Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

ஓவியங்கள்: சேகர்

குட்டீஸ் குறும்பு!

ஓவியங்கள்: சேகர்

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு!

 200   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'விட்டா... போயிடும்!’

குட்டீஸ் குறும்பு!

ன் கணவர் வேலை விஷயமாக கோவைக்கு கிளம்பிக்கொண்டிருந்தார். அவரிடம், "வை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சரியாக 2.30-க்கு சென்ட்ரலில் இருந்து கிளம்பும்'' என்று கூறினேன். 'அடுத்த டிரெயின் எப்போது’ என்ற அர்த்தத்தில், "அத விட்டா..?'' என அவர் கேட்க... அருகே நின்று கொண்டிருந்த எங்கள் 5 வயது சுட்டிப் பெண் நந்தினி, ''டாடி, அத விட்டா போய்டும். சீக்கிரம் கிளம்புங்க!'' என்று பதறியபடியே கூறினாள். நானும் கணவரும் வெகுநேரம் சிரித்தோம்.

- கே.தமிழரசி, போரூர்

'சூப்பர் இன்டெலிஜென்ட் தாத்தா!’

ன் கணவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருந்தேன். பரிசோதனை செய்த பிறகு, ரத்த அழுத்தத்தை ’150/100’ என்ற குறியீடு மூலம் பிரிஸ்கிரிப்ஷனில் கொட்டை எழுத்தில் எழுதிவிட்டு, சில மாத்திரைகள் எழுதித் தந்தார்.

குட்டீஸ் குறும்பு!

வீட்டில் நுழைந்ததும், ”பாட்டி... எங்க போயிருந்தீங்க?'' என்று கேட்டாள் எங்கள் செல்லப் பேத்தி. ”உங்க தாத்தாவுக்கு டெஸ்ட் எடுக்கப் போயிருந்தோம்'' என்றேன்.

”இது என்ன?'' என்றபடி பிரிஸ்கிரிப்ஷனை எடுத்து ஆராய்ந்தவள்... பிளட் பிரஷர் பற்றி குறிக்கப் பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு, ”தாத்தா, அதென்ன உங்க டெஸ்ட்ல மட்டும் நூத்துக்கு நூத்தம்பது மார்க்கெல்லாம் போடு றாங்க. எங்க ஸ்கூல் டெஸ்ட்ல போடமாட்டேங்றாங்க!'' என்று நொந்து கொண்டாள்.

சிரித்து மாளவில்லை எங்களுக்கு!

- ஆர்.சாந்தா பாய், சென்னை-83

'தட்கல்’ பூஜை!

ருமுறை எனக்காக ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் புக்கிங் செய்துகொண்டிருந்தான் என் மகன். ''தட்கல் டிக்கெட்தான் இருக்கு. பரவாயில்லை... அதையே பண்ணிடறேன்'' என்றான். ''தட்கல்னா என்னப்பா?'' என்றாள் பேத்தி. ''அவசரமா ஊருக்கு போக வேண்டியவங்க, கூட காசைக் கொடுத்து புக் பண்ணினால் ஈஸியா டிக்கெட் கிடைக்கும்'' என்று என் மகன் விளக்கியதும்... புரிந்தாற்போல தலையை ஆட்டினாள்.

குட்டீஸ் குறும்பு!

ஒரு வெள்ளியன்று சாமிக்கு நெய் விளக்கேற்றியபடி இருந்தேன். ”தினமும் எண்ணெயில் விளக்கேத்து வீங்க... ஏன் பாட்டி இன்னிக்கு நெய்யில் ஏத்தறீங்க?'' என்று கேட்டாள் பேத்தி. ''இன்னிக்கு வெள்ளிக் கிழமை. எண்ணெயைவிட நெய் ஒஸ்தியாச்சே! நெய் விளக்கு ஏத்தி லட்சுமி பூஜை செஞ்சா நாம நினைச்சது சீக்கிரமா நடக்கும்'' என்றேன். ''ஓ... இது தட்கல் பூஜையா?!'' என 'பளிச்’ என்று அவள் கேட்டதும், வீட்டார் அனைவரும் சிரிக்க... எனக்கு சற்று வெட்கமாக போய்விட்டது.

- ஆர்.மாலதி, ஸ்ரீபெரும்புதூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism