
தாய்லாந்தில் வசிக்கும் பிரியா நந்தகுமார், சென்ற இதழில் க்ளே கிராப்ஃட் கற்றுத் தந்தார். தொடர்ச்சியாக, பிங்க் கார்னேஷன் ஃப்ளவர் செய்து காட்டுகிறார் இந்த இதழில்!
''பார்க்கவே பிளசன்ட்டாக இருக்கும் இந்த கார்னேஷன் ஃப்ளவர், ஹோட்டல் வரவேற்பறைகள், கிஃப்ட் ஷாப்கள், பொக்கே கடைகள்னு உங்களுக்கு ஆர்டர்களைக் குவிச்சுட்டே இருக்கும்'' என்றபடி, அதற்கான பொருட்களை எடுத்து வைத்து, விரல்களுக்கு வேலை கொடுக்க ஆரம்பித்தார் பிரியா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவையான பொருட்கள்:
ஏர் ட்ரை க்ளே, கட்டர், வெய்னர், ஃப்ரில்லிங் டூல், காட்டன் பட், ஃபெவிக்கால், ஆயில் கலர்ஸ், வாசலின், பாலித்தீன் கவர், பிரஷ், ரோலர், ஏர் டைட் கன்டெய்னர், கத்தரிக்கோல்.
செய்முறை:
படம் 1: தேவையான அளவு க்ளேயை எடுத்து அதில் சிறிதளவு வெள்ளை ஆயில் கலரும், அத்துடன் எந்த நிறத்தில் பூக்கள் வேண்டுமோ அந்த கலரையும் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
படம் 2: கலந்த க்ளேயில் சிறிது எடுத்து, பாலித்தீன் கவர் நடுவே வைத்து ரோலர் மூலம் மெலிதாகத் தேய்த்துக்கொள்ளவும்.
படம் 3: ரவுண்ட் கட்டரால், படத்தில் உள்ளபடி கட் செய்யவும். மீதமுள்ள க்ளேயை உடனே ஒரு கவரில் வைத்து, ஏர்டைட் கன்டெய்னரில் வைத்து மூடிவிடவும்.

படம் 4: கட் செய்த க்ளேயின் ஓரத்தை படத்தில் உள்ளது போல் ஸ்மூத் செய்து, கத்தரிக்கோலால் நுணுக்கமாகக் கத்தரிக்கவும்.
படம் 5: ஃபிரில்லிங் டூல் மூலம் ஓரப்பகுதியை படத்தில் உள்ளதுபோல் ஃப்ரில் செய்யவும்.
படம் 6: அதை கோன் போல் மடிக்கவும். இதேபோல் 6 முதல் 7 இதழ்கள் செய்துகொள்ளவும்.
படம் 7: காட்டன் பட்டின் மேல் பகுதியில் ஃபெவிக்கால் தடவி, ஒவ்வொரு இதழாக படத்தில் காட்டியுள்ளபடி அடுக்காக ஒட்டவும்.
படம் 8: இலைகள் மற்றும் பூவின் அடிப்பாகம் (calyx) செய்வதற்குத் தேவையான அளவு க்ளே எடுத்து, அதில் பச்சை நிற ஆயில் கலர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். ரோலர் மூலம் தேய்த்து, கட்டர் உபயோகித்து இலைகளை கட் செய்து ஓரத்தை ஸ்மூத் செய்யவும்

படம் 9: கட் செய்த இலைகள் மற்றும் பூவின் அடிபாகமான கேலிக்ஸை வெய்னரில் வைத்து அழுத்தி படத்தில் உள்ளபடி அச்சு எடுத்துக் கொள்ளவும்.
படம் 10: பூவின் கீழ்ப்பகுதியில் நீளவாக்கில் க்ளே வைத்து, அதன் கீழ் ஒவ்வொன்றாக கேலிக்ஸை அடுக்கிக்கொள்ளவும்.
படம் 11: பச்சை கலர் கலந்த க்ளேயை உபயோகித்து தண்டு செய்யவும்.
படம் 12: இலைகளைத் தண்டு பகுதியில் ஒட்டி முடிக்கவும்.
செய்து முடித்த பிரியா, "600 ரூபாய் முதல், 1,000 ரூபாய்க்கும் மேல்... இந்த கார்னேஷன் ஃப்ளவரை நம் கற்பனை மற்றும் கலை நேர்த்திக்கேற்ப விலை வைத்து விற்கலாம்!'' என்று சொன்னார்.
அடுக்கான ஆர்டர்கள் பெற அட்வான்ஸ் வாழ்த்துகள்!
கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...