ததால், தான் செல்லவிருந்த படகைத் தவறவிட்டார். அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாதவராக அவர் கத்திக்கொண்டே அலறி ஓட, இதை வீடியோவாக முகநூலில் வெளியிட, பற்றிக்கொண்டது நெட். பலரும் கலாய்த்து கட்டையைக் கொடுக்கத் துவங்கிவிட்டனர். படகை தவறவிட்டதற்காக ஒரு பெண் இப்படியா அலறுவார் என கேள்விகளும் கிளம்ப, வைரலோ வைரல் ஆகியுள்ளது வீடியோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எதையெல்லாம் வைரல் ஆக்குறாய்ங்க!

ஹிட்ஸ்...  ஹிட்ஸ்...

பை சேலஞ்ச்!

கூகுளின் முன்னாள் மேலாளர், முகநூலின் இப்போதைய முதல் பெண் முதன்மை தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப அதிகாரி என பல முகங்கள் கொண்டவர்... ஷெரில் சேண்ட்பெர்க். 'ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ போல் அடுத்தகட்ட விழிப்பு உணர்வை, 'ஸ்கூலா’ என்ற அறக்கட்டளைக்காக, முகநூல் மூலம் துவக்க உதவியுள்ளார் ஷெரில். தற்போது இணையத்தில் #PassthebagChallenge என்ற இந்த வார்த்தை பிரபலமாகி வருகிறது. 'ஸ்கூலா’ அறக்கட்டளையிடம் ஒரு பையை வாங்கி, அதில் தாங்கள் பயன்படுத்தாத உடைகள், பொருட்களை நிரப்பித் தர வேண்டும். அதை ஏழைப் பள்ளி மாணவர்களிடம் அறக்கட்டளை சேர்க்கும். இந்த சேலஞ்சை முகநூலில் தானே துவக்கி வைத்துள்ளார் ஷெரில். இந்த சேலஞ்சை தேசத்துக்கேற்றாற்போல் அவரவர் பையில் நிரப்பி நேரடியாகவும் அளித்து இந்த சவாலை செய்யத் துவங்கியுள்ளனர்.

சூப்பர்!

1,000 பட சாதனை!

ஹிட்ஸ்...  ஹிட்ஸ்...

'அன்னக்கிளி’ படம் மூலம் இசைப் பயணத்தை துவக்கிய இளையராஜா, இப்போது பாலாவின் இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடிப்பில் 'தாரை தப்பட்டை’ திரைப்படத்தின் இசையமைப்பு மூலம், 1,000 படங்களைக் கடந்துள்ளார். 1001வது படம், அமிதாப், தனுஷ் நடிக்கும் 'ஷமிதாப்'. இசைஞானியின் இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில், மும்பையில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது 'ஷமிதாப்' படக்குழு. ரஜினி, கமல், ஸ்ரீதேவி உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு அமிதாப்பே அழைப்பு விடுக்க, சுவாரஸ்யமாக நடந்தது விழா. இளையராஜாவுக்கு பொன்னாடை அணிவித்து, மலர்கொத்துகள் அளித்த ரஜினி, கமல் மற்றும் அமிதாப்... இசைஞானியுடனான தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டது ஹைலைட்!

இசையோன்!

நம்பர் 1... நம்பர் 2

ஹிட்ஸ்...  ஹிட்ஸ்...

49 வயதிலும் இளமையுடன் பாலிவுட்டில் தனக்கென ஓர் இடத்தை தக்கவைத்துள்ளார் ஷாருக். 'தில் சே’, 'தில் வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’, 'குச் குச் ஹோத்தா ஹே’, 'ரப்னே பனாதி ஜோடி’ என பல ஹிட் படங்களைக் கொடுத்த ஷாருக்குக்கு, இந்திய அளவில் ரசிகர்கள் அதிகம். தற்போது 11 மில்லியன் ரசிகர்களைப் பெற்று, அதிக ரசிகர்களைக் கொண்ட இரண்டாவது இந்திய நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஷாருக்.

12 மில்லியன் ரசிகர்களுடன் முதல் இடத்தில் இருப்பவர்... அமிதாப்! அமீர்கான்-10.8 மில்லியன், சல்மான்கான்- 10.2 மில்லியன், தீபிகா படுகோன்- 9.13 மில்லியன், ப்ரியங்கா சோப்ரா- 8.51 மில்லியன், ஹிருத்திக் ரோஷன்- 8.22 மில்லியன், அக்‌ஷய் குமார்- 7.27 மில்லியன் என தொடர்கிறது இந்த பட்டியல்!

எட்டு பேருக்கு பிறகும் கூட ஐஸ்வர்யா ராயைக் காணோமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism