Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

 ஓவியங்கள்: சேகர்

அனுபவங்கள் பேசுகின்றன!

 ஓவியங்கள்: சேகர்

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

 200  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேதனை தந்த வெட்டிப் பேச்சு!

அனுபவங்கள் பேசுகின்றன!

றவுக்காரப் பெண்ணுக்கு இரு ஆண் குழந்தைகள். அவள் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், அனைத்து வெளிவேலைகளையும் அவள்தான் கவனிக்க வேண்டும்.  குழந்தைகளை முடி வெட்டுவதற்காக சலூனுக்கு அழைத்துப் போயிருந்தாள். வெளியே நின்றிருந்த நான்கைந்து வாலிபர்கள், ''டேய்... பொம்பளைங்க எந்த வேலையைச் செய்யணும்ங்கிற விவஸ்தையே இல்லைடா! எல்லா இடத்துக்கும் வந்துடறாங்க'' என்றும், இன்னும் சொல்லக் கூடாத வார்த்தை களையும் பேசி கேலி செய்துள்ளனர். அவள் மிகமிக வருத்தத்துடன் திரும்பி விட்டாள்.

வெட்டிப் பேச்சு வீணர்களே...  இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் திருந்தவே மாட்டீர்களா?

- ஆர்.வனஜா, போளூர்

'லைக்’ போடவைத்த லைப்ரரி!

அனுபவங்கள் பேசுகின்றன!

துரை மாவட்ட மைய நூலகம் சென்றிருந்தேன். பெண்கள், சிறுவர்கள் பகுதிக்குச் சென்றபோது, நான் கண்ட காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் பொதுவாக இருந்த நூலகம், குழந்தைகளுக்காக தனியே பிரிக்கப்பட்டுள்ளது. அழகான கார்ட்டூன் படங்கள் வரவேற்பு சொல்ல, உள்ளே நுழைந்தவுடன் குழந்தைகள் படிப்பதற்கும், செஸ், கேரம் போன்ற இண்டோர் கேம்ஸ் விளையாடுவதற்கும் வசதி செய்யப்பட்டிருந்தது. சந்தோஷமாக ஓவியம் வரைந்தும், புத்தகங்கள் படித்துக்கொண்டும் இருந்த குழந்தைகளைப் பார்த்தபோது மனதுக்கு நிறைவாக இருந்தது. விடுமுறை நாட்களில் குழந்தைகள் நல்ல முறையில் பொழுதைக் கழிப்பதற்கு ஏற்பாடு செய்த நூலகத்தைப் பாராட்டத்தான் வேண்டும். மற்ற நூலகங்களும் இதைப் பின்பற்றலாமே!

- என்.உஷாதேவி, மதுரை

'இடி ராஜா’ எருமை!

அனுபவங்கள் பேசுகின்றன!

லுவலகத்துக்கு பஸ்ஸில் பயணம் செய்யும் என் சிநேகிதி ஒருத்தியின் அனுபவம் இது. ஒரு நாள் 'இடி ராஜா’ ஒருவன் பக்கத்தில் நின்றுகொண்டு, டிரைவர் பிரேக் போடும்போதெல்லாம் மேலே இடித்திருக்கிறான். முறைத்துப் பார்த்தும் பலனில்லை. வேறு இடத்துக்கு இவள் நகரமுடியாத அளவுக்கு கூட்ட நெரிசல்! உடனே ஒரு ஐடியா செய்தாள். தன் செல்போனை எடுத்து சிநேகிதியிடம் பேசுவது போல், ''ஆ... பஸ்ல வந்துட்டிருக்கேன். இன்னும் 10 நிமிடத்தில் வந்துருவேன். இங்கே ஒரு எருமை என் மேல உரசிட்டே இருக்கு... அதான் கடுப்பா இருக்கு!'' என்று உரக்கப் பேச, பஸ்ஸில் இருந்தவர்கள் அவனைத் திரும்பிப் பார்த்திருக்கிறார்கள். இதைக் கண்ட அந்த 'எருமை’ நைஸாக வேறு இடத்துக்குப் போய்விட்டது. எப்படி என் சிநேகிதியின் ஐடியா!

- சம்பத் குமாரி, திருச்சி 

கைகொடுக்கும் 'எஸ்.எம்.எஸ்!’

ரவு நேரப் பேருந்தில் குன்னூரிலிருந்து சென்னைக்குச் சென்று கொண்டிருந்தேன். பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்மணியும் என்னைப் போல் தனியே அமர்ந்திருந்தார். பஸ் கிளம்பியதும் அந்தப் பெண்மணியை ஏற்றிவிட்டுச் சென்ற கணவர், மனைவிக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். அதை என்னிடம் காட்டினார் அவர். 'நீ அமர்ந்துள்ள பஸ்ஸின் நிறம் சாம்பல். எண் TN 01 AJ.....' என்று அதில் இருந்தது.

அனுபவங்கள் பேசுகின்றன!

'’இது எதற்கு?'' எனக் கேட்டேன்.

''பேருந்து இடையில் நிறுத்தப்படும்போது பயணிகள் சிறுநீர் கழிக்கச் செல்வர். மீண்டும் வரும்போது ஒரே மாதிரியான பேருந்துகள் வரிசையாக நிற்கும். இருட்டில் எந்தப் பேருந்தில் ஏறுவது எனக் குழப்பமாக இருக்கும். பஸ் ஏறும் அவசரத்தில் நம்மால் பஸ் நம்பரைக் குறிக்க இயலாது. எனவே, நான் தனியாகப் பயணிக்கும்போது, இதுபோன்ற எஸ்.எம்.எஸ். கொடுத்துவிடுவார்'' என்றார்.

'அட! இது நல்ல யோசனையாக இருக்கிறதே’ என வியந்தேன்.

- ஆர்.சந்திரிகா, குன்னூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism