Published:Updated:

காதல் டிட்பிட்ஸ்!

காதல் டிட்பிட்ஸ்!

காதல் டிட்பிட்ஸ்!

காதல் டிட்பிட்ஸ்!

Published:Updated:

தயமே... இதயமே!

காதல் டிட்பிட்ஸ்!

தயம்தான் காதலின் சின்னம். இதயத்தில் ஆன்மா குடிகொண்டிருப்பதாக பண்டைக்கால மக்கள் நம்பினார்கள். பலர் இதயத்தில்தான் அறிவும், உணர்ச்சியும் இருப்பதாக நம்பினார்கள். இதயத்தில்தான் உண்மை குடிகொண்டிருப்பதாக நம்பியவர்களும் உண்டு. சிவப்பு நிற இதயம், காதலின் இருப்பிடம் என கிரேக்கர்கள் நம்பினார்கள். அதனால்தான் மன்மத அம்பு இதயத்தில் பாய்ந்தால் தன்னிலை இழந்து காதல் வசப்பட்டுவிடுவதாக நினைத்தார்கள். இதுதான் ஹார்ட் சின்னத்தின் ஹாட் மேட்டர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லப்டப்... லவ்டப்!

காதல் டிட்பிட்ஸ்!

அய்யோ... ஐ லவ் யூ!

'ஐ லவ் யூ’ என்றால் மனசுக்குள் மழையடிக்கும். ஆனால் 'ஐ லவ் யூ’ என்றாலே திகிலடித்த ஒரு சம்பவமும் உண்டு. 'ஐ லவ் யூ’ எனும் ஒரு வைரஸ் 2000-ம் ஆண்டில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட  கம்ப்யூட்டர்களைப் பாதித்து செயலிழக்க வைத்துவிட்டது. 'ஐ லவ் யூ’ என்று தலைப்பிட்டு எந்த மெயில் வந்தாலும் மக்கள் அலறோ அலறென்று அலறினார்கள். கம்ப்யூட்டர் வைரஸ் வரலாற்றில் இந்த 'ஐ லவ் யூ’ வைரஸ் நிரந்தர இடத்தையும் பிடித்துவிட்டது!

காதல் டிட்பிட்ஸ்!

முன்னோடிகள்!

 லகக் காதலர்கள், சரித்திரக் காதலர்கள் என்றெல்லாம் சொல்வார்களே... அந்தப் பட்டியலில் முன் வரிசையில் வருவது இந்த ஜோடிகள்தான்... ரோமியோ  ஜூலியட், லைலா  மஜ்னு, கிளியோபாட்ரா  மார்க் ஆண்டனி, ஷாஜஹான்  மும்தாஜ். சினிமா காதலர்கள் என்றால், பட்டியலுக்கு முற்றுப்புள்ளியே இல்லை!

காலமெல்லாம் காதல் வாழ்க!

கேண்டில் காதல்!

காதலர் தினம் என்றால் கேண்டில் லைட் டின்னர் இல்லாமலா?! மங்கலான மெழுகுவத்தி வெளிச்சத்தில் நேசம் வழியும் கண்களுடன் காதலர்கள் டின்னர் சாப்பிடுவது இந்த நாளின் முக்கிய அம்சம். கடற்கரை உணவகங்கள், கப்பல் ரெஸ்டாரன்ட்டுகள், மொட்டை மாடி ரெஸ்டாரன்ட்டுகள் ஆரம்பித்து தற்போது பல லோக்கல் ரெஸ்டாரன்ட்டுகளும் கேண்டில் வெளிச்சத்தில் மூழ்கி முத்தெடுக்கின்றன... இந்த வகை டின்னர்களால்!

ஒளியிலே தெரிவது தேவதையா?!

பாரத் பியார்!

ந்தியாவுக்கும் காதலுக்கும் இடையே நெருக்கமான காதல் உண்டு! உலகையே பிரமிக்க வைக்கும் காதல் சின்னமான தாஜ்மஹால் இந்தியாவில் இருக்கிறது. உலகத்தின் முதல் செக்ஸ் கல்வி நூலான காமசூத்ராவின் பிறப்பிடமும் இந்தியாவே! இருந்தாலும் காதலர் தினத்தன்று பெருமளவில் எதிர்ப்பு கிளம்புவதும் நம் நாட்டில்தான்! அந்தக் களேபரங்களையும் தாண்டி காதலர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னணியில் இருக்கிறது!

இது லவ் இந்தியா!

மியாவ்... மியாவ் காதல்!

காதலர் தினப் பரிசை யாரெல்லாம் பெறுவார்கள்? காதலனும், காதலியும் என்கிறீர்களா..? கூடவே, செல்லப் பிராணிகளும்! மேலைநாடுகளில் 3% செல்லப் பிராணிகள் தங்கள் எஜமானர்களிடமிருந்து காதலர் தினப் பரிசுகளைப் பெற்றுக்கொள்கின்றனவாம்!

மியாவ் மியாவ்... வவ் வவ் காதல்!

தொகுப்பு: பொன்.விமலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism